(Reading time: 17 - 33 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 17 - சசிரேகா

   

போட்டியின் 6வது நாள்

   

காலையில் 7 மணிக்கே ரிஷிகேசன் வீடு ரெடியாகிவிட்டது. வீட்டில் இருந்த அனைவரும் ரெடியாகி ஹாலுக்கு வர அங்கு தாத்தா  அவர்களிடம்

   

”இன்னிக்கு நாம எல்லாரும் நம்ம கிராமத்துக்கு போறோம் சொந்தங்களை பார்த்துட்டு வரோம். ரிஷிக்கு வேற கல்யாணம் ஆகப்போகுது. பொண்ணு யாராயிருந்தாலும் சரி இந்த மாசம் முடிஞ்சதும் தேர்ந்தெடுத்துடுவேன். அதனால இன்னிக்கு போயி சொந்தங்களை பார்த்துட்டு என்னிக்கு பொங்கல் வைக்கிறதுன்னு நாள் கிழமை பார்த்துட்டு வந்துடலாம். திரும்பவும் அன்னிக்கு போய்ட்டு வரலாம் சரியா” என தன் வீட்டாள்களைப் பார்த்து கேட்க அதற்கு பாட்டி

   

”நாம வர்ற விசயத்தை அவங்களுக்கு சொல்லிட்டீங்களா”

   

“சொல்லியாச்சி” என்றார் தாத்தா அதற்கு மிருதுளா

   

”தாத்தா எங்க கிராமத்துக்கும் போறோமா”

   

“இல்லைம்மா என்னோட கிராமத்துக்கு போறோம்”

   

என்றார் அதற்கு சோனா தாத்தாவிடம்

   

”தாத்தா நாங்க 4 பேர் இருக்கோமே உங்க சொந்தக்காரங்க எங்களை பத்தி கேட்டா என்ன சொல்வீங்க”

   

“எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளிங்கன்னு சொல்வேன்மா”

   

“ஏன் தாத்தா உண்மையை சொல்ல வேண்டியதுதானே” என்றாள் வந்தனா

   

”என்ன உண்மை”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.