”உன் அண்ணன் கொடுத்தா வாங்குவ நான் கொடுத்தா வாங்க மாட்டியா” காட்டமாக அவன் கத்த அதிர்ந்தாள் கீர்த்தனா தாஸோ தேவாவை முறைக்க தேவா அமைதியானான்.
நகைக்கடை வரவும் மூவரும் இறங்கி கடைக்குள் சென்றார்கள். பெண்கள் செக்ஷனுக்கு சென்றவர்கள் அங்கு 3 சேரில் 3 பேரும் அமர்ந்துக் கொண்டார்கள்.
அவளோ அங்கிருந்த நகைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். இருப்பதிலேயே சின்ன நகையாக எடுத்துக் கொள்வோம் என நினைத்தாள். தேவாவோ அங்கிருந்த பெரிய பெரிய ஆரம், செயின் , நெக்லஸ் என பார்க்கலானான்.
தாஸ் மட்டும் தாலி நகைகளை பார்க்க எண்ணி அங்கிருந்த கடைக்காரரிடம் சைகையால் பேசி அவர் ஒரு ட்ரே எடுத்து வைக்க அதை பார்த்துக் கொண்டிருந்தான். தாஸின் செயலைக் கண்டு வியந்த தேவா கீர்த்தனாவிடம்
”இதப்பாரு கீர்த்தனா உன் அண்ணன் பயங்கர ஸ்பீடு தாலியை செலக்ட் பண்றாப்ல விட்டா நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்வான் போல” என சொல்ல அவளுக்கு சிரிப்பு வந்து எழுந்து தாஸிடம் சென்றாள்
”அண்ணா இங்க என்ன செய்றீங்க“ என கேட்க அவன்
”உனக்காகதான்” என்றான் அவள் அந்த நகைகளை பார்த்துவிட்டு
”இப்ப என்ன அண்ணா அவசரம்” என்று சிணுங்க தாஸோ அவளது தலை முடியை மெதுவாக வருடிவிட்டு சிரித்தவன் அங்கிருந்த ஒரு தாலியை மட்டும் அவளிடம் காட்டி எப்படியிருக்கு என கேட்க அவளும் நல்லாயிருக்கு அண்ணா என சொல்லிச் சிரிக்கவும் அதன் விலையை கடைக்காரனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பத்திரமாக அங்கேயே வைக்க தேவா குழம்பினான்
”என்னடா அங்க வைச்சிட்ட வாங்கலையா” என கேட்க என்னிடம் பணம் இல்லை என்றான்