“நான் தாத்தாகிட்ட வளர்ந்தேன் அது அப்பாவுக்கு பிடிக்காது”
“ஓ சரி சரி நீ ஒரு நாள் என் வீட்ல தங்கனும்பா” என அவர் சொல்ல
”கண்டிப்பா அதான் என் தங்கச்சி உங்க வீட்ல தங்கியிருக்காளே”
“என்ன சொல்ற யாரை சொல்ற?”
“அதான் என் தங்கச்சி சரண்யா நீங்கதானே அவளை தங்க வைக்கறேன்னு அப்பாட்ட சொன்னீங்க மறந்துட்டீங்களா”
“ஓ அட ஆமாம் அப்படியா சரி சரி” என அவர் குழம்பித் தவித்தார்.
”என்னாச்சி ஏதாவது பிரச்சனையா”
“இல்லையே அப்படியெல்லாம் இல்லை” என சொல்ல அந்நேரம் அன்று வீட்டிற்கு முன் தகராறு செய்ய வந்த 7 பேரும் வண்டிகளில் வந்து இறங்கினார்கள். அவர்களைக் கண்டதும் மாமன் சேதுப்பிள்ளையோ தேவாவிற்கு அவசரமாக போன் செய்து வரவழைத்தான்.
அவன் வருவதற்குள் அந்த 7 பேரும் சேர்ந்து வந்திருந்த சரணிடம் சண்டை போட்டார்கள். செக்யூரிட்டிகள் தடுத்தும் அவர்கள் சண்டையில் இறங்கினார்கள். சரண் சொல்வதை அவர்கள் கேட்கவிரும்பவில்லை. கைலாசநாதனும் அவனது தம்பியும் கூட அவர்களை அடக்க முயன்று தோற்றார்கள். காலேஜ் ஓனரும் ஸ்தம்பித்துவிட்டார்.
பிரச்சனை முற்றி சரணை அடிக்கும் அளவுக்கு வந்தார்கள். செக்யூரிட்டிகளாலும் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் போனதைக் கண்டு சரண் பயந்தான். அதற்குள் தேவா வந்து நிப்பாட்டினான் அவர்களை
”போதும் நிறுத்துங்க என்ன சண்டை இங்க” என அவன் ஒரு கத்தல் கத்த அங்கிருந்த அனைவரும் அமைதியானார்கள். வந்த 7 பேரும் தேவாவிடம் பஞ்சாயத்தை வைத்தார்கள்