(Reading time: 31 - 62 minutes)

ன்ன மது?? எத்தனை தடவை சொல்றது உண்மையாவே ஒருத்தன் எட்டு வருஷமா உன்னை நினைச்சு உருகிகிட்டு இருக்கான்னு…

இங்க பாரு.. நீ கேக்கிற எல்லா கேள்விக்கும் கார்த்திக்கிற்கு பதில் தெரியும். நீ என்ன பண்ற. அவர்க்கு போன் பண்ணிக் கேளு”, கார்த்திக்கின் பக்கம் பிரச்சனையை திருப்பினாள்.

 

“அவன் தான் நான் ரொம்ப பிஸி பிஸின்னு சொன்னானே.. இப்போ போன் பண்ணா திட்டுவான்”, உதட்டை புதுக்கிக் கொண்டு குழந்தை போல பயந்தாள்.

 

“அப்போ ஈமெயில் பண்ணு. நேரம் கிடைக்கிறப்போ ரிப்ளை பண்ணுவார்”, யோசனை கூறினாள் சந்தியா.

 

“நல்ல ஐடியா…தேங்க்ஸ்” என்று சொன்ன மது கார்த்திக்கிற்கு மின்னல் வேகத்தில்  மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருந்த  சமயம் பார்த்து நிரஞ்சன் அழைத்தான். எப்பொதும் போல் பொதுவான நலன் விசாரிப்புகளுடன், பிந்தியாவுடனான  காலை சந்திப்பை பற்றி பேசினர்.

 

பின், திடீர் என அவளுக்காக காத்திருக்கும் ஒருத்தன் போல தானே ஜீராவுக்காக இந்த நிரு காத்திருக்கிறான் என அவனின் மனநிலையை அறிய முற்பட்டு,

 

“நிரு, நீங்க எத்தனை வருஷமா ஜீராவை லவ் பண்றீங்க” கேட்டாள் மது.

 

அவள் கேள்வியில் அதிர்ந்த நிரஞ்சன், “மது தீட்டிருன்னு  கேக்குது..ஒய்??”

 

“திடீரை… தீட்டிருன்னு சொல்றீங்க… தீத்துடுன்னு சொல்லாத வரைக்கும் சந்தோஷம். ” சொல்லி சிரித்தாள்.

 

“தீத்துடுன்னா ?”

 

“சாகடிக்கிறது… “, பதிலளித்தாள் மது.

 

“எனக்கு கொலவெறி இல்லே! “, பதறினான் நிரஞ்சன்.

 

அதற்கு சிரித்தவள், “சரி...நீங்க ஜீராவை எத்தனை வருஷமா லவ் பண்றீங்க? சும்மா தெரிஞ்சிக்க தான் கேக்குறேன் சொல்லுங்க”

 

“இவ நம்மை சந்தேகப்படுகிறாளோ என்று பயந்து கொண்டே, “அது கொஞ்ச வரிசமா”

 

“ஜீராவுக்கு இது நிஜமாவே தெரியாதா?”,  அவள் அவன் மீது சந்தேகமாய் கேட்பது போலவே நிருவிற்கு தோன்ற,

 

“அப்படி தான் நான் நின்குது", என்றான். கண்டுபிடித்து விட்டாளோ என உள்ளூர பயம் பரவியது.

 

“ஜீரா ஒரு வேளை நோ சொன்னா”, கேட்டாள் மது.

 

நிரஞ்சனிற்கு பயம் பறந்து நெஞ்சில் உறுதி வந்தது….“என்ன சொன்னாலும் நான் லவ் பண்ணுது.”, உறுதியை சொல்லிலும் காட்டினான்.

 

அவன் பதிலில் திடுக்கிட்டாள் மது.

 

“ஏன்? உங்களை பிடிக்காதவங்களை எதுக்கு லவ் பண்ணனும்?”, புரியாமல் கேட்டாள்.

 

“எனக்கு பிடிக்குது. லவ் பண்ணுது. ஜீராக்கு பிடிக்கலே. லவ் பண்ணலே”, நிதானமாக சொன்னான் நிரஞ்சன்.

 

“அப்போ உங்க வாழ்க்கை?”, கேட்டு விட்டு கேள்வியாய் பார்த்தாள்.

 

“என் வழக்கே ஜீரா ஸ்மையில்ல தான் இருக்கு…” சொல்லும் போது குரல் உடைந்து கண் கலங்கியவன்,  “ஒன் மினிட் மது...” என்று சொல்லி விட்டு நாற்காலியிலிருந்து எழுந்து சென்றான். திரையில் அவன் மீண்டும் வருவதற்குள் மது மனம் பல முறை அடித்துக் கொண்டது அவனுக்காக.

 

“அய்யோ நாம அவனை சங்கடப் படுத்தி விட்டோமே!” என சஞ்சலப்பட்டாள். அவன் எப்போது வருவான் மன்னிப்பு கோர வேண்டும் என்று  நினைத்து அவன் வரவை பட படப்புடன் எதிர்ப்பார்த்து காத்திருக்க, சில நிமிடங்கள் கழித்தே வந்தான்.

 

முகத்தில் அவள் எப்போதும் காணும் புன்சிரிப்போடு. அதைக் கண்டதும் மதுவின் கவலை சற்று மறைந்தாலும், “நிரு சாரி...”, கெஞ்சலாக  மன்னிப்பு கேட்டாள்.

 

“அதெல்லாம் இல்லே! ஜீரா ஹேப்பின்னா நானும் ஹேப்பி. அதான் நான் சொன்னது. ”, தொண்டையை செருமி விட்டு உதடுகளில்  செயற்கை சிரிப்பை  ஒட்டிக் கொண்டான்.

 

பின் அவனே “ஜீரா அழுக்கா சிரிக்கும்....”

 

“அழுக்கா சிரிக்குமா?? அப்போ ப்ரஷ் பண்ணாதா?” சொல்லி விட்டு அழகாக சிரித்தாள் மது.

 

“ப்ரஷ் பண்ணது இல்லே பண்ணாதுன்னாலும்...எப்போவும்  ஜீரா ஸ்மைல் அழுக்கு தான்”, ஆணித்தரமாக சொன்னான் நிரஞ்சன்.

 

“அய்யோ...ப்ரஷ் பண்ணாலும் அழுக்கு தானா” வாய் விட்டு சிரித்தாள் மது.

 

“ம்ம்...அழுக்கு அழுக்கு தான்” மீண்டும் மீண்டும் அழுக்காக சொன்னான்…

 

“அழகு” சிறப்பு ‘ழ’வை அழுத்தி சொல்லி அவனை திருத்த முயன்றாள்.

 

“அலுகு” தன்னால் ஆன முயற்சியை செய்தான் நிரஞ்சன்.

 

“சத்தியமா அழுதுடுவேன் நிரு” என்று சொல்லி அழவில்லை. விழுந்து விழுந்து சிரித்தாள். பின் “தமிழுக்கு அழகே ழ தான்… முதல்ல அதை ஒழுங்கா உச்சரிக்க பழகுங்க நிரு”, அறிவுரை வழங்கினாள்.

 

“டோன்ட் ஒர்ரி. நான் பல்க்குத்து”  

 

“கடவுளே! “ என்று சொல்லி வயிறு வலிக்க சிரித்தவள், “பல் குத்தாதீங்க… பழகுங்க...இந்த து வை இனிமே நீங்க சொல்லவே கூடாது. நான் பழகுறேன்னு சொல்லுங்க ”

 

“நான் பல்குத்….சாரி பல்..குரன்” , திணறி திணறி சொன்னான் நிரஞ்சன்.

 

“இப்படி பல் குத்தி, குரண்டுறதுக்கு நீங்க டென்டிஸ்ட் ஆகி இருக்கலாம்.” என்று சொல்லி மீண்டும் சிரித்தவள்,

 

“நீங்க ஜீராட்ட தமிழ்ல பேசியிருக்கிறீங்களா? நீங்க பேசுறதை கேட்டா அழகா சிரிச்சுகிட்டே இருப்பாங்க ” என்றாள் மது.

 

“இல்லே. ஆனா இனி பேசி பல்குத்…..பல்...பல்...குரான்”, முடிந்த அளவு சரியாக உச்சரிக்க முயன்றான் நிரஞ்சன்.

 

“குரான்னு சொல்றீங்க. ஜீரா  முஸ்லீமா…”

 

“இல்லே...ஹிந்து. நான்  ஜீராவை ரெட் பிந்தி(பொட்டு)ல ரெட் சாரில பாக்க  வெயிட் பண்ணுது”, ஆசையாய் சொன்னான்.

 

“வெடிங் சாரில தான??”, கண்களில் ஆர்வம் கொப்பளிக்க.

 

“எஸ்… மதுக்கு தெரியுது??”, வியப்பாக கேட்டான் நிரஞ்சன்.

 

“எனக்கு ஒரு ஹின்ட் கிடைச்சா போதும், நான் கரக்டா க்ராக் பண்ணி கண்டுபிடிச்சுடுவேன்…மாமா படிக்கிற திரில்லர் நாவல்ஸ்ல சஸ்பென்ஸ்சை கரெக்ட்டா கெஸ் பண்ணிடுவேன். அதான் மாமா சொல்லுவாங்க உன்னை ஏமாத்த ஒருத்தன் பிறந்து தான் வரணும்ன்னு ” என்றாள் பெருமையாக காலரை தூக்கி விட்ட படி.

 

அதைக் கேட்ட நிரஞ்சனால்  சிரிப்பை அடக்க முடியவில்லை. விழுந்து விழுந்து சிரித்தான். அவன் மனம் கொள்ளை போனதே அவளின்  இந்த அப்பாவித்தனத்திலே!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.