(Reading time: 24 - 48 minutes)

டுத்த நாள் வியாழக்கிழமை மாலை வேலை முடிந்ததும் இனியா அவள் அத்தை வீட்டிற்கு சென்றாள்.

அவள் கண்கள் இளவரசனை தேடின. ஆனால் அவனோ தென்படவில்லை.

ராஜலக்ஷ்மி அவளுக்கு காபி கொண்டு வந்து கொடுக்கையில் சந்துரு உள்ளே வந்தான்.

இனியாவை பார்த்து ஆச்சரியப் பட்ட சந்துருவிடம் அவன் தாய் இனியா இங்கே தான் மூன்று நாட்கள் இருக்க போவதாக கூறினார்.

சந்துரு புன்னகை புரிந்தான்.

“இரும்மா நான் போய் உனக்கு ஸ்னாக்ஸ் எடுத்துட்டு வரேன்” என்று அவர் உள்ளே சென்றார்.

இனியாவின் கண்கள் மட்டும் சுற்றி சுற்றி வந்தன.

அதைக் கண்ட சந்துரு “யாரையாச்சும் தேடறீங்களா” என்றான்.

இனியா அவசரமாக “இல்லையே அப்படி எல்லாம் இல்லையே” என்றாள்.

“இல்ல கண்ணை உருட்டிகிட்டே இருந்தீங்களா அதான்” என்றான்.

“ஓ அதுவா. வீட்டை சும்மா பார்த்தேன்”

“சரி சரி. வீட்டை நல்லா பாருங்க. எங்க அண்ணன் தான் வீட்ல இல்லை”

“ஓ இருக்கட்டும். அவர் இல்லன்னா என்ன இப்ப”

அதற்குள் ராஜலக்ஷ்மி வந்து விடவே இனியாவிற்கு நிம்மதியாக இருந்தது.

(அவள் மைன்ட் வாய்ஸ் கதறியது. ஒரு வேளை இவனுக்கு எதாச்சும் தெரிஞ்சிருக்குமோ)

டைம் ஆகி கொண்டே இருந்தது. ஆனால் இளவரசன் மட்டும் வரவில்லை.

ராஜலக்ஷ்மியும் இனியாவை சாப்பிட வரும்படி வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.

“இல்லை அத்தை. நீங்க ஸ்னாக்ஸ் வேற தந்தீங்களா. அதனால பசிக்கலை. இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்” என கூறிக் கொண்டே இருந்தாள்.

மணி 9.30 ஆகி விட்டதால் அதற்கு மேல் இனியாவின் பேச்சை கேட்காமல் அவளை டைனிங் டேபிளில் வற்புறுத்தி அமர வைத்தார்.

சந்துருவும் சிரித்துக் கொண்டே வந்து அமர்ந்தான்.

“அம்மா இந்நேரம் அண்ணன் வந்திருக்கணும் இல்லை” என்றான்.

இனியா சுவிட்ச் போட்டார் போல் நிமிர்ந்தாள்.

“ஆமாப்பா. எதாச்சும் வேலையா இருக்கும். வந்திடுவான். நீங்க சாப்பிடுங்க” என்றார்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்த இளவரசன் “இனியாவை பார்த்து ஆச்சரியப் பட்டு விழிகளை விரித்தான்”

சந்துரு “அண்ணா நம்ம வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்க பாத்தீங்களா. நம்ம கெஸ்ட் 3 நாள் நம்ம வீட்டுல தான் இருக்க போறாங்க” என்று தன் அண்ணனுக்கு விவரத்தை கூறினான்.

அதற்குள் அவன் அன்னை இளவரசனுக்கு எல்லாவற்றையும் கூறினார்.

இலவரசனுக்கோ உற்சாகம் தாங்கவில்லை. யாஹூ என்று எகிறி குதிக்க வேண்டும் போல் இருந்தது.

“நீங்க சாப்டுட்டே இருங்கம்மா. நான் போய் சீக்கிரம் ரீபிரெஷ் பண்ணிட்டு வந்திடறேன்” என்று விட்டு மாடி படிகளை உற்சாகமாக கடந்தான்.

இனியாவோ அவனும் வரட்டும் என்று நினைத்து உணவை பருக்கைகளாக எண்ணி எண்ணி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

சந்துரு “என்ன அண்ணி ஏன் இப்படி எண்ணி எண்ணி சப்படறீங்க” என்றான்.

இனியா அவனை பார்த்து “சந்துரு நீங்க ஏன் என்னை அண்ணின்னு கூப்படறீங்க. என்னை இனியான்னே கூப்பிடுங்க” என்றாள்.

“இல்லல்ல. ஜோதி அண்ணியை அண்ணின்னு கூப்பிடறேன் இல்ல. அதான் அவங்க தங்கச்சி உங்களையும் அண்ணின்னு கூப்பிடறேன்”

“இல்ல சந்துரு. மாமாவை நீ அண்ணன்னு கூப்பிடற, அதுவும் இல்லாம அக்கா உங்களை விட பெரியவ. அதனால நீ அவளை அண்ணின்னு கூப்பிடு. பட் என்னை வேண்டாம்”

“நோ நோ. நாளைக்கு உங்களை கல்யாணம் பண்றவரையும் நான் அண்ணான்னு தான் கூப்பிடுவேன். சோ நான் இப்பவே உங்களை அண்ணின்னு கூப்பிட்டு பழகிக்கறேன். அப்புறம் எனக்கு தான் கஷ்டம்ப்பா” என்று கூறி சிரித்தான்.

இனியாவிற்கு இப்போது நன்றாக விளங்கியது. அவனுக்கு கண்டிப்பாக ஏதோ தெரிந்திருக்க வேண்டும். அதான் அவன் அப்படி பேசுகிறான். என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கையிலே இளவரசன் அவசரமாக படி இறங்கி வந்தான்.

“அம்மா. வாட் எ மிராக்கில். பாருங்களேன் அண்ணன் இவ்வளவு சீக்கிரமா வந்திருக்காரு” என்றான்.

இளவரசனோ “சும்மா இருடா” என்று கூற

இனியாவோ “ஏன்” என்று கேட்டாள்.

“இல்லை அண்ணி. எங்க அண்ணன் குளிக்கறதுக்கு அட்லீஸ்ட் ஒரு ஒன் அவர் ஆகும். இப்படி ரீபிரெஷ் பண்ணிட்டு வரவும் கிட்டத்தட்ட் ஒரு அரை மணி நேரம் பண்ணிடுவாரு. அதான்” என்றான்.

“ஏய் தேவை இல்லாம பேசிக்கிட்டு. பேசாம சாப்பிடு டா. அம்மா நீங்க எனக்கு சாப்பாடு போடுங்க. அப்படியே நீங்களும் சாப்பிடுங்க வாங்கம்மா” என்று பேச்சை மாற்றினான்.

ஆனால் சந்துரு மட்டும் சிரித்துக் கொண்டே இருந்தான்.

“டேய் தேவை இல்லாம சிரிக்காத.”

“நான் தேவை இல்லாம சிரிக்கறேன்னு உன் கிட்ட சொன்னேனா அண்ணா. நான் ஏன் சிரிக்கறேன்னு வேணும்ன்னா சொல்லட்டுமா” என்றான்.

“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். அம்மா அந்த பொரியல் கொஞ்சம் எடுங்க” என்று இளவரசன் தான் திரும்ப பேச்சை மாற்ற வேண்டியதாயிற்று.

பின்பு இருவரும் ஒருவரையொருவர் பார்க்காதது போல் பார்த்துக் கொண்டே சாப்பிட்டனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.