(Reading time: 31 - 62 minutes)

ல்லாம் நடக்கணும்ன்னா வேலையை காலா காலத்தில் முடிக்கணும். சனிக்கிழமை டிக்கெட் புக்… பூமா கூப்பிட்டு இருந்தாங்களே! சரண் நமக்கு வில்லன் ஆவானா? இவகிட்ட நிஜமாவே மாற்றம் தெரிஞ்சதா...இல்ல இந்த மயக்கு மோகினியை பாத்த மயக்கத்தில நமக்கா  ஓகே ஆனது மாதிரி தோணுதா….” என நெஞ்சில் பயம் பரவியது. அவளை அழைக்க கண்களை விழித்த பொழுது தான் உணர்ந்தான் அவன் படுக்கையில் தூங்கவில்லை, தன்னையறியாமல் நாற்காலியில் அமர்ந்த நிலையிலே  இரவு முழுவதும் தூங்கியிருப்பது…

 

“அய்யோ...எப்போ அசந்தேன்! இன்னும் பாதி வேலை முடிக்கலையே…”, பதறியவாறு வேலையை முடிப்பதில் கவனம் செலுத்தினான்.

 

அன்று முழுவதும் அலுவலகத்தில் வேலை பளு அதிகமாக இருந்தது. பணி ஒப்பந்தத்தின் படி வெள்ளிக்கிழமைக்குள் முடித்து கொடுத்து விட வேண்டும். அந்த நிறுவனத்தின் முக்கியமான நிதி முதலீடு அவன் கொடுக்க போகும் அறிக்கையை வைத்து இருந்தது. அதனால் இதில் மிகக் கவனமாக அவன் கணிப்புகளை பட்டியலிட  வேண்டும். நியூ யார்க் நகரின் மையப் பகுதியில் இருக்கும் அந்த புகழ்பெற்ற பன்னாட்டு வங்கியிலிருந்து அவன்  ஹோட்டல் அறை நடக்கும் தூரத்திலே இருந்தது.  பரபரப்பாக இயங்கும் நியூயார்க் நகர வீதிகளில் நடப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். நாள் முழுதும் கணினிக்குள் திணித்து வேலை வாங்கிய  புலன்களை சுற்றுலாக்கு கூட்டிச்  சென்றது போலிருக்கும்!

 

ன்று தாமதமாகவே வந்தவன் இரவுக் குளியலை முடித்து விட்டு, மலேசியா குழுவினருடன் தனது மென்பொருள் வேலையை ஆரம்பிக்க முனையும் பொழுது இரவு பத்தை நெருங்கியது… நாள் முழுதும் கணியின் முன் அகப்பட்ட மூளையை  அடுத்த வேலையை ஆரம்பிக்கும் முன் சற்று தளர்த்த எண்ண, அதுவோ இப்பொழுது அவனின்  அவளிடம் அகப்பட்டுக் கொண்டது. ஒரு நாள் அவளிடம் பேசாதாது எதையோ பேரிழப்பை சந்தித்தது போல இருந்தது….அவளை அழைத்தான். எடுக்கவில்லை…”இந்த நேரம் நம்ம வீட்டில இருப்பா” என வீட்டிற்கு அழைத்தான்.

 

நியூ யார்க் நகரத்தில் அந்த நாளை ஒரு முடிவிற்கு கொண்டு வர  ஓட்டம் பிடித்த சூரியன் இந்தியாவில் அடுத்த நாளை துவங்கி எட்டு மணி நேரம் ஆகியிருந்தது…விந்தையாக தோன்றும் மாயை! ஆதவன் தான் மேற்கும் கிழக்கும் ஓடுகிறான் என்கிறோம்!!! உண்மையில்  நாம் அல்லவா பூமி பந்தில் உட்கார்ந்து கொண்டு அவனை சுற்றி வருகிறோம்...ஈன்றெடுக்கும் தாய் கூட பத்து மாதம் தான் சுமக்கிறாள்… பூமித்தாயோ நாம் மடிந்தாலும் சுமக்கிறாளே! அதற்கு மனித இனம் செய்த கைம்மாறு தான் ‘க்ளோபல் வார்மிங்’.

 

மே 24, வியாழக்கிழமை

ன்று வைகாசி விசாகம். முருகன் அவதரித்த நாளாக கருதப்படும் நாள். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து அன்று விரதம் விட முடிவு செய்தனர் சந்தியாவும் சக்தியும்.

 

வீட்டிற்கு அழைத்த கார்த்திக்கின் அழைப்பை சௌபர்ணிகா எடுத்தார். பொது விசாரிப்புகளுக்கு பின், “ஆர்ட் எக்சிபிஷன் வேலை எந்த அளவுக்கு போயிட்டு இருக்கு மம்மி?” என கேட்க,

 

“சந்தியா ஹெல்ப் பண்றாளே! நல்லா போயிகிட்டு இருக்கு.  வைகாசி விசாகம்ன்னு  மது கூட கோவிலுக்கு போயிட்டா. அதான் இன்னைக்கு பெயின்ட் பண்ணல.” என்ற சௌபர்ணிகாவின் குரலில் இருந்த ஆர்வம் அவருக்கு ஓவியத்தின் மேல் இருந்த நாட்டத்தை உணர்ந்தியது.

 

“ம்ம்…கோவில்ல இருக்கிறதுனால போனை எடுக்கலையோ???”, என யோசிக்கும் பொழுது, சௌபர்ணிகாவே தொடர்ந்தார்.

 

“சாயங்காலம் வள்ளி திருக்கல்யாணம் பார்க்க நானும் அப்பாவும் கோவிலுக்கு போறோம்”  என்றார் மேலும் ஆர்வமாக.

 

“டாடி கோவிலுக்கே போறதில்லையே… அவங்களுமா? ” என்றான் வியப்பாக.

 

“அது என்னன்னா சந்தியா அப்பாவுக்கு ஹோம் வொர்க் குடுத்திருக்கா… தினமும் கண்ணுக்கு இதமா ஏதாவது ஒரு புது விஷயம் பாக்கணுமாம்…இன்னைக்கு வள்ளித் திருக்கல்யாணத்தில் இருந்து ஆரம்பிக்க சொல்லியிருக்கா. இத்தனை வருஷமா நான் கூப்பிட்டு கோவிலுக்கு வராதவர்  அவ ஒரு வார்த்தை சொன்னதும் சட்டுன்னு   சரின்னுட்டார்”  அவர் பேச்சில் பொறாமை எட்டி பார்க்க,

 

“இப்போவே பைட் ஆரம்பிச்சிருச்சு போல” மனசுக்குள் நினைத்து சிரித்துக் கொண்டே,

 

“மம்மி, அவளுக்கு நீங்க அதிகமா இடம் கொடுக்கிறீங்க. அதான் “, இன்னும் பத்த வைத்தான்.

 

“என்ன பண்ண? அவளுக்கு இருக்கிற அக்கறை கூட உனக்கு இல்லையே! ”, சற்று காட்டமாக சொன்னார் சௌபர்ணிகா.

 

“என்ன மம்மி திடீர்னு கோபப்படுறீங்க?” என்றான் திகைப்பாக.

 

“அமேரிக்கா போய் ஐந்து நாளாச்சு. என்னைக்காவது எங்களுக்கு போன் பண்ணனும்ன்னு நினைவு வந்ததா? அப்பா லேட் நைட் போன் வந்தாலே நீ தான் எதிர்பார்கிறதும், நீ இல்லன்ன உடனே ஏமாந்து போறதையும் பாக்க பாவமா இருக்கு. அங்கு போய் சேர்ந்ததை கூட மதுக்கு போன் பண்ணி சொல்ல சொல்ற.  இது என்ன புது பழக்கம்? தினமும் அப்பாவை விசாரிப்ப…..இப்போ என்ன ஆச்சு? “, என கண்டித்தார்.

 

இத்தனை நாள் காதல் மயக்கத்தில் உயிருக்கு உயிரான தந்தையை விசாரிக்காமல் விட்டு விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் துவண்டவன், “சாரி மம்மி. தப்பு தான்.” தயங்கிய குரலில் கவலையுடன் சொன்னான்.

 

“இனி கண்டிப்பா டாடிட்ட மிஸ் பண்ணாம பேசுவேன்”,  உறுதியாக சொன்னான்.

 

மகன் குற்ற உணர்வை அறிந்த சௌபர்ணிகா அவனை சமாதானப் படுத்தும் நோக்கில், “இப்பல்லாம் நீ ஊருக்கு போனா அப்பா ரொம்ப தேடுறாங்க.   நீ ஒரு நிமிஷம் பேசுனா கூட போதும் காதி. அதான் சொன்னேன். மத்தபடி, அப்பா நல்லாயிருக்காங்க. சந்தியா போல மருமகள் வந்தா இன்னும் நல்லாயிருப்பாங்க ” என்றார் ஆசையுடன்.

 

அவர் சொல்வதை கேட்டு நெடிய மூச்சை விட்டவன், “மம்மி மது கல்யாணம் தான் முதல்ல! இப்போ தான் கொஞ்ச நாளா அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்னை நச்சரிக்கிறதை  விட்டிருக்கா.  இந்த நேரம் எனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணா வருத்தப்படுவா. வேண்டாம். அவ மனசு மாறட்டும். அப்புறம் பார்க்கலாம். சரி அப்பாவை கூப்பிடுங்க“ என்று சொல்லி விட்டு சதாசிவத்தை அழைக்க சொன்னான்.

 

கோவிலுக்கு செல்லும் வழியில் கைப்பைக்குள் வைத்திருந்த செல்போன் அதிக நேரம் அடிக்க, அதை கண்டு பிடித்து எடுப்பதற்குள் ஒலி எழுப்பி ஓய்ந்து விட்டது. கார்த்திக்கின் அழைப்பு என்பதை போனை பார்த்து அறிந்தவள், சற்று முன் பூமாவும் அழைத்திருப்பதை கவனித்தாள்.  இருவருக்கும் அடுத்து அடுத்து மிஸ்டு கால் கொடுத்து விட்டு யாராவது ஒருத்தர் அழைப்பார்கள் என காத்திருந்தாள்.

 

முதலில் சந்தியாவை அழைத்தது பூமா. வைகாசி விசாகம் பற்றி முருகனை தரிசிக்கும் விவரம் சொன்னாள் சந்தியா. “சரண் நாளைக்கு நியூயார்க்குக்கு பாஸ்போர்ட் விஷயமா போறாங்க. அவங்க கூடவே பிளஷிங் பிள்ளையார் கோவிலுக்கு போயிட்டு வரலாம்ன்னு பார்த்தேன். என்னால உன்னை மாதிரி  விரதம் இருக்க முடியாதே! அதான்  ஒரு ஹோம்க்கு சாப்பாடு செய்து கொடுத்துட்டு வரப்போறேன்“ என,  

 

அருகிலிருந்த குணா, “பாப்பூ போய் படு. மணி பத்தரை. நாளைக்கு பேசுங்க” மனைவி மீது செல்ல கண்டிப்பு காட்டி போனை அவளிடம் இருந்து வாங்கினான்.

 

சந்தியா சென்ற கார் கோவிலை அடைந்து விட மதுவையும், சக்தியை முன்னே நடக்க சொல்லிவிட்டு இவள் காரை விட்டு இறங்கி ஒரு ஒரமாக நின்று பேசினாள்.

 

“என்ன மாமா…உங்களை பத்தி புரணியை இன்னும் நாங்க ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ள சுபம் போடுறீங்க. வசூல் ராஜாக்கு இன்னைக்கு வசூல் வேட்டை இல்லையா? சின்னஞ்சிறுசுக இருக்கிற இடத்தில அவருக்கு என்ன வேலை?”, சரணை  விசாரித்தாள்.

 

“மந்தி, உன் மொக்கையை அந்த முருகன்கிட்ட போடு. என்னை விட்டுரும்மா”, சரணின் குரல் சற்று தொலைவில் இருந்து ஒலித்தது.

 

“நீங்க இருக்கீங்கன்னு பூ சொன்னவுடனே கெஸ் பண்ணிட்டேன். இந்த தடவையும்  ஸ்பீக்கர் போட்டு ஒட்டு கேட்டாச்சா…??”

“ஒட்டை உட்கார்ந்த இடத்தில இருந்து கேக்குறதுக்கு தான் ஸ்பீக்கர் போட்டோம். ஒரு பக்தி படம் பார்த்த இபக்ட் கிடைச்சிருக்கு மந்தி… மந்திக்கு கூட கற்பூர வாசனை தெரியுதே! பரவாயில்லை. சரி, நீ இங்க எப்போ வர்ற?”

 

“தெரியலை.. அடுத்த மாசம் விசா இன்டர்வியூ இருக்கு. அது கிளியர் ஆகட்டும் பார்க்கலாம். கோவில் வந்திருச்சு… முருகன் என் மொக்கையை கேட்க வெயிட்டிங்...ஒரு சின்ன அட்வைஸ்...நாளைக்கு கோவில்ல போயும் உங்க கடலை வருக்க ஆரம்பிச்சிடாதீங்க… நேஹாகிட்ட இது தான் சாக்குன்னு  பூ செம பில்டப் குடுத்து உங்களுக்கு ஆப்பு ரெடி பண்ணிடுவா”, அவனுக்கு உதவுவது போல சொன்னாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.