“நான் வந்தா மட்டும் என்ன செய்வேன்”
“என்னவா உன் மேல அவங்களுக்கு மரியாதை அதிகம், நீயிருந்தா அவனுங்க வாலாட்ட மாட்டானுங்க”
“அப்ப ஒண்ணு பண்ணுங்க பிரச்சனை வர்றப்ப எனக்கு போன் பண்ணுங்க, அந்த இடத்துக்கு பக்கத்து தெருவிலதான் நான் வீடு கட்டிக்கிட்டு இருக்கேன். உடனே வந்துடுவேன் இப்ப என்னால வரமுடியாதுப்பா” என சொல்ல அவரும் சரி என ஒப்புக் கொண்டு
”நாங்க ஹாஸ்டல் கட்டற இடத்துக்கு போறோம், அந்த சரண் வந்துடப் போறான்” என சொல்லிக் கொண்டே அவர்கள் செல்ல சரண்யா தேவாவிடம்
”ஏங்க” என அழைத்தாள்
”என்ன உன் அண்ணாவை பார்க்கனுமா இப்ப”
“ஆமாம்”
“நான் கோயிலுக்குப் போயிட்டு வரேன் அப்புறமா உன்னை கொண்டு போய் விடறேன்” என சொல்ல
”நானும் கோயிலுக்கு வராலாமா”
“வேணாம்” என்றான்
”சரி நீயே போய் வா சீக்கிரமா வா“
“எதுக்கு நீயும் மீட்டிங்ல கலந்துக்கப் போறியா”