(Reading time: 17 - 33 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

ஆசைப்படறேன் ஆனா எங்க இன்னும் நீங்க முன்னேறலை போக போக சரியாயிடும் இப்ப கிளம்புங்க ஆமா ரிஷி எங்க” என கேட்க அர்ஜூன்

   

”வெளிய இருக்கான் தாத்தா”

   

“சரி வாங்க எல்லாரும்” என சொல்லிவிட்டு அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

   

சோனா ஏற்கனவே வரும் போதே தன்னுடைய காரில் வந்தமையில் அவள் அதில் ஏறிக்கொண்டு நந்தினியை பார்த்தாள்

   

”நந்தினி வா நம்ம கார்ல போலாம்” என அழைக்க அவளும் தன் அண்ணன் அர்ஜூனை அழைத்துக்கொண்டு சோனாவின் காரில் ஏறிக்கொள்ள அவசரமாக ஓடிவந்தான் ரிஷி

   

”நானும் வரேன்”

   

என சொல்ல சோனாவிற்கு சிரிப்பே வந்தது

   

”ரிஷி இப்ப என் கார்ல வர்றீங்கன்னா எனக்காக வர்றீங்கன்னு நினைக்கட்டுமா இல்லை நந்தினிக்காக வர்றீங்கன்னு நினைக்கட்டுமா”

   

“அர்ஜூன்காக வரேன்” என சொல்லிவிட்டு நந்தினியை முன்னாடி சீட்டில் அமரவைத்துவிட்டு பின் சீட்டில் ரிஷியும் அர்ஜூனும் அமர்ந்திருக்க சோனா தானே காரை ஓட்ட ஆயத்தமானாள்.

   

தாத்தா பாட்டி மிருதுளா ஒரு காரிலும் மோகனசுந்தரம் அவரது மனைவி மற்றும் வந்தனா ஒரு காரிலும் கேசவமூர்த்தி அவருடைய குடும்பம் ஒரு காரிலும் ஏறிக்கொள்ள 4 வண்டிகளும் வீட்டை விட்டு வெளியேறியது.

   

தாத்தா தன்னுடன் வந்த மிருதுளாவை ஓரப்பார்வையில் பார்த்தார். பாட்டியும் அவளும் பேசிக்கொள்ளவில்லை மாறாக மிருதுளா தன் செல்போனில் சேட்டிங் செய்துக்கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.