(Reading time: 24 - 48 minutes)

ன்ன அண்ணி. பேக் எல்லாம் எதுக்கு எடுத்துட்டு வரீங்க.”

“ம்ம்ம். என்ன பண்ண சொல்ற. உன் புருஷன் பேசனதுக்கு இங்க இருந்து விருந்து சாப்பிட சொல்றியா. நான் போறேன். அப்பா அம்மா போனதுக்கு அப்புறம் அண்ணன் தான் எல்லாம்ன்னு நினைச்சி வாழ்ந்ததுக்கு இன்னைக்கு நல்லா பாடம் கிடைச்சிடுச்சி. நான் போறேன்”

“ஏன் அண்ணி ஏதேதோ பேசறீங்க. இருங்க. எதுவா இருந்தாலும் உங்க அண்ணன் வந்துடட்டும். அப்புறம் பேசிக்கலாம். இதெல்லாம் ஒரு நாள்ல பேசற விஷயமா”

“எதுவும் பேச வேணாம். அதான் தங்கச்சி முக்கியம் இல்லைன்ற மாதிரி எவன் கூடவோ கிளம்பி போயிட்டாரு இல்ல”

“அது ஒன்னும் யாரோ இல்ல” என்று கூறிவிட்டு பாதியிலே நிறுத்தி விட்டார் லக்ஷ்மி. அப்புறம் தான் தன் கணவன் இளவரசனை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு தன் தங்கையுடன் அவர் யார் என்று கூறவில்லை என்பது தோன்ற பேச்சை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.

“என்ன அது ஒன்னும் யாரோ இல்லை. அவன் உங்களுக்கு யாரா வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும். ஆனா என்ன விட முக்கியமா”

“இல்ல அண்ணி. அப்படி எல்லாம் இல்லை. அவர் ஏதோ வேலையா போயிருக்காரு. அவர் வந்துடட்டும் அண்ணி”

“ஒன்னும் தேவையில்லை. எப்படியும் கல்யாணத்துக்கு வருவீங்க இல்ல. அப்ப பேசிக்கலாம்” என்று கூறிவிட்டு வேகமாக கிளம்பி சென்று விட்டார்.

மாலையில் வீட்டிற்கு வந்த இனியா இப்போது என்ன வெடிகுண்டை தாங்க வேண்டி இருக்குமோ என்று எண்ணிக் கொண்டே கொஞ்சம் பயந்தவாறு வந்தாள்.

ஆனால் வீடே நிசப்தமாக இருந்தது.

“அம்மா அம்மா” என்று மெதுவாக அழைத்தாள். தன் குரல் கேட்டு அத்தை வந்து விட கூடாதே என்ற நல்ல எண்ணத்தில் தான்.

எந்த பதிலும் இல்லாததால் சமயலறைக்கு சென்றாள். லக்ஷ்மி அங்கே ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவர் இனியாவை பார்த்து “வந்துட்டியா. இரு காபி போட்டு தரேன்” என்றார்.

“அதெல்லாம் இருக்கட்டும். அது எங்கே” என்றாள்.

“இனியா” என்று அவள் தாய் முறைக்கவும்,

“சரி சரி, அத்தை எங்கே”

லக்ஷ்மி காலையில் நடந்ததை எல்லாம் விளக்கமாக கூறவும், இனியா “அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு. இப்ப காபி போட்டு எடுத்துட்டு வாம்மா” என்று ஹாலிற்கு சென்று அமர்ந்தாள்.

அவளை தொடர்ந்து வந்த லக்ஷ்மி “ஏண்டி நீ தான் எப்பவும் உங்க அத்தைக்கு எதிரா கொடி பிடிப்ப. இப்ப என்ன நீயே பதுங்கி இருக்க” என்று கேட்டார்.

ஒரு நிமிடம் யோசித்த இனியாவும் “இல்லம்மா. அப்ப அவங்க உனக்கு எதாச்சும் பிரச்சனை கொடுப்பாங்க. அப்ப நான் அதை எதிர்த்து பேசுவேன். இப்ப அவங்க சொல்றது பிடிக்கலைன்னாலும் அதை எப்படி எதிர்த்து அப்பா கிட்ட பேசறதுன்னு எனக்கு தெரியலை” என்றாள்.

“சரிடா விடு. நீ ஏதும் பீல் பண்ணாத. நான் போய் உனக்கு காபி எடுத்துட்டு வரேன்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றார்.

இனியா முதல் வேலையாக தன் மொபைலை எடுத்து “அத்தை ஊருக்கு போயிட்டாங்க. இப்போதைக்கு நோ ப்ராப்லம்” என்று இளவரசனுக்கு மெசேஜ் அனுப்பினாள்.

இளவரசனும் “எப்போதைக்குமே ப்ராப்லம் இருக்காது. நீ பீல் பண்ணாத” என்று அனுப்பினான்.

இனியா வெறும் ஸ்மைலீ மட்டும் திரும்ப அனுப்பினாள்.

இருவருக்குமே காலையிலிருந்து இருந்த டென்ஷன் மறைந்து ரிலாக்ஸாக அமர்ந்தார்கள்.

மறுபடியும் இருவரும் மெசேஜில் இருவரும் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

ப்படியாக சில நாட்கள் கடந்து ராஜகோபாலும் லக்ஷ்மியும் தஞ்சாவூருக்கு அந்த திருமணத்திற்கு செல்ல வேண்டிய நாளும் வந்தது.

“என்னங்க. நாளைக்கு நாம கிளம்பி போயே ஆகணும்” என்றார் லக்ஷ்மி.

“ம்ம்ம். அதான் நானும் யோசிக்கறேன்”

“இதுல யோசிக்க என்ன இருக்கு”

அப்போது ராஜலக்ஷ்மி வந்தார்.

“வாம்மா வாம்மா.” என்றார் ராஜகோபால்.

“போங்கண்ணே இங்க வந்தா நல்லா கவனிங்க. நீங்க மட்டும் அங்க வராதீங்க.”

“வர சந்தர்ப்பம் அமையலம்மா. உன் வீட்டுக்கு தானே நான் எப்ப வேணும்னாலும் வரலாம் இல்ல” என்றார்.

“ம்ம்ம் வரலாம் வரலாம். ஆனா இப்படி எல்லாம் சொல்லிட்டு வர மட்டும் மாட்டீங்க.”

“ஐயய்யோ அப்படி எல்லாம் இல்ல ராஜீ. சரி விடு. இனி உன் வீட்டுக்கு வாரத்துல ஒரு நாள் கண்டிப்பா வந்துடறோம். சரியா”

“பார்க்கலாம் பார்க்கலாம்”

அப்படியே அனைவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது நினைவு வந்தவராக லக்ஷ்மி “ஏங்க அந்த கல்யாணத்துக்கு போறதை பத்தி யோசிக்கறேன்னு சொன்னீங்க இல்ல. அதை பத்தி என்ன யோசிக்கறீங்க”

“எந்த கல்யாணம் அண்ணே. அந்த கிருஷ்ணன் பையனுக்குன்னு சொன்னியே அதுவா”

“ம்ம் ஆமாம்மா.”

“அந்த பையன் எல்லாம் இளவரசனை விட சின்னதா தான் இருக்கும். இவனை விட சின்னதுங்களுக்கு எல்லாம் கல்யாணம் நடக்குது. இவன் ஒத்துக்க மாற்றானே.”

“அதெல்லாம் நீ பீல் பண்ணாத. நடக்க வேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டா நடக்கும். இப்ப அப்படி என்ன வயசாயிடுச்சி. அதுவும் சும்மா ஊர் சுத்த ஆசைப் பட்டா கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றாங்க. எப்படி உழைச்சி முன்னேறதுன்னு எல்லாருக்கும் எடுத்து காட்டா இருக்கற புள்ளையை போய் குறை சொல்லிக்கிட்டு”

“சரி விடு ராஜாண்ணே. நீ உன் மருமகனை விட்டு குடுப்பியா”

அனைவரும் சிரித்துக் கொண்டனர்.

“என்னங்க. அதெல்லாம் சரி. இந்த கல்யாணத்துக்கு போறதை பத்தி பேசுங்க.”

“இல்லை. நாம இனியாவை எப்படி தனியா விட்டுட்டு போறதுன்னு தான் யோசிக்கறேன்”

“நாம ஏங்க இனியாவை இங்க விட்டுட்டு போக போறோம். இனியாவையும் கூட்டிட்டு போகலாம். வயசு பொண்ணை வெளியில அனாவசியமா கூட்டிட்டு போக கூடாது தான். ஆனா அந்த கிருஷ்ணன் உங்க சொந்த அத்தை பையன் தானே. இந்த மாதிரி ரொம்ப சொந்தத்து கல்யாணத்துக்கு கூட கூட்டிட்டு போகலைன்னா எப்படிங்க”

“நீ எப்ப தெளிவா பேசற, எப்ப தெளிவில்லாம பேசறன்னு எனக்கு புரியவே மாட்டேங்குது லக்ஷ்மி”

“ஏங்க நான் இப்ப அப்படி என்ன சொல்லிட்டேன்”

“பின்ன என்னவாம். என் தங்கச்சி சும்மாவா போயிருக்கா. இந்த கல்யாணத்துக்கு வாங்க. அப்ப பேசிக்கறேன்னு சொல்லிட்டு போயிருக்கா. எனக்கு தெரியும். அவ இந்த கல்யாணத்துல எதாச்சும் பேச்ச பேசுவா. இதுல நாம இனியாவை வேற கூட்டிட்டு போனோம்ன்னா நல்லா இருக்காது. ஜோதியும் கல்யாணத்துக்கு வந்தாகணும். நாமளும் கட்டாயம் போயாகனும். அதான் இனியாவை எப்படி தனியா விட்டுட்டு போகறதுன்னு யோசிக்கறேன்”

இடையில் புகுந்த ராஜலக்ஷ்மி “ஏன் நீங்க இனியாவை தனியா விட்டுட்டு போக போறீங்க அண்ணே. ஏன் என் வீடு இல்லையா. என்னை கூட வச்சிகிட்டே இப்படி பேசினா நான் என்னை நினைக்கறது. நீங்க என்னை எந்த லெவல்ல வச்சிருக்கீங்க” என கோபமாக கேட்டார்.

முதலில் திகைத்த ராஜகோபால் “எதுக்கும்மா உனக்கு இந்த கோபம். நம்ம செல்வி பண்ணிட்டு போன கூத்துல இருந்தே நான் இன்னும் வெளியே வரலை. அதுல ஊருக்கு போனா என்ன பண்ணுவாளோன்னு நினைச்சாலே திகிலா இருக்கு. அதான் எனக்கு இது தோணாம போச்சி. அதுக்குள்ளே நீ ஏன் என்னை இப்படி பொரிஞ்சி தள்ளர. எனக்கு ஏதோ நேரம் சரி இல்லைன்னு நினைக்கறேன்.” என்றார் சோகமாக.

“ஐயய்யோ என்னை மன்னிச்சிண்ணே. நீங்க என்னை பத்தி யோசிக்கவே இல்லன்ன உடனே எனக்கு கோபமா வந்துடுச்சி. ஏதோ தெரியாம பேசிட்டேன்”

“சரி விடும்மா. இப்ப இனியாவை பத்தி கவலை பட வேண்டியது இல்லை. அதுவே எனக்கு நிம்மதியா இருக்கு. நாளைக்கு நைட் நாங்க கிளம்பறோம். வெள்ளி கிழமை காலைல நாங்க அங்க போவோம். கல்யாணம் என்னவோ ஞாயிற்று கிழமை தான். இவ தான் நாளைக்கே கிளம்பி போகணும்ன்னு சொல்றா”

“ஆமாண்ணே. நெருங்கின சொந்த காரங்க எல்லாம் ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்துடுவாங்க இல்ல. நீ ரெண்டு நாளுக்கு முன்னாடி கூட போகலைன்னா எப்படி”

“அது சரி. வெள்ளிக்கிழமை காலைல அங்க போயி ஞாயிற்றுக்கிழமை நைட் அங்கருந்து கிளம்பற வரைக்கும் என் தங்கச்சி என்ன பேசுவாலோன்னு நான் பயந்துட்டே இல்ல இருக்கணும்”

“அதெல்லாம் விடுண்ணே. இதை நினைச்சி நீ பயந்துட்டே இருக்காத. அதெல்லாம் ஒன்னும் ஆகாது”

“ம்ம்ம். பார்க்கலாம். போயிட்டு வந்து தான் தெரியும். நாளைக்கு வேலை முடிஞ்சா உடனே இனியாவை அங்க நேரா உன் வீட்டுக்கு வந்துட சொல்லு. மூணு நாள் உன் வீட்டுலையே இருக்கட்டும். நாங்க திங்கட்கிழமை காலைல தான் வருவோம். திங்கட்கிழமையும் அவ அங்கிருந்தே வேலைக்கு போகட்டும். சரியா”

“சரிண்ணே. அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.