அமைதியாக பார்வையிட்டான். ஒவ்வொரு ப்ளானிலும் சில குறைகள் இருந்தது. அதை அவளிடம் காட்டி எப்படி சரிசெய்வது என சொல்லிக் கொடுத்தான். அந்த 3 ப்ளான்களில் ஒன்று தாமரை வீடு போல இருந்தது, இன்னொன்று விக்ரம் வீடு போல இருந்தது, 3வது கேரளா பாணியில் இருந்தது. அதனால் அவன் 3வது ப்ளானை தேர்ந்தெடுத்து
”இது ஓகே மத்ததெல்லாம் நல்லாயிருக்கு இது சூப்பராயிருக்கு”
“இது என் அப்பா அம்மா வீடு மாடல் அங்கதான் நான் வளர்ந்தேன்”
“சரி இந்த ப்ளான் எடுத்துக்க என் கூட வா” என தாஸை அழைத்துக் கொண்டு காரில் ஏறி நேராக அவனது காலி மனைக்குச் சென்றான். மூவரும் இறங்கியதும் அந்த இடத்தை கீர்த்தனாவிடம் காட்டினான். நல்ல ஏரியா, அக்கம் பக்கம் வீடுகள், கடைகள், நடக்கும் தூரத்திலேயே அனைத்தும் கிடைக்கும் படி ஊரில் சென்ட்டரான இடத்தில் அது இருந்தது.
”இதப்பாரு கீர்த்தனா இதுதான் நம்ம இடம், இங்க வீடு கட்டனும்னு நினைச்சேன். ஆனா முடியலை.”
”நான் உங்களுக்கு உதவி செய்யட்டுமா”
”தாராளமா இடம் காட்டிட்டேன் நம்ம வீடுதான், உன் விருப்பப்படி கட்டு” என சொல்ல அவளோ கண்கள் விரிய
”நம்ம வீடா?”
“ஆமாம்”
”ஆனா” என அவள் இழுக்க தாஸ் வந்தான்
”என்ன?” என சைகை செய்ய