(Reading time: 17 - 33 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“கௌதம்”

   

“ஏண்டா உனக்கு வேற ஆளே கிடைக்கலையா அவன் சரியான அலைஞ்சான் கேசு. பொண்ணுங்களை பார்த்தாலே ஜொள் விட்டுக்கிட்டு கடலையை போடறவன்”

   

“அப்படியாண்ணா எனக்கு தெரியாது பாருங்க. அவன் வயசு அப்படி அதனால அப்படி செய்றான் அவனுக்கும் கல்யாணம் ஆயிட்டா இன்னொரு பொண்ணை பார்ப்பானா என் தங்கச்சி பார்க்க விட்டுடுமா என்ன”

   

“இதுல உன் தங்கச்சிக்கு விருப்பமா இல்லையான்னு நீ கேட்டியா”

   

”அதுக்கென்ன இப்பவே கேட்கறேன்” என சொல்லிவிட்டு நந்தினியைப் பார்த்து அர்ஜூன்

   

”அம்மாடி உனக்கு டாக்டர் கௌதமை கல்யாணம் செஞ்சிக்க விருப்பமா” என கேட்க அதற்கு அவள்

   

”இல்லைண்ணா” என டக்கென பதில் சொன்னாள்.

   

ரிஷிக்கு நிம்மதியானது. அர்ஜூனுக்கு பக்கென்றது

   

”அதானே பார்த்தேன் போன முறை மாதிரி உங்க விருப்பம்னு சொல்லாம போனாளே. இதுக்காகதானே அவளுக்கு நிறைய பூஸ்ட் கொடுத்தேன் அப்பாடி நம்ம உழைப்பெல்லாம் வீணா போகலை நான் ஜெயிச்சிட்டேன் நந்தினி எனக்குதான்” என மனதுக்குள் நினைத்துக்கொண்டு சந்தோஷப்பட்டவன் அர்ஜூனை பார்த்து கேவலமாக சிரிக்க அர்ஜூன் உடனே நந்தினியிடம்

   

”ஏம்மா வேணாம்ங்கற அவன் டாக்டர் படிச்சிருக்கான் இப்பவே நல்ல வேலையில இருக்கான். நீ மட்டும் அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா போதும் உனக்காக அவன் மாறிடுவான் சொந்தமா ஹாஸ்பிட்டல் கூட கட்டி நடத்துவான் என்ன சொல்றம்மா”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.