(Reading time: 17 - 33 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

”எதுக்கு சிரிக்கற சோனா” என்றான் ரிஷி

   

“இங்க ஏற்கனவே 4 பொண்ணுங்க இருக்கோம் எங்கள்ல ஒருத்தியை தேர்ந்தெடுக்காம கிராமத்து பொண்ணை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறீங்களே தாத்தா விடுவாரா”

   

”எனக்கு ஒரு விசயம் சொல்லு சோனா நீ எதுக்காக இந்த போட்டியில கலந்துக்க வந்திருக்க”

   

”இது என்ன கேள்வி அதான் நான் எல்லாத்தையும் முதல் நாளே சொல்லிட்டேனே”

   

“ஆமாம் ஆனா ஒரு விசயம் கேட்கறேன் தப்பா நினைக்காத ஒரு வேளை இந்த போட்டியில நீ தோத்துட்டா என்ன செய்வ”

   

“என்ன செய்யனும்”

   

“இல்லைம்மா வருத்தப்படுவியா இல்லை இட்ஸ் ஓகேன்னு போயிடுவியான்னு கேட்கறேன்”

   

“ரிஷி நான் இந்த போட்டியில கலந்துக்கிட்டது ஜெயிக்கறதுக்காகதான் என்னை இப்படி பேசி பேசி மனசை மாத்தி விரட்டலாம்னு நினைச்சிடாதீங்க” என சொல்ல

   

”நான் அந்த அர்த்தத்தில கேட்கலை. ஒரு பிரெண்டாதான் கேட்டேன் இட்ஸ் ஓகே உனக்கு இந்தளவுக்கு நம்பிக்கையிருந்தா இனி இதைப்பத்தி பேச வேணாம்.” என சொல்லிவிட்டு நந்தினியை பார்த்தான்

   

”ஆமா நந்தினி நீ சொல்லு உன்னால இந்த போட்டியில ஜெயிக்க முடியாம போனா என்ன செய்வ” என ரிஷி கேட்க அதற்கு அர்ஜூன்

   

”அதான் ரெடியாக அடுத்த மாப்பிள்ளையிருக்கானே”

   

“யாரைடா சொல்ற”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.