“எது ஏர்ப்போரட்லயா”
“ஆமாம்”
“நான் கீர்த்தனாவை கல்யாணம் பண்ணிக்கவே முடிவு பண்ணிட்டேன், அதுக்காகத்தான் புடவையும் தாலியும் வாங்கினேன். புடவையில நீ காபி கொட்டிட்ட தாலி தாஸ்கிட்ட இருக்கு” என சொல்ல அவள் சந்தேகமாக தாஸை பார்க்க அவனோ தன்னிடம் இருந்த தாலி பாக்சை காட்ட அதை கண்டு அதிர்ந்தவள் அழ ஆரம்பித்தாள்.
அவள் அழட்டும் என அமைதியாக இருந்தார்கள் இருவரும், யாருமே தனக்கு ஆறுதல் சொல்லவில்லையே என திகைத்தவள் உடனே அவ்விடம் விட்டு தன் அறைக்குச் சென்றாள். அவளின் போக்கை கண்ட தேவாவுக்கு மட்டும் குழப்பமே மிஞ்சியது. அதைக்கண்ட தாஸோ என்ன என கேட்க
”இவளால பிரச்சனை வரும்னு தோணுது”
”ஏன் அப்படி சொல்ற?” என அவன் சைகை செய்ய
”இவளோட அண்ணன் சரண் இங்க இந்த வீட்ல தங்கப் போறானாம். அவனோட டீலிங்கிற்காக என் அப்பா சித்தப்பா அப்படியே இழையறாங்க. ஒருவேளை அந்த டீலிங்கை காட்டி சரண்யாவை என் தலையில கட்டிவைச்சிடுவாங்களோன்னு பயமா இருக்குடா” என தேவா சொல்ல தாஸ் அதைக்கேட்டு அதிர்ந்தவன் அதற்கு என்ன தீர்வு எடுப்பது என இருவருமாக தூக்கத்தை தொலைத்து யோசித்துக் கொண்டிருந்தார்கள். அங்கு சரண்யாவோ 1 மணி நேரம் அழுதவள் கோபமாக தன் தாத்தாவிற்கு போன் செய்து தன் காதல் மற்றும் தேவா சொன்னதைச் சொன்னாள்
”தாத்தா எனக்குத் தெரியாது எனக்கு தேவா வேணும், நான் அவரை கல்யாணம் பண்ணிக்கனும் எப்படியாவது என்னை அவரோட சேர்க்கறது உங்க பொறுப்பு, அப்படி இந்த கல்யாணம் தேவாவோட நடக்கலைன்னா நான் செத்துடுவேன்” என மிரட்டிவிட்டு போனை கட்செய்துவிட்டு உறங்காமல் காலையில் ஊருக்கு கிளம்ப தன் லக்கேஜ்களை அடுக்கினாள்.