(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“போதும் உன்னால பெருமை வரனுமே தவிர இப்படி அவமானம் வரக்கூடாது, கிளம்பு இந்த சொத்துல நயா பைசா உனக்கு கிடையாது பணத்தை இறைச்சி நல்லா செல்லம் கொடுத்து வளர்த்து விட்டதாலதானே நீ இப்படி தப்பு பண்ற, தனியா வாழ்ந்துப் பாரு அப்பதான் உனக்கு கஷ்டம் தெரியும், எங்களோட பாசம் புரியும் வெளியே போ” என விரட்ட தாத்தாவோ

   

”போன்னு சொன்னா அவள் எங்க போவா?”

   

“ஏன் அவளுக்குத்தான் அடுத்தவங்களை ஏமாத்த நல்லா தெரியுதே அதேபோல எவனையாவது ஏமாத்தி போய் வாழட்டும், அதுக்குதான் இவள் லாயக்கு” என சொல்ல அதற்குமேல் சரண்யாவால் அங்கு நிற்க முடியாமல் அங்கிருந்து கோபமாக வெளியே சென்றாள். அவள் செல்லவும் பாடிகார்டுகளும் கூடவே செல்ல தெருவில் இறங்கி கால் போன போக்கில் நடந்தவள் அவள் பின்னாடியே வந்த பாடிகார்டுகளைக் கண்டு

   

”நீங்க ஏன் வர்றீங்க போங்க என்கிட்ட பணம் இல்லை, உங்களுக்கு சம்பளம் தர என்னால முடியாது நீங்க போங்க” என விரட்ட அவர்களோ

   

”10 வருஷத்துக்கு மேலயே உனக்கு பாடிகார்டு வேலை செய்றோம், நீ எங்க பொண்ணு போல இப்படி தனியா நீ எங்க போவ”

   

“நியாயம் கேட்கப் போவேன்”

   

“யார்கிட்ட?”

   

“அந்த தேவாகிட்ட” என அவள் சொல்லவும் பாடிகார்டுகள் நொந்துப் போனார்கள்

   

”தப்பு பண்ணது நீதான், இதுல தேவா எங்க வந்தான். உன்னால அவனும்தானே எல்லாம் இழந்து வெளிய போனான்”

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.