(Reading time: 24 - 48 minutes)

டுத்த நாள் காலையும் இதே கலாட்டா நடந்தது.

இளவரசன் இனியாவை அவள் ஹாஸ்பிடலிற்கு அழைத்துக் கொண்டு விடும் சாக்கில் அவளிடம் பேசலாம் என்று பார்த்தால் கரெக்ட்டாக அவனின் செக்ரெட்டரி வந்து விட்டார். அவனால் எங்கும் செல்ல இயலாத படி வேலை வந்து விட்டது.

அன்றும் இளவரசன் சீக்கிரமாக வர முயற்சி செய்து முடியாமல் போயிற்று. எப்படியோ 8 மணிக்கு வந்து சேர்ந்தான்.

அது வரை இனியா டிவி பார்ப்பது போல் அமர்ந்துக் கொண்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்றும் எல்லோரும் பேசி சந்துரு கலாட்டா செய்ய என்று எல்லோரும் சாப்பிட்டு முடித்தார்கள்.

இனியா அவள் அறைக்கு சென்று விட்டாள்.

இளவரசனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. நேற்றிலிருந்து அவள் அவன் கண் முன்னாடியே இருக்கிறாள். ஆனால் பேச இயலவில்லையே என்று எண்ணி எரிச்சலுற்றான்.

அவன் முன் வந்த சந்துரு “அண்ணா” என்று சிரித்தான்.

(இவன் வேற) என்று எண்ணியவனாக “என்னடா” என்றான்.

“நான் உனக்கு ஹெல்ப் பண்ணட்டுமா” என்றான்.

“நீ என்னடா எனக்கு ஹெல்ப் பண்ண போற. என் கூட கம்பெனிக்கு வரியா” என்றான்.

“உனக்கு போய் ஹெல்ப் பண்றேன்னு சொன்னேன் பாரு. என்னை சொல்லணும்.”

“ஹேய் என்னடா.”

“பின்ன என்ன. என் அண்ணி கிட்ட பேச உனக்கு ஹெல்ப் பண்ணட்டுமான்னு கேட்க வந்தா, என்னை வேலைக்கு வர சொல்ற” என்றான்.

“ஹேய் என்னடா சொல்ற.”

“அண்ணே எனக்கு எல்லாம் தெரியும். இப்ப அதெல்லாம் விடு. உனக்கு அண்ணி கிட்ட பேசணுமா வேண்டாமா.”

“பேசணும் தான். ஆனா அம்மா” என்றான் தயக்கமாக.

“இங்க கீழ அம்மாவை நான் பார்த்துக்கறேன். அவங்க டேபிலேட் போட்டு படுக்கற வரைக்கும் நான் கூட இருக்கேன் ஓகே. வா. நீ போய் அண்ணி கிட்ட பேசு.” என்றான் கண் சிமிட்டி.

“சரி” என்று எழுந்தான்.

“அண்ணே. நீ இது வரைக்கும் உருப்படியா எதுவும் பேசலைன்னு தெரியுது. இப்பவாச்சும் தேவை இல்லாம சண்டை போடறதை விட்டுட்டு உருப்படியா பேசு” என்றான்.

“எல்லாம் நேரம் டா” (இதெல்லாம் எப்படி தான் கண்டு பிடிக்கராங்களோ என்று எண்ணிக் கொண்டு)  இளவரசன் இனியாவின் அறை நோக்கி சென்று விட்டான்.

ளவரசன் இனியாவின் அறைக் கதவை மெதுவாக தட்டினான்.

இனியா கதவை திறந்தாள்.

இளவரசன் “உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

இனியாவிற்கு ஏனோ மனம் ஒரு நிலையிலே இல்லை. ஏதோ நெர்வஸாக பீல் செய்தாள்.

“ம்ம்ம்” என்றவாறு அவனை உள்ளே விட்டாள்.

இளவரசன் பேச வேண்டும் என்று கூறி விட்டு ஏதும் பேசாமல் இனியாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இனியாவால் அவனை பேஸ் செய்ய இயலவில்லை.

“பேசணும்ன்னு சொன்னீங்க” என்றாள்.

அவன் ஏதும் பேசவில்லை. அவனும் எப்படி சொல்வது என்று ஏதேதோ உள்ளுக்குள் யோசித்து டெமோ செய்து பார்த்தான். ஆனால் ஏதும் சொல்ல முடியவில்லை.

இனியா மறுபடியும் “ஹலோ” என்றாள்.

ஒரு முடிவுக்கு வந்தவனாக “இனியா ஏதேதோ சொல்லணும்ன்னு நினைக்கறேன். ஆனா என்னால ஏதும் சொல்ல முடியலை. முன்னாடி நான் உன் கிட்ட பேசினப்ப நான் தப்பா பேசியிருக்கலாம். நான் அப்ப உன் கிட்ட பேசினதே கூட தப்போன்னு, நான் தான் ஏதோ புரிஞ்சிக்காம பேசிட்டேனோன்னு கூட நான் நினைச்சேன்”

“ஆனா அன்னைக்கு, அந்த உங்க செல்வி அத்தை வந்திருந்த அன்னைக்கு நான் உன் கண்ணுல என் மேல உனக்கிருந்த அபெக்ஷன் பார்த்தேன் இனியா. வேற எதாச்சும் நடந்துடுமோன்னு உன் கண்ணுல பயத்தை பார்த்தேன். இப்பவும் அந்த அலையன்ஸ் பிடிக்கலைங்கறதுக்காக நீ அன்னைக்கு அப்படி பிஹேவ் பண்ணேன்னு மட்டும் சொல்லிடாத ப்ளீஸ். அன்னைக்கு நான் உன் கண்ணுல பார்த்த அபெக்ஷன் உண்மை. அதை பொய்யின்னு மட்டும் சொல்லிடாத” என்றான்.

இத்தனைக்கும் இனியாவிடம் சிறு அசைவு கூட இல்லை. இளவரசனையே விழி மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அன்னைக்கு முதல்ல உன் கிட்ட இதே விஷயத்தை பேசனதுக்கு அப்புறம் எனக்கு நிறைய கோபம் இருந்துச்சி. நான் என் ஸெல்ப் ரெஸ்பெக்ட் இழந்துட்டேன்னு கூட பீல் பண்ணேன். பட் அதெல்லாம் கொஞ்சம் நேரத்துக்கு கூட இல்லை.”

“உன்னை எதுக்காகவும் யாருக்காகவும் இன்க்லூடிங் என்னோட ஈகோ இந்த மாதிரி எதுக்காகவும் உன்னை இழந்துட்டு என்னால இருக்க முடியாதுன்னு தெரிஞ்சிடுச்சி. வித்அவுட் யூ, ஐ’யம் நோதிங் இனியா. நான் தப்பு பண்ணா என்னை திட்டிக்கிட்டு என் கூட சண்டை போட்டுக் கிட்டு என் கூட லைப் லாங் வருவியா இனியா” என்றான் கண்ணில் ஏக்கத்தோடு.

இனியா “இளா” என்று அழைத்துக் கொண்டே வந்து இளவரசனை கட்டிஅணைத்துக் கொண்டாள்.   

தொடரும்

En Iniyavale - 14

En Iniyavale - 16

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.