(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

கொண்டே அவன் காரில் ஏறி அமர்ந்து தான் கட்டுமானம் செய்துக் கொண்டிருந்த வீட்டிற்குச் சென்றான்.

   

அங்கு வேகமாக வேலைகள் நடந்துக் கொண்டிருந்தது. காரணம் நாளை கிரகப்ரவேசம் கடைசிகட்ட வேலைகள் உட்சகட்டத்தில் நடந்துக் கொண்டிருந்தது. வேலையாட்கள் அனைவரும் பரபரப்பாக வேலை செய்துக் கொண்டிருந்ததால் அங்கு தேவா, தாஸ், கீர்த்தனா வந்ததைக் கண்டும் நில்லாமல் அவர்களிடம் பேசாமல் வேலையை தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தார்கள். தேவாவும் அவளுக்கு அந்த வீட்டை சுற்றிக் காட்டினான்.

   

”இந்த வீடு நல்லாயிருக்கு” என்றாள்

   

”ம் நம்ம வீடு கூட நல்லாதான் இருக்கும் இதப்பாரு இதான் பெட்ரூம் எப்படி” என கேட்க அதுவும் நல்லாயிருக்கவே

   

”சூப்பராயிருக்கு ஆனா சின்னதா இருக்கு“

   

“அப்படியா வீடு சின்னது அதனால ரூம் சின்னதாயிடுச்சி. நம்ம வீட்டுக்கு பெரிசா பெட்ரூம் கட்டிடலாம். அங்கயே நாம ஓடிப்பிடிச்சி விளையாடலாம்” என சொல்ல தாஸ் இருமினான். தேவா அவனைப்பார்க்க அவன் சுற்றும் முற்றும் ஆளுங்க இருக்காங்க என்பது போல் சைகை செய்ய இருவரும் அமைதியானார்கள். வீட்டு ஓனரும் அங்கு சில வேலைகளை கண்காணித்துக் கொண்டிருந்தார். அவரிடம் சென்றான் தேவா

   

”வாங்க தம்பி வாங்க ரொம்ப நல்லாயிருக்கு தம்பி எப்படியோ குறிச்ச நேரத்தில நீங்க வேலையை முடிச்சிட்டீங்க”

   

”நான் எப்பவுமே அப்படித்தானே” என தேவா சொல்ல அதற்கு

   

”வாங்க தம்பி வீட்டுக்கு வாங்க காபி சாப்பிட்டு போலாம் வாங்க” என அவர்களை அழைத்துக் கொண்டு அந்த புது வீட்டிற்கு பக்கத்தில் வாடகைக்கு என இருந்த வீட்டிற்கு சென்றார். வீடு கட்டி முடிந்ததும் வாடகை வீட்டிலிருந்து புது வீட்டிற்கு வந்துவிடுவார். 

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.