”நல்லாயிருக்கு” என தேவா சொன்னதும் பக்கத்தில் இருந்த சரண்யாவிடம்
”தேவாவுக்கு இது பிடிச்சிருக்காம் உனக்கு பிடிச்சிருக்கா” என கேட்க அவள் உடனே ஆம் என வெட்கத்துடன் தலையாட்டவும் பாட்டிக்கு கொண்டாட்டமாகியது, தேவாவுக்கு திண்டாட்டமாகியது.
அந்த நேரத்திலும் தாஸ் அந்த நகைகளுக்கு மத்தியில் இருந்து ஒரு மெல்லிய செயினை எடுத்தான். அற்புதமான டிசைன் 1 சவரன் இருக்கும் அது அழகாக இருந்தது, பெண்கள் அணியக்கூடியது. தாஸ் அதையே பார்க்க நகைக்கடை ஓனரோ
”எடுத்துக்குங்க விலை 25000 தான்” என சொல்ல தாஸ் சிரித்தான், உடனே தேவாவின் சட்டையை பிடிக்க அவனோ
”இருடா தரேன் தரேன்” என சொல்லி தன் அறைக்குச் சென்றான். பீரோவில் இருந்த பணத்தை எடுக்கும் போதே தாஸ் செய்த செயல் அவனை சிந்திக்க வைத்தது.
”தாஸ் கீர்த்தனாவுக்காகதான் நகை எடுக்கறான், நாமளும் எடுத்தா என்ன ஆனா வீட்ல இவ்ளோ பேர் இருக்காங்க நான் எடுத்தா தப்பா நினைப்பாங்களே சரி சரி இவங்க போகட்டும் நாம அவளை கடைக்கு கூட்டிட்டு போய் வாங்கித்தரலாம்” என நினைத்துக் கொண்டே வெளிய வந்தவன் தாஸ் வாங்கிய நகைக்கு மட்டும் பணம் தரவும் அநத செயின் தாஸ்க்கு சொந்தமானது. அதைப்பார்த்த பாட்டி
”தாஸ் உனக்கெதுக்கு இந்த செயினு” என கேட்க தாஸோ சரண்யாவை காட்டி
”அவளுக்கெதுக்கு அந்த செயினு” என சைகை செய்ய பாட்டியோ
”ஏன் வீட்டுக்கு வந்த மகாலட்சுமிக்கு செய்யக் கூடாதா” என கேட்க அவனும்
”அதுபோலதான் இதுவும்“ என்பது போல் சைகை செய்துவிட்டு பத்திரமாக அந்த செயினை