(Reading time: 34 - 67 minutes)

வன் சொன்னதும் ஏளனமாய் சிரித்தான் சிவா... “இந்த பொழப்புக்கு ஆடுறா ராமா பெட்டர்” என்றான் அவன்.

அந்த நேரம் புடவையில் ஜொலித்த படி வந்தனர்...மது, சந்தியா மற்றும் சக்தி.....

இத்தனை வருஷமாய் திருட்டுத்தனமாக மதுவை பார்த்துக் கொண்டிருந்த நிரு இப்பொழுது வெளிப்படையாக மதுவிடம் காதல் பார்வை வீச, அவள் கன்னங்கள் சிவந்தது.

ஒரு பார்வையிலே சந்தியாவை  உள்வாங்கிய கார்த்திக்கோ, அதை வெளிக்காட்டாமல் அவளைப் பார்த்து கிண்டலாக சிரித்து,

“புடவை பொண்ணுங்களுக்கு தான். உனக்கு எதுக்கு? நான் சொல்றேன் எழுதி வைச்சுக்கோ. கோவிலுக்கு போயிட்டு வர்றப்போ அந்த புடவையை கைல சுருட்டி கொண்டு வருவ!”, என ஆருடம் சொன்னான்.

“புடவை எடுத்து கொடுத்துட்டு, கட்டிக்கிட்டு வந்தா கிண்டலா” மனதிற்குள் பொருமினாள் சந்தியா.... பாட்டிக்காக அதை அவனிடம் காட்டிக் கொள்ளவில்லை. அருகிலிருந்த சிவாவிடம்,

“டேய் அண்ணா...நீ சொல்லு எனக்கு சேலை நல்லா தானே இருக்கு ”, என் சந்தியா கேட்டதும், சிவா, சற்று தள்ளி நின்று சூப்பர் ஸ்டார் போல சிகையை சரி செய்து கொண்டே சகோதர பாசத்தில் அவளை பார்த்தவாறு பாட ஆரம்பித்தான்,

ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு...

ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு...

என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை....

“பாட்டாவே படிச்சிட்டியா....ஹா..ஹா...அப்போ நானும்....... நிருவை பாட சொல்றேன்”, என்றான் கார்த்திக், குணா கமல்ஹாசன் போல......

அதைக் கேட்டு உற்சாகமான நிரு, “இந்த பாட்டு ஈசியா இறக்குது...நான் பாடுது” என,

“ஒரு திங்க ரத்தத்தில் பன் மேஞ்சா நொளவு”

முதல் வரியை பாடியதும் அவன் காலடியில் ஓடி வந்து விழுந்த சிவா,

”தெய்வமே...இனி நான் பாடவே  மாட்டேன்...மன்னிச்சுக்கோ”  என்றான் நொந்து போய்.

இப்படியே பேசி பேசி பொழுதை ஓட்டி இருட்ட ஆரம்பிக்கும் தருவாயில் அனைவரும் கிளம்பி இரு கார்களில் வர, கார்த்திக்கும் சந்தியாவும் பைக்கில் வந்தார்கள். ஒரு சிக்னலில் பைக்கை நிறுத்தியவனிடம்,

“ஏய் பழனியப்பா... ப்ரேக்கே  போட மாட்டியா?”, என்றாள் எரிச்சலாய்.

“எதுக்கு? தேவையில்லாம ப்ரேக் போட்டு போட்டு போனா நாளைக்கு தான் கோவிலுக்கு போக முடியும்.” என்றான் கார்த்திக் நல்ல பிள்ளையாக.

“ப்ச்...போடா பழனியப்பா! ரொமான்ஸ்ல ஒரு த்ரில் இருந்தா தான் நல்லாயிருக்கும்..”, என அவனை கட்டிக் கொண்டாள்.

அப்போது “ஹே... அங்க பார்... பின்னால உங்க ஸ்ரீ அக்கா ஹஸ்பன்ட் போல தெரியுது” என கண்ணாடியைப் பார்த்து சொல்ல, சொல்ல பதறி போய் அவனை அணைத்திருந்த கையை எடுத்து,  

“எங்க????" என கேட்டுக் கொண்டே, அங்குமிங்கும் பார்த்தவளை கண்ணாடியில் ரசித்த படி படக்கென வண்டியை எடுத்தான்… அவள் நிலைகுலைந்து அவனை அணைக்க பரவசமானான்.

ஆனால், அவளோ திரும்பி திரும்பி பார்த்த வண்ணம் இருந்தாள். “என்ன ஆச்சு?” என்றான் அதை கண்ணாடியில் கவனித்தவனாய்.

“நம்ம பின்னாடி வெள்ளை ஆம்னில ஒருத்தன் எங்க டவுசர் மாதிரி தெரிந்தான். அவன் தானான்னு நல்லா பார்க்கலாம்னு பார்த்தா அதுக்குள்ளே சிக்னல் போட்டாங்க…” என்றாள் சந்தியா.

“டவுசரா….???”, புரியாமல் கேட்டான் கார்த்திக்.

“டவுசர் பாண்டி, அதான் பாண்டியன். அவன் அவங்காத்தாட்ட வத்தி வச்சா பீப்பா உலகத்துக்கே பத்த வைச்சிடும்”, என்று பயந்தாள் சந்தியா.

“நமக்கு பத்திக்குச்சுன்னு பத்த வைக்குமா?”, நக்கலாக கேட்டான்.

“விளையாடாதீங்க கார்த்திக். இப்படி சுத்துறது வீட்டுக்கு தெரிந்தா….”, என்றாள் கவலையாக.

“நம்ம விஷயம் உங்க பூமாக்காவுக்கு  தெரியுமே..”, என்றான் கார்த்திக்.

“இல்ல...நீங்க அவகிட்ட நீங்க போட்டு வைத்திருந்த பில்டப்பை உங்க மேல உள்ள கோபத்தில் கார்த்திக் கேரக்டர் மோசமானவன்னு தரைமட்டமாக்கிட்டேன். “, என்று உதட்டை பிதுக்கினாள்.

“அடிப்பாவி….”, என்றான் கார்த்திக் நொந்து போய்....

வர்கள் பேச்சு திசை திரும்ப அவர்களை தொடர்ந்த பாண்டியனையும் பச்சையும் கவனிக்காமல் விட்டனர். மீனுக்கு காத்திருக்கும் கொக்கு போல தக்க தருணம் பார்த்து கொண்டிருந்தனர் இந்த வில்லன்கள்….

சந்தியாவிற்கு முதல் முறையாக சேலை கட்டியது எட்டு வைக்க சிரமமாக இருந்தது......தரையில் தட்டிய சேலையை, பிரசாதம் வாங்க நிற்கும் பொழுது பின்னுள்ளவர் மிதிக்க உள் முந்தி இறங்கி கொண்டு வந்தது! அவள் திணறுவது  எதிர் வரிசையில் நின்ற கார்த்திக்கின் கண்களுக்கு தப்பவில்லை...  

கோவிலை விட்டு கிளம்பும் பொழுது கீழே விழுந்து விடாமல் கைகளில் சேலையை தூக்கி பிடித்து வந்த சந்தியாவை பார்த்து தோழியர் சிரிக்க, சற்று தள்ளி நின்ற கார்த்திக்கை கோபமாக பார்த்தாள் சந்தியா. சின்னா தாத்தாவின் தோள் மீது கை முட்டியை வைத்து லேசாக வளைந்து நின்று கொண்டிருந்த கார்த்திக், அவள் பார்த்ததும் நமுட்டு சிரிப்பு சிரிக்க,  அவனருகில் வந்து, “சகுனி திட்டம் போட்டு என்னை சேலை கட்ட வைத்திருக்க....”, தாத்தாவிற்கு கேட்கா வண்ணம் ரகசியமாய் திட்டினாள் சந்தியா.

அதற்கு சிரித்துக் கொண்டே “கடைக்கு போய் உன் நடைக்கு ஏத்த உடையை எடுத்துட்டா போச்சு!” என்றான் கார்த்திக்.

சாமி தரிசனத்தை முடித்து விட்டு அனைவரும் அருகில் இருந்த உணவகத்திற்கு கிளம்ப, கார்த்திக்-சந்தியா, மது-நிரு, எம்.எஸ்-சக்தி ஷாப்பிங் மால் செல்ல முடிவெடுத்தனர்.

அப்பொழுது அங்கே நின்று கொண்டிருந்த சிவாவை அழைத்த கார்த்திக்,

“மச்சி, தேங்க்ஸ் டா” என்றான்..

“சொல்ற தோரணையிலே தெரியுதே... எங்கயோ குழி தோண்டி வைச்சிருக்க.... சொல்லித் தொலை”, என்றான் சிவா.

“மச்சி, நீ மெழுகுவர்த்தின்னு திரும்ப திரும்ப நிருபிக்கிறடா....உன்னை நினைச்சா...”, என கண்ணைக் கசக்கினான் கார்த்திக்.

“டேய்...எதையும் தாங்குவேன்...ஆனா மாப்ளே உன் நடிப்பை மட்டும் தாங்கவே முடியாது...உன் முதலை கண்ணீரை ஆப் பண்ணிட்டு மேட்டரை சொல்லு” என்று சிவா சொன்னதும் கார்த்திக் சிரித்துக் கொண்டே,

“அது ஒன்னும் இல்லை மச்சி, உன்னோட தங்கச்சியை மால் கூட்டிகிட்டு போகலாம்னு இருக்கேன்...” என்றான்.

“பிகரு வந்தா ப்ரண்ட்டை கழட்டி விடுறது சகஜம் தான!... இதுக்கு எதுக்கு மெனக்கெட்டு எங்கிட்ட கேக்குற... நான் பீல் பண்ண மாட்டேன் மச்சி.....நீ போயிட்டு வா”, என்றான் சிவா தாராள மனதாய்.

“அது இல்லாடா...எல்லாம் பொண்ணுங்களா இருக்காங்க.ராத்திரி நேரம் எல்லாத்தையும் வீட்டிக்கு பத்திரமா கூட்டிகிட்டு வந்துடு“, என்றான் கார்த்திக்.

“அதான பாத்தேன்....மச்சி எனக்கும் ஏதோ பட்சி சிக்கும் உள் மனசு சொல்லுதுடா” என்றான் சிவா நெஞ்சில் கை வைத்துக் கொண்டே அருகிலிருந்த சந்தியாவின் தோழிகளை பார்த்த வண்ணம்....

“அப்படியா???” என சிவாவிடம் கேட்டு விட்டு பெண்கள் புறம் திரும்பியவன், “கேர்ல்ஸ் உங்களுக்கு துணைக்கு உங்க ப்ரதர் சிவா இருக்கார்....கவலையே படாதீங்க...” என்றான் கார்த்திக் சத்தமாக.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.