(Reading time: 17 - 33 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“இல்லைண்ணா வேணாம் நான் அவரை டாக்டராதான் பார்த்திருக்கேன் என் கணவரா நான் அவரை என்னிக்குமே பார்க்கலை அப்படி நான் யோசிக்கவும் இல்லை”

   

“சரிம்மா அவனை விடு உனக்கு நான் வேறொரு மாப்பிள்ளையை பார்க்கட்டுமா இந்த கருணா அப்புறம் தினாவை பார்த்திருக்கதானே அவங்களைப்பத்தி நீ என்ன நினைக்கற”

   

“சகோதரர்களா நினைக்கிறேன் அண்ணா” என சொல்ல ரிஷிக்கு சிரிப்பு வந்து கலகலவென சத்தமாக வாய்விட்டு சிரித்துவிட்டான்.

   

அவனின் சிரிப்பைக்கண்டு ஆத்திரமடைந்த அர்ஜூனுக்கு புரிந்துவிட்டது. ரிஷி தன் தங்கையின் மனதை கலைத்துவிட்டதாக நினைத்து அவனுடன் சண்டை போட அது பேச்சு வார்த்தை தாண்டி கைகலப்பில் முடிந்தது. இரு ஆண்களும் காருக்குள்ளேயே சண்டை போடுவதைக் கண்டு ரசித்துக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தாள் சோனா. ஆனால் நந்தினியோ இருவரையும் பிரிப்பதற்காக போராடிக் கொண்டிருந்தாள்.

   

கிராமத்திற்கு வந்த பிறகும் அவர்களின் சண்டை ஓயவில்லை. தாத்தா காரை பாலோ செய்துக்கொண்டே காரை ஓட்டிய சோனா அனைத்து கார்களும் ஒரு வீட்டின் முன் நிற்கவும் அவளும் அந்த வீட்டுக்கு முன் சென்று தன் காரை நிறுத்தினாள். சுமார் ஒன்றரை மணி நேர பிரயாணத்தில் தாத்தாவின் பூர்வீக கிராமம் வந்தது. 

   

அன்றைய தினம் தாத்தா வருகிறார் என்பதை தெரிந்து கொண்டு அவரின் மொத்த சொந்தங்களும் அந்த ஒரு வீட்டில் வந்து இறங்கியிருந்தது. அனைவரும் வாசல் வரை வந்து வரவேற்றனர். காரிலிருந்து இறங்கிய அனைவரும் சொந்தங்களுடன் கலந்து பேசி சிரித்துக்கொண்டே வீட்டுக்குள் சென்றனர்.

   

ரிஷியும் அர்ஜூனும் காரை விட்டு இறங்கியதிலிருந்து இந்தியா பாகிஸ்தான் போல முறைத்துக்கொண்டே உலாவினார்கள். அவர்களின் இந்த செயலைக்கண்டு வருந்திய நந்தினியை தேற்றினாள் சோனா

   

”எதுக்கு வருத்தப்படற நண்பர்கள்ன்னா அப்படித்தான் பேசிக்குவாங்க திட்டிக்குவாங்க அப்புறம் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.