(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“இல்லை இல்லை நீங்களும் உட்காருங்க, மீட்டிங் முடிச்சிட்டு ஒண்ணாவே போலாம்” என சொல்ல கைலாசமோ

   

”தேவா இரு கொஞ்ச நேரம் முடிஞ்சிடுச்சி. பாரு” என சொல்லவும் அவனோ

   

”சரி நான் என் வீடு கட்டற வேலைக்கு போறேன் பாதியிலேயே விட்டுட்டு வந்துட்டேன்” என சொல்ல சரண் தடுத்தான்

   

”இல்லை ஒரு நிமிஷம் இருங்க” என சொல்ல தேவா அங்கிருந்த சேரில் அமர்ந்துக் கொண்டான். சரணோ தேவாவை பார்க்க அவனது கள்ளச்சிரிப்பில் அச்சப்பட்டவன் உடனே கைலாசத்திடம்

   

”எப்ப இருந்து கன்ஸ்டர்கஷன் வேலையை ஆரம்பிக்கலாம்” என கேட்க காலேஜ் ஓனரோ

   

”அடுத்த வாரம் வர்ற வெள்ளிக்கிழமையே பூமி பூஜை போடலாமே, அதுக்குள்ள இந்த ப்ளான் வைச்சி எவ்ளோ சிமெண்ட் ஜல்லி கல்லு வேணும்னு சொல்லிட்டா நான் மொத்தமா பணம் கொடுத்துடுவேன்”

   

“இல்ல கட்ட கட்டதான் தேவைகள் அதிகமாகும்” என கைலாசம் சொல்ல அதற்கு விசுவும்

   

”ஆமாம் ஒரேடியா பணத்தை கொடுத்தா எப்படி அது சரியா வராது, இப்போதைக்கு அஸ்திவாரம் போடனும் அதுக்கு இந்த இடத்தை முழுசா 10 அடி தோண்டனும் 4 அடுக்கு ஹாஸ்டல்ங்கறதால அஸ்திவாரம் ஸ்ட்ராங்கா போட்டாதான் சரியா வரும். 

   

இந்த அஸ்திவாரத்திற்காக மண்ணை தோண்டி சரியா பேஸ்மென்ட் போட்டு முடிக்கவே நிறைய பொருள் தேவைப்படும், இதுக்கே 1 மாசமாவது ஆகும் அதனால இப்போதைக்கு ஒரு 10 லட்சத்துக்கு செக் கொடுங்க, அதை வைச்சி ஆரம்பிக்கலாம்” என சொல்ல ஓனரும் ஒப்புக் கொண்டு அடுத்த நொடியே செக்கில் சைன் போட்டு கைலாசத்திடம் ஒப்படைத்தார்

   

”சரி அப்ப நாளைக்கே இந்த இடத்தை தோண்ட போறீங்களா” என ஓனர் கேட்க அதற்கு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.