வணிக வளாகத்தில் மூன்று ஜோடிகளும் புகழ்பெற்ற கடைக்குள் நுழைந்தனர். சந்தியாவிற்கு ஜீன்ஸ் ஒன்றை தேர்ந்தெடுத்து கொடுத்தான் கார்த்திக். அதற்கு பொருத்தமான மேல் சட்டை எடுத்து கொடுப்பதற்குள் அவனுக்கு தலை சுற்றி விட்டது....
“இது கழுத்து இறக்கமா இருக்கு... இது ஸ்லீவ் லெஸ்..... இது மெல்லிசா கண்ணாடி போல தெரியுது... இது இறுக்கமா ஒட்டினாப்பில் தெரியும்...” என்று அவன் தேர்ந்தெடுத்த ஒவ்வொன்றையும் நிராகரித்தாள்.....
கார்த்திக் அலுத்து போனான். அதை கவனித்த சந்தியா அடுத்த முறை அவன் கொடுத்த சட்டையை கேள்வியே கேட்காமல் போட்டு காண்பித்தாள். சற்று இளக்கமான சட்டை அல்லது குர்தா என்று உடுத்தியவளுக்கு அவன் கொடுத்த போலோ டிஷர்ட் சற்று இறுக்கமாக இருந்தது. ...உடை ஒத்திகை பார்க்கும் அறையின் வாயிலில் அவள் வருகைக்காக காத்திருந்த கார்த்திக்கின் பார்வை அவள் வந்து நின்றதும் எடுப்பாக தெரிந்த அவள் அங்கங்களை மேய அவளுக்கு கூசியது....திரும்பி கொண்டவளின் காதருகில் ”வள்ளிக் கண்ணு...” என அவனின் கிறக்கமாக குரல் கேட்டு அவளுக்குள் ரசாயான மாற்றம் உண்டாக,
“....ம்ம்ம்...”, என்றாள் நாணத்துடன்.
“நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாமா...முடியலைடா” என்றான் கெஞ்சலாக....
“இப்படி எல்லாம் ஆசை வந்தா எங்கப்பாவை நினைத்து பாருங்க...வந்த ஆசையும் ஓடி போயிடும்”, என்றாள் வெட்கத்தை மறைத்து...
அவள் சொன்னதும் குண்டடி பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த கனவு நினைவு வர, “ஹய்யோ.....வேண்டாம்ப்பா...” என்றான் பயந்து கொண்டே...
சேலை அசௌகரியமாக இருந்ததால் கார்த்திக் வாங்கி கொடுத்த ஆடைகளையே அணிந்து கொண்டாள். அவளுக்கு எடுத்தது போன்ற போலோ டிஷர்ட்டை கார்த்திக்கிற்கு பரிசளித்தாள்.... இவர்கள் தான் உடை தேர்ந்தெடுத்த அதிக நேரம் எடுத்துக் கொண்டார்கள் என நினைத்து கொண்டிருக்க, அங்கே மது, நிரஞ்சனுக்கு சட்டை எடுக்க அந்த கடையை சல்லடை போட்டு தேடிக் கொண்டிருந்தாள்... அவளுக்கு உதவ சென்ற சந்தியா, சற்று நேரத்தில் கார்த்திக்கிடம் ஓடி வந்து
“கார்த்திக் நீங்க மதுக்கு ஹெல்ப் பண்ணுங்க...நான் இதோ வந்துடுறேன்” செய்தி போல சொல்லி விட்டு ஓடாத குறையாக நடந்தாள். இரு எட்டுக்களில் அவள் கரத்தை பிடித்து நிறுத்திய கார்த்திக்,
“எங்க போறன்னு சொல்லிட்டு போ”, என்றான் சற்று கோபமான குரலில்.
“ஆங்கிரி பர்ட்....என் பாடி லேங்குவேஜ்லே தெரியலையா....அவசரமா பாத்ரூம் போறேன்...இதெல்லாமா சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா?”, என்றாள் எரிச்சலாக.
“சரி, கைல போன் இருக்கா?”, விசாரிக்கும் தொனியில் கேட்டான் கார்த்திக்.
“ஹேன்ட் பேக்ல இருக்கு”, என்றாள் சந்தியா சிணுங்கலுடன்.
“ஹேன்ட் பேக் எங்க?”, கார்த்திக்.
“இப்போ தான் மதுகிட்ட கொடுத்தேன்...இங்க இருக்கிற பாத்ரூம் போறதுக்கு இத்தனை கேள்வியா....” எரிச்சலாய் சொன்னாள்...அவள் அவசரம் அவளுக்கு...
பாக்கெட்டில் இருந்த தனது போனை அவள் கைகளுக்குள் திணித்த கார்த்திக், “எங்க போனாலும் போன்னாவது கைல இருக்கணும்” என்றான் அழுத்தமான குரலில்.
அவன் சொல்வதை எதுவும் பெரிதாக காதில் வாங்காமல் கடனே என தனது பேன்ட் பாக்கெட்டில் போனை திணித்து வைத்து சென்றாள்.... அது தான் அவளை காப்பாற்றப் போகிறது என்ற உணர்வு இல்லாமல்....
அவள் சென்று பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் அவளை காணவில்லை... அவள் வரவை எதிர்நோக்கியிருந்த கார்த்திக், அவள் வராமல் போக, தனது செல்போனுக்கு அழைத்தான்....அவள் அழைப்பை எடுக்கவில்லை...மதுவை அனுப்பி அந்த கடையின் பெண்கள் கழிப்பறை பக்கம் இருக்கிறாளா என்று பார்த்து வர சொன்னான்......அதில் ஏதோ மராமத்து பணிகள் நடப்பதால் அந்த வணிக வளாகத்தின் மையத்தில் இருக்கும் கழிவறைக்கு சென்றிருப்பாள் என யூகித்து மது அங்கேயும் தேடிப் பார்த்தாள் அங்கே இல்லை.. கார்த்திக் எத்தனை முறை போன் அடித்தும் அழைப்பை எடுக்கவில்லை... கோவில் சென்ற பொழுது அவன் போனை ஊமையாக்கியது நினைவு வந்தது....ஒலி எழுப்பாமல் இருந்தாலும் அவள் பேன்ட் பாக்கெட்டில் வைத்த போன் வைப்பிரெட் ஆகியிருக்குமே...அதை உணராமல் இருக்காளா....இல்லை போன் திருடு போய்விட்டதா...இல்லை அவளே திருடப்பட்டாளோ .... பயம் நெஞ்சைக் கவ்வ, அந்த கடையின் வேறு பகுதியில் இருந்த எம். எஸ்ஸிடம் ஓடிய பொழுது சந்தியா தொலைந்து முப்பது நிமிடங்கள் ஆகியிருந்தது....
ஆம்னியை பாண்டியன் ஓட்ட பச்சை அருகில் அமர்ந்திருக்க, சந்தியா பின்னாடி இருக்கையில் மயங்கி கிடந்தாள்.... வண்டி சென்னையின் புறநகர் பக்கம் அதி வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. முதன் முதலில் குற்றம் செய்ய மனது பயந்தாலும், கார்த்திக் சந்தியா நெருக்கத்தை நேரில் கண்டவனுக்கு வன்மம் கண்ணை மறைத்தது....பாண்டியன் அருகிலிருந்து திரும்பி திரும்பி சந்தியாவை பார்த்த படி வந்த பச்சைக்கோ காமம் கண்ணை மறைத்தது...
கண்களால் கற்பழித்தவன் அவளை தீண்டும் எண்ணம் தலை தூக்க, “பங்காளி சிவப்பி சரிந்து கீழ விழுகுறாப்பில தெரியுது! என்னன்னு பார்க்கிறேன்” என பின் இருக்கைக்கு பாய்ந்தான்... எந்த தடயமும் தங்களை காட்டி கொடுக்க கூடாதென கையுறை அணிந்திருந்தான்... அவளை சற்று நிமிர்த்தியவனின் காமக் கைகளுக்கு அந்த பூமேனியை காந்தம் போல இழுக்க வெறி கொண்ட நாயைப் போல அவளிதழ்களை கடித்து குதறினான்.....
வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த பாண்டியன் தற்செயலாக கண்ணாடி வழியே அவள் மேல் படர்ந்த பச்சையை கவனித்து திகைத்து போய் “யேய் என்ன பண்ற......?”, கிட்டத்தட்ட கத்தி விட்டான்.... பயத்தில் காரை நிறுத்தி விட்டு ஓடி விட வேண்டும் போல இருந்தது அவனுக்கு....
“இந்த உடம்புக்காக எத்தனை வருஷம்ன்னாலும் களி திங்கலாம்... நீ கவலைப் படாத பங்காளி... இவளை ரோட்டில் தூர எரிந்தா போற வார நாயெல்லாம் நக்கிட்டு போகும்...கடைசில எந்த நாய்ன்னு தெரியாம போலீஸ் கேஸை மூடிடும்...” சொல்லிக் கொண்டே எழுந்து தனது சட்டையை கழட்டி எரிந்து அவளை மீண்டும் நெருங்க ஆயத்தம் ஆன பொழுது அந்த சம்பவம் நடந்தது....
ஆட்டம் தொடரும் ...
{kunena_discuss:610}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.