(Reading time: 17 - 33 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

ஒண்ணா சேர்ந்திடுவாங்க நீ பயப்படாத சரியா வா நாம உள்ளே போலாம்” என அழைக்க நந்தினியும் சோனாவுடன் வீட்டிற்குள் சென்றாள். காலையிலேயே இவர்கள் வருவதை முன்னிட்டு சமையல் களை கட்டியது.

   

தாத்தாவின் இந்த திடீர் நிகழ்வைக்கண்டு சோனாவிற்கு ஏதோ சந்தேகம் வர அவள் நந்தினியிடம்

   

”நந்தினி தாத்தா இந்த மாதிரி ஏதாவது செய்தா அதுல ஏதோ அர்த்தம் இருக்கும்னு நான் நினைக்கிறேன்” என சொல்ல அவர்களிடம் வந்தனா வந்து நின்றாள்.

   

”ஒரு வேளை தாத்தா இங்க நாம எப்படி நடந்துக்கிறோம்னு தெரிஞ்சி வைச்சி மார்க் போடுவாரோ” என நந்தினி சொல்ல

   

”இருக்கலாம் தாத்தாவை நம்ப முடியாது நம்மளை வெளிய போக கூடாதுன்னு சொன்னவரு இப்ப நம்மளையும் அழைச்சிட்டு இங்க வந்திருக்காரு. அவரால முடியும் நம்மளை வீட்லயே விட்டுட்டு வர ஆனால் அவர் அதை செய்யலை அப்படின்னா என்ன அர்த்தம் இதுவும் ஒரு போட்டிதான்” என்றாள் சோனா

   

”அப்படின்னா நாம மார்க் எடுக்க இங்க இருக்கறவங்களோட அனுசரிச்சி போகனும் அப்படித்தானே” என்றாள் வந்தனா

   

3 பெண்கள் பேசுவதைக்கேட்டு அந்த இடத்திற்கு வந்த மிருதுளாவை பிடித்தாள் வந்தனா

   

”மிருதுளா நீ தானே தாத்தா பாட்டியோட வந்த உண்மையை சொல்லு தாத்தா நம்மளை இங்க டூரூக்காக கூட்டிட்டு வந்தாரா இல்லை இதுவும் போட்டியில ஒண்ணா”

   

“காரில் வந்த வரைக்கும் யாரும் எதுவும் பேசலை அதான் உண்மை” என மிருதுளா சொல்லும் போதே அர்ஜூனும் ரிஷியும் பரப்பரப்பாக நந்தினியிடம் வந்தார்கள்.

   

”நந்தினி உன்கிட்ட நான் ஒரு விசயம் சொல்லனும்” என்றான் ரிஷி

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.