(Reading time: 24 - 48 minutes)

ராஜகோபாலும் இளவரசனும் வெளியேறினர். எப்படியோ தப்பித்தோம் பிழைத்தோம் என்றவாறு காரில் ஏறி பெருமூச்சை விட்ட ராஜகோபாலை பார்த்த இளவரசன் “என்ன மாமா” என்றான்.

“என்னப்பா நீ வேற. லக்ஷ்மிக்கு அவ்வளவா விவரம் பத்தாது. அவளை கூப்பிட்டு எச்சரிக்கை பண்ணிட்டு வரலாம்ன்னு பார்த்தா நீ வேற அப்ப தான் என்னை உள்ளே போக விடமாட்ர” என்றார்.

இளவரசன் ஒரு நிமிடம் திகைத்தான். பின்பு அவன் மனம் ரிலாக்ஸாகி சிரித்து விட்டான்.

“அப்ப உங்களுக்கு இஷ்டம் இல்லையா மாமா” என்றான்.

“இவ்வளவு நேரம் நீ அங்க நடந்ததை பார்த்துட்டு தானே இருந்த, இப்ப வந்து ஏன் இப்படி கேட்கற, நான் அங்கேயே ஸ்ட்ராங்கா தானே முடியாதுன்னு சொன்னேன்” என்றார்.

“இல்ல மாமா. டிஸ்டன்ஸ் ல தர மாட்டேன்னு தானே சொன்னீங்க. அதான் அப்புறம் உங்க மனசை மாத்திப்பீங்களோன்னு கேட்டேன்” என்றான்.

“அட நீ என்னப்பா. செல்வி பையன் திருச்சி ல தான் வேலை பார்க்கறான். திருச்சி எல்லாம் ஒரு டிஸ்டன்ஸா. என் தங்கச்சிங்களால என் வாழ்க்கைல எவ்வளவோ பிரச்சனை நடந்திருக்கு. நானும் தங்கச்சிங்க தானேன்னு நினைச்சி விட்டு குடுத்தே போயிட்டு இருந்தேன்.”

“நான் என்ன நினைச்சேன்னா தங்கச்சிங்களுக்காக நான் பொறுத்து போறேன்னு. ஆனா எனக்கு தெரியலை. நான் என் பொண்டாட்டியை தேவை இல்லாம சாக்ரிபைஸ் பண்ண வக்கறேன்னு தெரியலை. அதை இனியா தான் எனக்கு புரிய வைச்சா. அதுவும் இல்லாம இந்த விசயத்துனால இனியாக்கும் எனக்கும் ரொம்ப டிஸ்டன்ஸ் வந்துடுச்சி.”

“கடைசில பெரிய பிரச்சனை ஆகி தான் எனக்கு இதெல்லாம் புரிஞ்சிது. இப்ப தான் கொஞ்ச நாளா என் பொண்ணு என் கிட்ட கொஞ்சம் நல்லா பேசிட்டு இருக்கா.  அப்படி இருக்கும் போது இவ பையனுக்கு எப்படி நான் என் பொண்ணை குடுக்க முடியும். அவ பையன் என்னவோ நல்லவன் தான். ஆனா அதுக்கு என்ன பண்ண முடியும்.”

“அதுவும் அவ பேசனதுக்கு அப்புறம் என் பொண்ணை பார்க்கறேன். அது கண்ணுல தண்ணியை வச்சிட்டு நிக்குது. அப்புறம் எப்படி நான் என் தங்கச்சி சொல்றதை கேட்க முடியும்” என்றார் வருத்தமாக.

“நீங்க பீல் பண்ணாதீங்க மாமா. எல்லாம் சரி ஆகிடும்.”

“இல்லப்பா. என் தங்கச்சி இதை பெரிய பிரச்சனை ஆக்காம விட மாட்டா. ஒரு மனுஷன் எல்லாருக்கும் நல்லவனா இருக்கறது எவ்வளவு பெரிய கஷ்டம் தெரியுமா. நான் அப்படி தான் நினைச்சி என் தங்கச்சிங்களை பொறுத்து போனேன். ஆனா எனக்கு லக்ஷ்மியை இதுல வருத்தறோம்ன்னு தெரியலை. லாஸ்ட்டா இனியா தாங்க முடியாம என் கிட்டவே நேரா வந்து வெடிச்சா. அப்ப தான் அவ சொன்னா “அப்பா கல்யாணத்துக்கு அப்புறம் ஒருத்தனுக்கு எல்லாரையும் விட அவன் பொண்டாட்டி தான் முக்கியம். உங்களுக்கு எங்களை விட கூட அம்மா தான் முக்கியமா இருக்கணும். எங்களுக்கும் அது தான் சந்தோசம்ன்னு சொன்னா. உங்க தங்கச்சிங்களுக்காக நீங்க விட்டு குடுங்கப்பா. அதுல அம்மாவோட ஸெல்ப் ரெஸ்பெக்ட் ஏன்ப்பா போகணும்ன்னு கேட்டா. அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்துச்சி தெரியுமா. என் பொண்டாட்டியை நான் எப்படி நடத்தனும்ன்னு என் பொண்ணு சொல்லிக் குடுக்கும் போது எனக்கு எப்படி இருந்திருக்கும்”

“விடுங்க மாமா. இப்ப அந்த பிரச்சனை எல்லாம் போயிடுச்சி இல்லை. இப்ப இருக்கற பிரச்சனையும் ஒன்னும் பெரிசில்லை. சரி ஆகிடும். டோன்ட் வொர்ரி” என்றான்.

“ம்ம்ம். என்ன ஆனாலும் நான் என் பொண்ணுக்கு இஷ்டம் இல்லாததை செய்ய மாட்டேன்”

ங்கு வீட்டிலோ இனியாவிற்கு ஒரே டென்ஷனாக இருந்தது.

“நான் வேலைக்கு போயிட்டு வரேன் மா” என்று கூறி விட்டு சென்றாள்.

“தான் தாயை தன் அத்தை என்ன சொல்லுவாறோ, இந்த பிரச்சனை எப்படி தான் முடியுமோ” என்று வருத்தப் பட்டுக் கொண்டே போனாள்.

அவள் செல்லட்டும் என்று காத்திருந்த செல்வியும் லக்ஷ்மியிடம் பேச ஆரம்பித்தாள்.

“என்ன அண்ணி. உன் பொண்ணை என் பையனுக்கு குடுக்கறதுல உனக்கு விருப்பம் இல்லையா” என்றார்.

லக்ஷ்மிக்கோ வியப்பு. தன் நாத்தனார் தன்னிடம் இந்த அளவுக்கு பொறுமையாக பேசியதில்லை என்று நினைவு வந்தது.

“இல்லை அண்ணி. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை.”

“அப்ப உன் புருஷன் கிட்ட சொல்ல வேண்டியது தானே”

(என் புருஷனா இத்தனை நாள் என் அண்ணன் என் அண்ணன்னு தானே சொல்வீங்க)

“நான் என்ன சொல்றது அண்ணி”

“என்ன இப்படி சொல்ற. பொண்ணை பெத்தவ நீ. இதுல முடிவெடுக்கற உரிமை உனக்கும் தானே இருக்கு.”

லக்ஷ்மி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

செல்வி உள்ளே எழுந்த கோபத்தை காண்பிக்க இயலாமல் “ஏன் அண்ணி உன் பொண்ணை நான் நல்லா பார்த்துக்க மாட்டேன்னு நினைக்கறியா. என் பையனுக்கு உன் பொண்ணை குடுத்தா அவ என் கூட இருக்கனும்ன்னு கூட அவசியம் இல்லை. என் பையன் திருச்சில தான் வேலை பார்க்கறான்.  அவங்க அங்கேயே கூட இருக்கலாம், எனக்கு என்னன்னா என் அண்ணன் பொண்ணைக் கட்டனா நம்ம சொந்தம் விட்டுப் போயிடக் கூடாதேன்னு தான்” என்றாள்.

இதைக் கேட்ட லக்ஷ்மிக்கோ “திருச்சில தான் இருக்க போறாங்கன்னா செல்வி பிரச்சனையும் இருக்காதே” என்று எண்ணினார்.

ஆனால் பின்பு தான் தன் கணவன் சொல்லிவிட்டு சென்றது நியாபகம் வந்தது.

“இல்ல அண்ணி. அவர் எங்கே என் பேச்சைக் கேட்கறாரு. இப்ப அவர் பார்த்திருக்கற சம்மந்தத்துல கூட நான் ஏதோ சொல்ல போனேன்னு அவர் நீ இதுல ஏதும் பேசாதன்னு சொல்லிட்டாரு”

செல்விக்கு கோபம் தலைக்கேறியது. “சரி நீ போ. நான் போய் ரெஸ்ட் எடுக்கறேன்” என்று விட்டு போய் விட்டாள்.

ராஜகோபாலுடன் சென்ற இளவரசன் “நீங்க உள்ளே போங்க மாமா. நான் இதோ வந்துடறேன்” என்றான்.

அவன் மொபைலை எடுத்து “மாமாக்கு இதுல சுத்தமா விருப்பம் இல்லை. உன் இஷ்டத்தை மீறி அவர் ஏதும் செய்ய மாட்டார். அவரே என் கிட்ட சொன்னார். சோ நீ ஏதும் பீல் பண்ணாத. எவரிதிங் வில் பி ஆல்ரைட்” என்று இனியாவிற்கு மெசேஜ் அனுப்பினான்.

உள்ளே சென்று லேன்ட் வாங்குவதை பற்றி பேசிக் கொண்டிருந்தாலும் அவன் மனது அங்கே இல்லை. திரும்ப திரும்ப மொபைலை எடுத்துப் பார்த்துக் கொண்டான் இனியா ஏதும் ரிப்ளை செய்கிறாளா என்று.

லேட்டாக அவன் மெசேஜய் பார்த்த இனியா “தான்க் யூ வெரி மச். இப்ப தான் ரிலிபா இருக்கு” என்று ரிப்லை செய்தாள்.

அங்கு லேன்ட் ரேட்டை கொஞ்சம் குறைத்துக் கொள்ளும் படி ராஜகோபால் பேசிக் கொண்டிருக்க இளவரசனோ இனியாவின் மெசேஜ் பார்த்து சிரித்து விட்டான்.

மற்ற இருவரும் கேள்வியாக நோக்க “பொதுவாக சாரி என்று சொல்லிவிட்டு ஒரு நிமிடம், இதோ வந்துடறேன்” என்று சொல்லி விட்டு வெளியில் சென்றான்.

“யூ ஆர் அல்வேஸ் வெல்கம்” என்று கூலிங் கிளாஸ் போட்ட ஸ்மைலி போட்டு ரிப்ளை செய்தான்.

னியாவின் வீட்டில் கோபமாக இருந்த செல்வி கோபத்துடன் ரூமில் இருந்தாள்.

தன் தமக்கைக்கு போன் செய்தாலாவது அவள் ஏதும் ஆலோசனை கூறுவாள் என்று எண்ணி சுதாவிற்கு போன் செய்தாள்.

“என்னாச்சி செல்வி, அண்ணன் கிட்ட பேசிட்டியா”

“என்னத்தை பேசறது. அவர் சரியாவே பிடி குடுக்க மாட்றாரு.

“என்னடி இப்படி சொல்ற. போகும் போது அவ்வளவு தைரியமா பேசிட்டு போன. இப்ப என்ன இப்படி சொல்ற, என்ன ஆச்சி சொல்லு”

“நான் எவ்வளவோ பேசிட்டேன் சுதா. அவரு நான் அவ்வளவு பேசினதுக்கும் அவர் சரியா எனக்கு பதிலே சொல்லலை. அதை விட பேச்சை திடீர்ன்னு விட்டுட்டு போயிட்டாரு. நான் இதை என்ன சொல்றது”

“ஏய் என்ன சொல்ற. பேசிட்டிருக்கும் போதே எப்படி பேச்சை விட்டுட்டு போவாரு”

“அதை ஏன் கேட்கற. நம்ம அண்ணன் இப்ப நம்ம அண்ணனா இல்லைன்னு தான் சொல்லணும். அதை நான் இன்னைக்கு நல்லா தெரிஞ்சிகிட்டேன்”

“சரி. அதை விடு. நீ ஏன் இன்னும் அங்கேயே இருக்க. வீட்டுல லக்ஷ்மி மட்டும் தானே இருக்கா. அவ கிட்ட கோபமா பேசிட்டு வந்திடு. இங்க கல்யாணத்துக்கு வந்து தானே ஆகணும். அப்ப நம்ம பேசிக்கலாம். நீ இப்படி உடனே கோபமா வந்தா தான் அண்ணனுக்கும் நம்மளோட அருமை தெரியும்”

“சரி சரி. நான் அப்படியே செய்யறேன்”. 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.