“அதுக்கில்லைம்மா அந்த வீடு முடிச்சிட்டா 1 வாரம் லீவு அதான்”
“சரி ஆபிசுக்கு வரட்டுமா வேணாமா”
“இல்லை வேணாம் 2 நாளுக்கு வேணாம் என்னால ஆபிசுக்கு வரமுடியாது நீ என்ன பண்ற வீட்லயே அழகா ப்ளான் போடு. நான் ஒரு இடம் சொந்தமா வாங்கி வைச்சிருக்கேன். அதுல நான் எனக்காக வீடு கட்டி என் பொண்டாட்டியோட வாழலாம்னு இருக்கேன். சொல்றது புரியுதா”
“புரிஞ்சிடுச்சி நான் வேணா நம்ம வீட்டுக்கு ப்ளான் போடவா” என சந்தோசமாக கீர்த்தி சொல்ல அதற்கு தேவா
“தாராளமா போடு”
”என்ன அளவு“
“ம் அதுவா அது 100 அடி நீளம் 40 அடி அகலம்”
“பெரிய இடமா”
“ஆமாம் காலி ப்ளாட் ஆனா அவ்ளோ பெரிசா வீடு கட்டலைன்னா என்ன சுத்திலும் தோட்டம் வைச்சிக்கலாம் நடுவில வீடு அற்புதமா இருக்கும்” என சொல்ல அவளும் உடனே மனதில் கற்பனை செய்துப் பாரத்தாள்
”எனக்கு இப்பவே ஒரு வீடு நினைவுக்கு வருது நான் கிளம்பறேன் 2 நாள்ல அழகா ப்ளான் போட்டுக் கொண்டு வந்து உங்க கிட்ட தரேன்” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட தேவா தாஸுடன் மீண்டும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு சரண்யாவை அழைத்துக் கொண்டு ஓட்டல் வாசலில் விட்டுவிட்டு நேராக தான் கட்டும் வீட்டிற்குச் சென்றான்.
அங்கு சரியாக 10 மணிக்கெல்லாம் மீட்டிங் ஆரம்பமானது. காலேஜ் பக்கத்திலேயே