Page 37 of 41
“அதுக்கு என் ரூம்க்கு வரனுமா எழுந்து வெளியே போ, எதுவாயிருந்தாலும் நாளைக்கு காலையில பட்ட பகல்ல பேசிக்கலாம்”
“அப்படியில்லை முக்கியமான விசயம்”
“என்ன அது”
“அது நான் நாளைக்கு ஊருக்கு போறேன் அதான் சொல்லிட்டு போலாம்னு”
“ஏன் ஊருக்கு போகனும்”
“அது தாத்தா வரசொன்னாரு”
“ஓ உன் அண்ணன் இங்க இருக்கானே”
“ஆமாம் நாளைக்கு அண்ணா ஓட்டல் காலி பண்ணிட்டு இந்த வீட்டுல தங்குவாரு”
“ஓ நீ போற அவன் வரானா சூப்பர் சூப்பர் சரி வீட்ல பாட்டிகிட்ட நீ யார் என்னன்னு உண்மையை சொன்னியா இல்லையா”
“அது வந்து சொல்ல முடியலை”
“சரி விடு நான் அப்பாட்ட உன்னைப்பத்தி சொல்லிட்டேன்”
“தெரியும்”
”எப்படி”
“அண்ணா சொன்னாரு”