சைகையில் சொல்ல
”எது குழந்தையா நீ வேற அப்படி எதுவும் நடக்கலைடா வெறும் முத்தம்தான் கொடுத்தேன்” என சொல்ல உடனே கையை நீட்டி சத்தியம் செய் என்றான் அவனும் சிரித்துக் கொண்டே சத்தியம் செய்ய ஒருவழியாக தாஸின் கோபம், குழப்பம், சந்தேகம் தொலைந்தது.
அவன் சிரிக்கவும் தேவா நொந்தான்
”அண்ணனும் தங்கச்சியும் நல்லாவே என்னை ஆட்டிப்படைக்கறீங்க சரி வா நாம போலாம்” என சொல்லி அவனை அழைத்துக் கொண்டு நேராக புது வீட்டிற்குச் சென்று அங்கிருந்தவர்களுடன் வேலையில் மூழ்கினான்.
வீட்டிற்கு வராமல் அங்கேயே சாப்பிட்டு வேலை செய்து இரவு 11 மணிக்கு அனைவரையும் அனுப்பிவிட்டு வீடு நோக்கி வந்தான். வரும் வழியில் கீர்த்தனாவின் வீட்டைப்பார்க்க அது இருளில் இருக்கவே சிரித்துக் கொண்டே தன் வீட்டை அடைந்தான். தாஸ் சீட்டிலேயே தூங்கிவிடவே அவனை எழுப்பி அழைத்துக் கொண்டு அவனது அறையில் படுக்க வைத்துவிட்டு தன் அறைக்கு வந்தான். அங்கு சரண்யா படுத்திருப்பதைக் கண்டு அதிர்ந்தவன் அவசரமாக தாஸ் அறைக்குச் சென்று அவனை உலுக்கி எழுப்பினான். அவனோ தலையை சொறிந்துக் கொண்டே எழுந்து
”என்ன” என சைகை செய்ய
”டேய் என் ரூம்ல சரண்யா படுத்திருக்காடா” என சொல்ல தாஸின் தூக்கம் ஓடிவிட்டது. அரக்க பரக்க எழுந்து ஓட தேவா பயத்துடன் பின்னாடி தாமதமாகவே சென்றான்.
அங்கு படுத்திருந்த சரண்யாவை உலுக்கி எழுப்பவும் அவளும் பதட்டமாக எழுந்தவள் தாஸ் மற்றும் தேவா அங்கு இருப்பதைக் கண்டு சிரித்தாள்
”இங்க என்ன செய்ற?” என தேவா கத்த
”இல்லை உன் கிட்ட ஒரு விசயம் பேசனும் அதான்”