(Reading time: 34 - 67 minutes)

து பற்றி சந்தியாவிடம் பேசிய கார்த்திக், “மதுகிட்ட நான் பேசணும்..அவளை ஹால்க்கு கூட்டிகிட்டு வா", என்றான்.

“அவ வருவாளான்னு தெரியலையே….”, யோசனையுடன் சொன்னாள் சந்தியா..

“நான் சொன்னேன் சொல்லு..கண்டிப்பா வருவா”, என்று கார்த்திக் உறுதியாக சொன்னது போலவே, காதி என்னும் மந்திரத்தை கேட்டதும் அவனை தேடி  ஹாலுக்கு வந்தாள்...அங்கே இருந்த சோபாவில் கார்த்திக் அமர்ந்திருப்பதைக் கண்டதும்,

”காஆஆஆதி”, கதறிய படி அவனிடம் ஓடினாள்…அருகில் வந்த மதுவின் கையைப் பற்றி தன்னருகில் அமர்த்திய கார்த்திக்,

“மொட்டை..இப்போ எதுக்கு அழுகை?” என்றான் அக்கறையுடன் அவள் கண்ணீரைத் துடைத்த படி...

“எனக்கு வீட்டுக்கு போகணும்…இங்க எதுவுமே பிடிக்கலை” கேவிய படி சொன்னாள் மது. அவள் அழுகையின் காரணம் தெரியும். ஆனால், இருவருக்கும் நடந்த அந்தரங்க விஷயத்தை பற்றி பேசுவது….அதுவும் அவள்  பெண்ணாயிற்றே!… எண்ணிக் கொண்டே  நெடிய மூச்சை விட்டான்...

அங்க நடப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த சந்தியாவை பார்த்து  “சாண்டி சூடா ஒரு கப் பால்..சீக்கிரம்” அவசரக் கட்டளை பிறப்பிக்க அதை நிறைவேற்ற ஓடினாள் சந்தியா. பின், மதுவின் தோள்களை பற்றி,

“சரி நாளைக்கே ஊருக்கு போகலாம்...ஆனா, அழாத! இந்த அழுகை ஒருத்தனை  அணு அணுவா கொல்லுது ” என்றான் கவலையுடன்.

கார்த்திக் சொன்னதை கேட்ட மது, “அவன் செய்தததை கேட்டா நீ இப்படி பேச மாட்ட” கோபத்துடன் மனதிற்குள் சொல்லிக் கொண்டாலும், அவனிடம் நிருவை  குற்றம் சாட்ட மனமில்லை.

பொங்கிய கோபத்தை அடக்க முயல, அதுவோ அவள் கண்களில் வெள்ளப்பெருக்கை அதிகமாக்கியது…. “மொட்டை... ஸ்கூல் படிக்கிறப்போ முட்டை போடும்ன்னு மயிலிறகை புக்குள்ள வைப்ப தெரியுமா? அதுக்காகவே உலகத்தில இருக்கிற அத்தனை வகை மயிலிறகையும் சேகரித்து நிரு அனுப்பி வைத்தது நியாபகம் இருக்கா?” என கேட்கவும் நினைவு வந்தது போல அழுது கொண்டே மது தலையாட்ட, “ம்ம்...அப்பவே ஜீராட்ட கவுந்துட்டான்” என்றான்… அவன் சொன்னதை கேட்ட மது அழுகையை குறைத்து,

“என்ன காதி சொல்ற? எனக்கு மயிலிறகு அனுப்பி விடுறதுக்கும் ஜீராவுக்கும் என்ன சம்மந்தம்” அதிர்ச்சியும் குழப்பமுமாக கேட்டாள்…

“அப்ப்ப்பாடா….” என்று நெஞ்சில் கை வைத்து பெருமூச்சு விட்டு, “உனக்கும் ஜீராவுக்கும் சம்மந்தம் இருக்குதுன்னாவது புரிந்ததா?? நல்லது!...நீயும் ஜீராவும்  ஒன்னுக்குள்ள ஒன்னு….” என்றான் புதிராக...

அதற்குள் சந்தியா பாலை எடுத்து வர, அதை வாங்கிக் கொண்டு, சட்டை பாக்கெட்டில் இருந்த மாத்திரையை அதில் கலந்து  மதுவை குடிக்க சொன்னான்…

அவனை கேள்வியுடன் மது பார்க்க, “தூக்க மாத்திரை தான்....எதையும் யோசிக்காம நிம்மதியா தூங்கு. காலையில் ஒரு சர்ப்ரைஸ் விசிட்டர் உன்னை எழுப்பி விடுவாங்க” என்றான் கார்த்திக்.

“என்ன காதி புதிர் மேல புதிரா போடுற?”, என கேட்டாள் மது புருவத்தை உயர்த்தி!

“எல்லாத்துக்கும் நாளை விடை கிடைக்கும்…. இப்போ பாலை குடி” என்றவன் அவள் குடித்து முடிக்கும் வரை காத்திருந்தான்… பின், சந்தியாவிடம் திரும்பி,

“உன் கூடவே  படுக்க வைத்துக்கோ”  என்று மதுவை கண்காணிக்கும் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்து விட்டு படுக்க சென்றான்.

கார்த்திக் வந்து பேசியதில் ஆறுதல் அடைந்தாலோ இல்லையோ, அவன் போட்டு சென்ற புதிர்களை யோசிப்பதில் வந்த அழுகையும் நின்று போனது மதுவிற்கு.

தோழிகள் படுக்கைக்கு வந்த பிறகு, அனந்த சயனத்தில் உள்ளங்கையால் தலையை தாங்கியவாறு மதுவின் பக்கம் திரும்பிய சந்தியா,

“நீ அழுகிற அளவுக்கு நிரு உன்னை என்ன செய்தான்?”, என்று கேட்டாள் எதுவுமே தெரியாதது போல.

“ப்ச்...ஒன்னும் செய்யலை…”, என மறுப்பாய் தலையாட்டி விட்டு திரும்பி படுத்துக் கொண்டாள் மது. அவளை பார்த்து ஏளன சிரிப்பை உதிர்த்து,

“ஹூம்….அவன் என்ன செய்தான் கூட தெரியலை..... அப்போ உறுதியா நீ குழந்தை தான்”, என்றாள் சந்தியா அலட்சியமாக.

அதைக் கேட்டதும் ரோஷமாய் அவள் புறம் திரும்பிய மது, “ஹே...அது கூட தெரியாம இருக்குமா?” என்று பின், இரகசிய குரலில் “இங்க...கிஸ் பண்ணிட்டான் “ என உதட்டை காண்பித்த படி சொல்லி விட்டு, “ஐ ஹேட்  ஹிம்” எரிச்சலுடன் சொல்லிக் கொண்டே மல்லாக்க படுத்தவளுக்கு விழிகளில் நீர் திரையிட்டது….

“முத்தமா?? என்ன சொல்ற மது?, என்றாள் அதிர்ச்சியாய்…ஒன்றும் தெரியாதவள் போல..

“ப்ச்.... ஆமாம்” குரல் தழுதழுக்க சொன்னவளின் கன்னங்களில் கண்ணீர் கோடுகள்...

“அவன் கிஸ் பண்ணா, நீ சும்மா விட்டுட்டு வந்தியா?”, கோபமாக கேட்டாள் சந்தியா...

அவள் கேட்டதும் மது கேள்வியாய் அவளைப் பார்க்க, “நானா இருந்தா ஒன்னுக்கு நாலா  திரும்பி கொடுத்திருப்பேன்” என்றாள் கோபமாக …

“அதானே…” என்று முதலில் வேகமாக தலையாட்டிய மது, பின் தெளிந்து

 “ஹே….வாலு...உன்னை” என லேசாக புன்னகைத்த படி அவளது முதுகில் ஒரு போடு போட்டாள்…

“பின்ன என்ன மது? நிரு உன்னை கடத்தினாரா இல்லை கட்டாயப்படுத்தினாரா? அவர்  பக்கத்தில் வந்தப்போ உன்னால தடுத்திருக்க முடியும் தானே?” கேட்டாள் சந்தியா.

அவள் கேட்டதும் “அதுதுது...…” என்று யோசித்தவாறு,

“எனக்கு அந்த நேரம் என்ன நடக்குதுன்னு எதுவுமே புரியலை “ என ஒரு வித இயலாமையுடன் முடித்தாள். அவளையே கூர்மையாக பார்த்த சந்தியா,

“நிருவிற்கு பதில் வேற யாரும் இருந்தால் உன்கிட்ட இதே பதில் வருமா?” என கேட்க,

அவள் படக்கென கேட்ட அந்த கேள்வியில் ஒரு நொடி திணறிப் போன மது, மறுப்பாக தலையாட்டி விட்டு, அடுத்து என்ன கேள்வி கேட்பாளோ என பயந்து,

“சந்து எனக்கு தூக்கம் வருது..குட் நைட்” என்று போர்வைக்குள் ஒளிந்து கொண்டாள். ஏன் சந்தியாவிடம் இருந்து ஒளிந்து கொள்ள நினைக்கிறோம்  என வியப்பாக இருந்தது அவளுக்கு!

பூப்பெய்திய பொழுதே காதி, சூர்யாவிடம் பழகுவதற்கு கூட   பாட்டி எல்லை வரையறுத்தது நினைவிற்கு வந்தது! ஆனா நான் யோசிக்கிறதுக்கு முன்னாடியே நெருங்கி விட்டானே... இன்னொருத்தியை லவ் பண்ணிட்டு ஏன் நிரு அப்படி செய்தான்? அந்த ஜீரா????!!! காதி சொல்றதை பார்த்தா ஒரு வேளை என்னோட ஸ்கூலில் படித்தவளா இருப்பாளோ???...“ என பல முறை யோசித்தாலும் தவறான விடையாக தேர்ந்தெடுத்தவளின் கண்களை  தூக்கம் தழுவ அசந்து விட்டாள்….

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.