(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“அவன் என்னை ஏத்துக்கிட்டு இருந்திருந்தா இவ்ளோ தூரம் பிரச்சனை வந்திருக்காதே”

   

“அவன் வேற ஒருத்தியை விருப்பறானே”

   

“தெரியும் அவளும் நானும் ஒரு நாள்லதான் அவனுக்கு பரிச்சயமானோம், நான் பையனா வேஷம் போட்டது முதல்லயே அவன் கண்டுபிடிச்சதாலதான் என்னை விட்டு விலகி அவள்ட்ட போனாரு”

   

“அதுக்கு நீ என்ன செய்யப்போற”

   

“நான் நியாயம் கேட்கப் போறேன் என்னை ஏத்துக்க சொல்லப் போறேன்“

   

“அதுக்கு அவன் சம்மதிக்க மாட்டான்மா”

   

“அப்படின்னா எனக்கு இந்த வாழ்க்கையை கொடுத்ததுக்கு அவனை நான் பழிவாங்குவேன், எப்படியாவது அவனை பிச்சை எடுக்க வைப்பேன்” என சொல்ல அவர்கள் வேண்டாம் அது தவறு என ஆயிரம் அறிவுரைகள் சொல்லியும் எதுவும் கேளாமல் அவர்களிடம் இருந்த பணத்தில் திரும்பி தேவாவை காண மதுரை நோக்கி வந்தாள். அவளுடன் பாடிகார்டுகளும் நொந்து போய் வந்தார்கள்.

   

சரண்யா வீட்டை விட்டுச் சென்றதும் தன் வீட்டை விட்டு வெளியே வந்த தேவா நேராக தாமரை வீட்டுக்குச் சென்றான். அங்கு சுந்தரம் டாக்டர் இருந்தார். அவரிடம்

   

”நாங்க கிளம்பறோம்”

   

”எங்க கிளம்பற”

   

“நானும் கீர்த்தனாவும் கிளம்பறோம்”

   

“அதான் எங்க”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.