கௌரவமா இருக்கும்”
“ஆனா என் கல்யாணத்துக்கு என் அப்பா அம்மா யாரும் வரமாட்டாங்க“
“வரவேணாம் நான் கேட்கலையே”
“உங்க வீட்ல என்னை ஏத்துக்க மாட்டாங்க”
“வேணாம்டி நாம கல்யாணம் பண்ணி தனி வீடு போயிடலாம்”
“வேணாமே மத்தவங்களை கஷ்டப்படுத்திட்டு நாம எப்படி வாழறது”
“ஷ் இதப்பாரு ரொம்பவே நீ மனசை போட்டு அலட்டிக்கற, இப்பவே எனக்கு 30 வயசாகுது, உனக்கு என்ன வயசு”
“25”
”இப்ப கல்யாணம் பண்ணாதான் எனக்கு 58 வயசு இருக்கறப்ப என் பையன் வளர்ந்து நம்மளை பார்த்துக்குவேன் லேட்டான ரொம்ப கஷ்டம் சரியா எப்படியாவது இந்த வருஷத்துக்குள்ள உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் முடிவே பண்ணிட்டேன்”
“ஆனா உங்க வீட்ல”
“அதை நான் பார்த்துக்கறேன் சரியான தருணம் வரட்டும், உன்னை நான் என் வீட்டுக்கு கூட்டிட்டு போய் காட்டறேன் இதப்பாரு இந்த டிசைன் எப்படியிருக்கு”
”இது ரொம்ப பெரிசா இருக்கு நிறைய விலையா இருக்கும்” என சொல்ல அவனோ
”என்ன விலையாயிருந்தா உனக்கென்ன உன் அண்ணன் தந்தா மறுக்க மாட்ட, உன் புருஷன் கொடுத்தா ஆயிரம் கேள்வியா கேட்ப” என அவளை அதட்டவும் தாஸ்க்கு கோபமே வந்து தேவாவிடம் வந்து ஏதோ சைகை செய்துவிட்டு கீர்த்தனாவை இழுத்துக்