(Reading time: 31 - 62 minutes)

தீபாவளிக்கு பட்டு பாவாடைக்கு  ஆர்டர் குடுத்துட்டேன். பசங்களுக்கு என்ன வாங்கலாம்னு காதிகிட்ட ஐடியா கேட்டதுக்கு இருந்து இருந்தும் கேன் ஓப்பனரைப் போய்  வாங்கி குடுங்கிறான். ” என்றாள் மது.

 

அவள் சொன்னதும் சந்தியாவின்  கன்னங்களில் புது இரத்தம் பாய்ந்தது..நாணமேறிய முகத்தை வேடிக்கை பார்ப்பது போல ஜன்னல் பக்கம்  திருப்பி “ஹம்..க்கும்…அந்த சாக்குல தான சந்துல சிந்து பாடினான்“ என மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டே உதட்டோர புன்னகை உதிர்த்தாள்...

 

ன்பு இல்லத்திற்குள் நுழைந்தவுடன் மது ஹர்ஷினியை பார்க்க செல்லும் முன் அவளை அழைத்து, “மது ஒரு குழந்தையை சொந்தம் கொண்டாட நினைக்காம எல்லா குழந்தைகளும் உன்  கூட பிறந்த சொந்தமா நினை!” என்று  அறிவுருத்தினாள். மது  ஒப்புதலாக தலையாட்டி புன்னகைத்து விடை பெற, சந்தியாவும் அர்ஜூன் வயது மாணவர்களுக்கு ட்யூஷன் எடுக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

 

“ஒருவன் 75% நேரம் உண்மை பேசுகிறான். அவன் ஒரு பகடைக் காயை  சுழட்டி விழுந்தது ஆறாம் எண் என்கிறான். அது உண்மையாக இருக்கும் வாய்ப்பை கூறுக”

 

ஆங்கிலத்தில் அவர்களிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து கார்த்திக்கின் அழைப்பு போனில் வர, “இதுக்கு பதில் கண்டுபிடிங்க. நான் போன் பேசிட்டு வந்துடுறேன்” என்று சொல்லி அந்த அறையை விட்டு வெளியேறி வந்த அழைப்பை எடுத்தாள்.

 

“ஹே...சந்தியா”, கார்த்திக்.

 

“கார்த்திக்”, சந்தியா.

 

“பிசியா ?”  படபடப்பாக கேட்டான் கார்த்திக்.

 

“அன்பு இல்லத்தில ட்யூஷன். ஏதாவது முக்கியமா?”

 

“ஆமா... முக்கியமான விஷயம் டிஸ்கஸ் பண்ணனும். ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் தான். சீக்கிரம் வீடியோ சேட்க்கு வா”, அவசரப்படுத்தினான்.

“எதுக்கு வீடியோ சேட்?”, என்னவென்று புரியாமல் கேட்டாள்.

 

“வீடியோ கால் அட்டென்ட் பண்ணு சொல்றேன்”சொல்லி விட்டு இணைப்பை துண்டித்து  வீடியோ காலாக அழைத்தான்.

 

விடியோ இணைப்பில் அவள் பிம்பம் தெரிந்ததும் அவளை பார்த்தவனின் பார்வையில் இருந்து தப்ப முடியாமல்,

 

“ம்ம்??? என்ன விஷயம்?” புருவத்தை உயர்த்தி பார்வையை கேள்வியாக்கினாள்.

 

அதை அவன் கண்டு கொள்ளவே இல்லை...“க்ளோஸ் அப்ல இருக்க. இன்னும் கொஞ்சம் போனை தள்ளி வை”,

 

கையில் போனை பிடித்த படி கையை நீட்டி  சற்று தள்ளி வைத்து அவனை பார்க்க,

 

அவனோ கன்னத்தில் கையை வைத்த படி அவளை பார்த்துக் கொண்டே இருந்தான். அவளால் நேருக்கு நேர் பார்க்க இயலாமல் விழியை அகற்றினாள்.

 

“நிஜம் தானே கேளடி

நினைவெல்லாம் நீயடி

நடமாடும் பூச்செடி

நீ என்னை பாரடி”

 

அவன் பாடியதும் வேறு வழியில்லாமல் மீண்டும் அவனை பார்த்து “கார்த்திக், பசங்க வையிட் பண்ணுவாங்க. போகணும்”, கெஞ்சலாக கேட்டாள்.

 

“கண்டிப்பா போகணுமா?”, அவளை முழுங்குவது போல பார்த்துக் கொண்டே..

 

“ம்ம்”, என்று இழுத்தாள்.

 

“சரி… உன் அக்மார்க் ஆசை தோசையை சொல்லிட்டு போ”

 

“என்னது?”

 

“ஆசை தோசை செப்பு”,

 

“எதுக்கு?”

“லேடி சாக்ரடீஸ்...ஏன் எதுக்கு கேள்வி எல்லாம் அப்புறம்...இன்னும் பைவ் மினிட்ஸ் தான் டைம் இருக்கு..சீக்கிரம்", அவசரப் படுத்தினான்.

 

“அவன் அவன் ஐ லவ் யு சொல்ல சொல்லி விரட்டுவான்...இவன் என்னடான்னா ஆசை தோசை சொல்ல சொல்றான். சரியான பழுத்த பழனியப்பா” மனதிற்குள் அவனை செல்லமாக கடிந்து கொண்டு,

 

“ஏதோ முக்கியமான விஷயம்ன்னு சொன்னீங்க”, விழி விரிய கேட்டாள்.

 

“ஆமா...ஆனா பசங்க வேற வெயிட் பண்ணுவாங்க.  நீ போகணுமே!  நாளைக்கு முக்கியமான விஷயம் பேசலாம். இப்போதைக்கு ஆசை தோசை மட்டும் சொல்லிட்டு கிளம்பு.”

 

“ஆசை தோசை… சொல்லிட்டேன். பை” என கிளம்ப முற்பட்டவளை தடுத்தவன்,

 

“ஓடுறதுலே இருக்க சந்தியா… எப்பவும் ஒரு பாவனையோடு சொல்லுவியே.. அப்படி என்னைப் பாத்து சொல்லு ” என்றான்.

 

“இவர் பெரிய அருள் விக்ரம்...என்ன பாத்து சொல்லு. என் கண்ணைப் பாத்து சொல்லுன்னு பஞ்ச்  குடுக்கிறார் ஹூம்”, என்று எண்ணிக் கொண்டே,

 

“ஆசை தோசை”, கதக்களி கலைஞன் போன்று  வேண்டும் என்றே விழிகளையும் புருவத்தையும் வளைத்து நெளித்து ஒடித்து அதீத பாவனை காட்ட,

 

”பயமுறுத்துனாலும் என் பேய்  அழகு தான் ”,  என்றான் அதில் சொக்கி போனவனாய் கிறங்கிய குரலில்.

அவன் பார்வையும் பேச்சும் ஒரு வேகத்தில் குறும்பாக பாவனை காட்டியவளை வெட்கப் பட வைத்தது…கன்னம் சிவக்க,  வேறு திசையில் ஏதோ குரல் கேட்டு திரும்புவது போல திரும்பி,

 

”அஜூ ….கூப்பிடுறான் ”, அவன் புறம் திரும்பாமலே சொன்னாள்..

“அப்படியா? எனக்கு கேக்கலையே... “ சந்தேகமாய் வினவினான் கார்த்திக்.

 

அதை சட்டை செய்யாதது போல “ம்ம்….இதோ வர்றேன்” அர்ஜூனுக்கு பதிலளிப்பது போல நடித்து விட்டு போனின் திரையை பார்த்து,

 

“நாளைக்கு பாக்கலாம். பை கார்த்திக்”, என்று விடை பெற முனைந்தாள்.

 

“நாளைக்காவது பாப்பியா…இல்ல இதே மாதிரி வெட்கப்பட்டு ஓடிடுவியா” அவளை குறும்பாக பார்த்த வண்ணம் கேட்டான்...இலவச இணைப்பாக உதட்டோர புன்னகையை சேர்த்துக் கொண்டான்.

 

மனதை படித்து விட்டவனை சமாளிக்க, “ம்க்கும்...ஆசை தோசை அப்பள வடை” இதயம் பட படக்க கட கடவென சொல்லிவிட்டு வீடியோ அழைப்பை துண்டித்து ரகசியமாய்  புன்னகைத்தாள்….

 

“தேட் இஸ் மை ஸ்வீட் பேய்…” என்று சொல்லிக் கொண்டே அவளின் பிம்பம் தெரிந்த இடத்தில் முத்தமிட்டவன். “ஐ மிஸ் யுவர் மொக்கை...மயக்கு மோகினி” என்றான்    ஏக்க பெருமூச்சு விட்டவாறு.

 

ன்று வீடு திரும்பிய மதுவிற்கு சந்தியா சொன்னதே மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது. “நம்மைளையும்  எட்டு வருஷமா ஒருத்தன் லவ் பண்றானா? இந்த சந்து சும்மா சொல்றாளா? இவ பேசுறதுல பாதி  பொய்யாத் தான் இருக்கும்.” என்று எண்ணிக் கொண்டே சந்தியாவை மீண்டும் அழைத்தாள்.

 

சந்தியா சக்தியுடன் இரவு உணவை முடித்து விட்டு, அப்பொழுது தான் அலுவலக வேலையை பார்க்க மடி கணினியை தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பி அது சோம்பல் முறித்து விழிப்பதற்காக காத்திருந்தாள். மது ஏழாவது முறையாக அழைப்பதை பார்த்து “மறுபடியுமா??? முருகா...என்னைக் காப்பாத்து!!!” என்று எண்ணிக் கொண்டவள் ,

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.