கொண்டு கடைக்கு வெளியே சென்றான்.
அவன் சென்றதும் சிரித்த தேவாவோ அந்த புக்லெட்டில் தனக்கு பிடித்த டிசைனை காட்டி இதை எடுத்து வைக்குமாறு சொல்லிவிட்டு தாஸ் வாங்கிய தாலியை எடுத்துக் கொண்டு காருக்கு வந்தான்.
”கோபமா தாஸ் தாலியை விட்டுட்டு வந்துட்ட இந்தா” என தர அவன் அதை பிடுங்கிக் கொள்ள
”ஏன்டா கோச்சிக்கற உன் தங்கச்சித்தான், அப்படி பேசறா நான் அவளை திட்டலைடா” என சொல்ல தாஸ் அவனை முறைக்கவும்
”சரி சாரி திட்டிட்டேன் இனிமே அது கூட நான் செய்ய மாட்டேன் சரியா” என சொல்லவும் அவனும் சரியென சொல்ல 3 பேரும் காரில் ஏறி நேராக ஆபிஸ் சென்று சேர்ந்தார்கள்.
”கீர்த்தனா நீ வீட்டுக்கு கிளம்பு, நாங்க அந்த புது வீட்டுக்கு போய் வேலையை முடிச்சிட்டு வரோம்” என சொல்ல அவளும் தயங்கி நின்றாள். அவளது தயக்கத்தை கண்ட தேவா
”என்ன கிளம்பு நாளைக்கு காலையில 6 மணிக்கு உன்னை உன் வீட்ல வந்து வேணாம் வேணாம் நேரா கோயிலுக்கு வந்துடு அங்கயே உன்னை பிக்கப் பண்றேன் சரியா” என சொல்ல அவளும் சரியென்றாளே தவிர ஒரு அடி எடுத்து வைக்காமல் அங்கேயே நிற்கவும் சந்தேகத்துடன் தேவா
”என்னாச்சி கிளம்பு” என சொல்ல அவளின் தயக்கத்தைப் புரிந்துக் கொண்ட தாஸ் கீர்த்தனாவிடம்
”வேணாம் கல்யாணம் ஆகட்டும்” என சொல்ல அவளோ கெஞ்சும் படி பார்க்க தேவாவுக்கு குழப்பமே வந்தது.
தாஸ் எவ்வளவோ சொல்லி புரிய வைத்தும் அவள் கேட்காமல் இருக்கவே அந்த ஆபிஸ் விட்டு வெளியே சென்று கதவை சாத்திவிட்டு வெளிப்புறம் காரிடம் நின்று யாராவது