Page 39 of 41
பண்றேன்” என சொல்ல
”தெரியுமே” என அவள் வெட்கப்பட தாஸ் அவளது திகைத்தவன் தேவாவிடம் உண்மையை சொல் என சைகை செய்ய அவன் உடனே
”ஆமாம் நான் லவ் பண்ற பொண்ணு பேரு கீர்த்தனா” என்றான். அதைக்கேட்டு அதிர்ந்தாள் சரண்யா
”என்ன சொல்றீங்க அப்ப நீங்க என்னை லவ் பண்ணலையா”
“நான் எப்ப அப்படி சொன்னேன்”
“ஆனா நான் அப்படி நினைச்சேனே”
“நினைச்சா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்”
“ஆனா நான் உன்னைத்தான் லவ் பண்றேன்”
“இதப்பாரு சும்மா இப்படி இம்சை பண்ணாத கிளம்பு ஒழுங்கா ஊர் போய் சேரு, உன் தாத்தா காட்டற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க”
“இல்லை எனக்கு நீங்கதான் வேணும்”
“நான் உன்னை விரும்பலையே”
“நான் விரும்பறேனே”
“எப்ப இருந்து”
“உங்களை நான் முதல் முதலா பார்ததிலிருந்து”