”தம்பி தேவா பாருப்பா நீயே இந்த நியாயத்தை கேளு, உள்ளுர்காரனுக்கு மதிப்பு அளிக்காம வெளியூர்க்காரனை உள்ள விட்டா இந்த ஊர்ல நம்மளை யார் மதிப்பாங்க சொல்லுப்பா”
“இதனால நம்மள மாதிரியிருக்கற ஆளுங்களுக்கு வேலை கிடைக்காம போகும்ல, எல்லாரும் வெளியூர்க்காரங்களை பிடிச்சா நாம என்னாகிறது” என சொல்ல அதற்கு அவனோ
”அந்த பையன் வந்தது வெறும் ப்ளான் வரைஞ்சி தர்றதுக்குத்தான் அவனே கட்ட வரலை. இந்த இடத்தை கட்ட வந்தது என் அப்பாவும் சித்தப்பாவும்தான், அது எப்படி நான் வெளியூர்க்காரனை உள்ள விடுவேன்னு நீங்க நினைச்சீங்க சொல்லுங்க” என தேவா வீட்டில் தான் கேட்ட விபரங்களை வைத்து அவர்களைப் பார்த்துக் கேட்க அவனது பேச்சைக் கேட்டு குழம்பினார்கள் அனைவரும் அதில் அந்த 7 பேரில் ஒருவன்
”என்னப்பா சொல்ற ஆனா காலேஜ் ஓனர் அந்த வெளியூர்க்காரனுக்குதான் வேலை தர்றதா சொன்னாரே”
“வேலை தர்றதுன்னா கட்டறதுக்கு இல்ல ப்ளான் வரைஞ்சி தர்றதுக்கு”
”என்னப்பா சொல்ற புரியலையே” என கேட்க தேவா அவர்களைப் பார்த்து
”அமைதியா இருங்க நான் சொல்றேன், இந்த காலேஜ் ஓனர் என்ன சொன்னார்னா ஹாஸ்டல் கட்டிடம் மாடர்னா இருக்கனும், அழகா இருக்கனும், நவீன வசதிகளோட இருக்கனும், பாரின் டைப்ல வேணும்னு கேட்டாரு. அப்படி ஒரு ஹாஸ்டல் கட்டற ப்ளான் எங்ககிட்ட இல்லை. அதான் பாரின்ல இருந்த இவனை இங்க வரவழைச்சி அவன் மூலமா ப்ளான் வரைய வைச்சிருக்காங்க. அவ்ளோதான்
அவன் கட்ட வரலை வெறும் இன்ஜினியர் வேலை பார்க்க வந்தவன், என்ன அவனுக்கு கொஞ்சம் ஷேர் ஒதுக்கியிருக்காங்க அவ்ளோதான் மத்தப்படி இந்த இடத்தை கட்டப்போறது என் அப்பாவும் சித்தப்பாவும்தான், அவங்களுக்குள்ள மீட்டிங் முடிஞ்சி டீலிங்கும்