”எனக்கு நடக்கறதெல்லாம் வித்தியாசமா இருக்கு” என்றாள்
”ஒண்ணும் இல்லையே எல்லாம் நல்லாதான் இருக்கு” என்றான் தேவா
”இல்லை நான் வந்தே 4 நாள் கூட ஆகலை அதுக்குள்ள என் மேல இவ்ளோ பாசம் காட்டறீங்களே”
”4 நாள்னா என்ன 4 வருஷம்னா என்ன நீ என் பொண்டாட்டி, உனக்கு நான் செய்றது கடமையாச்சே” என தேவா சொல்லவும் கீர்த்தனா உடனே
”ஆமாம் புடவை எங்க?” என கேட்க தேவா அதிர்ந்தான். அதற்கு தாஸ் சைகை செய்ய ஆரம்பிக்கவும் தடுத்தான் தேவா
”அந்த புது புடவையில காபி கொட்டிடுச்சி. இனி அதை உனக்கு கொடுத்தா நல்லாயிருக்காது. நான் வேற வாங்கித்தரேன்” என சொல்ல அவளின் முகம் ஒரு மாதிரியானது
”என்னாச்சி?” என அவன் கேட்க
”முதல் முறையா ஒரு புடவை எனக்காக வாங்கினீங்க அது இப்படியா ஆகனும்” என்றாள்
”சரி விடு என்ன செய்றது அதுக்கு அதிர்ஷ்டமில்லை”
”அப்படின்னா”
“ம் உன்கிட்ட இருக்க அதுக்கு அதிர்ஷ்டமில்லை, எனக்குதான் அதிர்ஷ்டம் இருக்கு” என சொல்ல அவள் வெட்கப்படவும் தாஸ் தலையில் அடித்துக் கொண்டு கீர்த்தனாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு காரில் ஏற்றிவிட்டு தானும் ஏறிக் கொண்டான்.
”இவன் ஒருத்தன் தங்கச்சியை காப்பாத்தறேன்னு என் உயிர் எடுக்கறான்” என திட்டிக்