(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

வருகிறார்களா என வேடிக்கைப் பார்க்கலானான். அவன் சென்றதும் தேவா கீர்த்தனாவிடம்

   

”என்னாச்சி உனக்கு நீ செய்றது எனக்கு புரியலை ஆனா அவனுக்கு புரிஞ்ச மாதிரி பேசறான், நீ என்னடான்னா அவன்ட்ட கெஞ்சற என்ன விசயம்” என பொறுமையாக கேட்க அவளோ கோபித்துக் கொண்டு முகத்தை திருப்ப

   

”அட என்ன ஆச்சி நல்லாதானே இருந்த”

   

“வரவர உங்களுக்கு என் மேல ஆசையே இல்லை”

   

“ஆசையில்லாமதான் கல்யாணம் வரைக்கும் பேசறேனா”

   

“ஆமாம் அதெல்லாம் சும்மா”

   

“யார் அப்படி சொன்னது. நான் டிசைன் செலக்ட் பண்ணிட்டு வந்துட்டேன், இன்னும் 2 நாள்ல அந்த நகைங்க வந்துடும் காட்டறேன் அப்ப பாரு”

   

“அவ்ளோதானா” என்றாள் ஏக்கமாக

   

”வேற என்ன வேணும் ஓ துணிமணியா அதுக்கென்ன நாளைக்கு கடைக்கு போய் வாங்கிக்கலாம் சரியா” என அவளிடம் சொல்ல

   

”அவ்ளோதானா”

   

“என்னடி வேணும் உனக்கு” என சலிப்பாக தேவா கேட்க

   

”ஏன் சலிச்சிக்கிறீங்க மதியம் ஆனா காதல் செய்யலாம்னு ஆசை காட்டி இப்ப மோசம் பண்றீங்களா நான் போறேன் வீட்டுக்கு” என அவள் கோபமாக சொல்லிவிட்டு 3 அடி எடுத்து வைப்பதற்குள் அவளை பிடித்து இழுத்து கட்டியணைத்துக் கொண்டான் தேவா. அவளோ திமிறினாள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.