பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.
தாஸ் தேவா இருவரும் அவசரமாக சாப்பிட்டு நேராக கன்ஸ்ட்ரக்ஷன் ஆபிஸ் சென்றார்கள். அங்கு அவர்கள் வருவதற்கு முன்பே கீர்த்தனா வந்திருந்தாள். அவள் தான் வரைந்த ப்ளான் அனைத்தையும் அழகாக விரித்து வைத்திருந்தாள் தேவா வரவும் ஆசையாக முன்னே வந்தவள் தாஸ் வரவும் சட்டென அவனிடம் தாவினாள்
”அண்ணா பாருங்கண்ணா நான் வரைஞ்சிட்டேன்” என சொல்ல தாஸ் சிரித்துக் கொண்டே வந்து அவளுடைய வரைபடங்களை பார்த்தான். புரிந்ததோ புரியவில்லையே ஆனாலும் நல்லாயிருக்கு என தலையாட்டியவன் தான் கொண்டு வந்திருந்த புதுசெயினை அவளின் கையில் தந்து போட்டுக்கொள்ளுமாறு சொல்ல அவளோ தயங்கினாள்
”ஆனா எனக்கு எதுக்கு இது” என அவள் கேட்க அவனோ
”போட்டுக்க” என சைகை செய்ய அவள் அமைதியாக இருக்கவும் தாஸ் தேவாவை பார்க்க அவன் உடனே அந்த செயினை வாங்கி அவளின் கழுத்தில் போடவும் அதிர்ந்தாள்
”என்ன நீங்க இப்படி பண்ணிட்டீங்க”
“ஏன் என்னாச்சி?”
“இப்படியெல்லாம் செயின் போடக்கூடாது தப்பு”
என சொல்ல அவன் சிரித்தான்
”செயின்தானே தாலியா கட்டினேன் வா உன் ப்ளான் காட்டு சீக்கிரம்”
“என்ன அவசரம்?”
“ஒரு இடத்தில் வீட்டு வேலை நடக்குதும்மா அதை முடிக்கனும் அதான் காட்டு காட்டு” என சொல்ல அவளும் 3 ப்ளான்களை காட்டினாள். அவனும் அதை அனைத்தும்