“ஓகே ப்ரெண்ட்ஸ் என் மொக்கைய இவ்வளவு நேரம் கேட்டு இப்போ மிதிய தூங்க போற உங்களுக்காக எனக்கு பிடிச்ச பாட்டு வருது, இது உங்களுக்கும் பிடிக்கும்ன்னு நினைக்கிறன்.. எல்லாரும் கேட்டு என்ஜாய் பண்ணுங்க...நான் நாளைக்கு இதே நேரத்தக்கு இன்னும் புது புது கதைகள் மட்டும் கவிதைகளோட வரேன்... பைபை...டாட்டா.. குட் நைட்... ச்வீட் ட்ரீம்ஸ்..நீங்க கேட்டு ரசிச்சது நெஞ்சமெல்லாம் காதல் ஒன்லி ஆன் சில்சீ எப் எம்..."
பாட்டை ஒழிக்க விடும் முன் விளம்பரங்களை ஓட விட்டவள், கண் மூடி அமைதியாய் அமர்ந்தாள். மனதில் உள்ள பாதி இறுக்கம் குறைந்து இருந்தது..
ஆனால் கட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும், முக்கியமாக ஆதிக்கு மனம் கனத்து போயிருந்தது...
"புரிதல் நம்பிக்கை... இது இருந்த காதல் சாகாது".....
விளம்பரம் முடிந்தவுடன் அந்த பாடலை ஒழிக்க விட்டுவிட்டு தன் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.. வெளியில் ரகுவின் சார் நிற்க பேசாமல் சென்று ஏறி கொண்டாள்...
பாடல் ஒலித்தது.....
வழியே என் உயிர் வழியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் துரதுறியே
மதியே என் முழு மதியே
பெண் பகல் இரவாய் நீ படுத்துரியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசுரியே
யாரோ மனதிலே
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை
பாட சொல்கின்றதோ
மூங்கிளுக்குள் வார்த்தையில்லை
ஊமை ஆகின்றதோ
மனம் மனம் எங்கினும்
எதோ கணம் கணம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே
அலைகனில் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயா (முழுமையாய் )
நானோ (வெறுமையாய் )
நாமா இனியும் சேர்வோமா ..
யாரோ மனதிலே
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியிலே
மிக மிக கூர்மையாய் என்னை
ரசித்தது உன் கண்கள்தான்
ம்ருதுவாய் பேசியே என்னுள்
வசித்தது உன் வார்த்தை தான்
காங்கலாய் காணவே இமைகளை மறுப்பதா
வெனிர்[வெண்ணிலா]
கண்ணிற்[கண்ணில]
நானும் வெறும் கானல
யாரோ மனதிலே
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை
பாட சொல்கின்றதோ
மூங்கிளுக்குள் வார்த்தையில்லை
ஊமை ஆகின்றதோ
வழியே என் உயிர் வழியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நிலவுடளால் என்னை துரத்துறியே
மதியே என் முழு மதியே
பெண் பகல் இரவாய் நீ படுதுறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் என்னை உரசுரியே
வழிய என் உயிர் வழியே……
அந்த பாடல் அவள் மன நிலையை சொல்ல அவள் தேர்ந்தெடுத்தால் அது அனைவருக்கும் பொருந்தி போனது.. அனைவரும் தங்கள் வாழ்வில் திருப்பத்தை சந்தித்த அந்த நாளின் நினைவுகளை அசை போட்டனர்...
(இந்த பிளாஷ் பேக்கு உள்ள ஒரு குட்டி பிளாஷ் பேக் வாங்க பாப்போம்)
தீபாவளிக்கான ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு, ஆராவும் ஸ்வேதாவும் வீட்டுக்கு திரும்ப அவளை ஆதி வீட்டில் இறக்கி விட்டு, தன் தோழியை சந்திக்க சென்றாள் ஸ்வேதா.
வழியில் இருந்த முருகன் கோவில் மீது பார்வை பதிய, முருகரை தரிசிக்க வேண்டுமென எழுந்த ஆவலில் காரை சாலை ஓரமாக நிறுத்தினாள்.
வடபழனி முருகன் கோவில்..!!!
அவள் சென்னை வரும் போதெல்லாம் செல்லும் ஒரு கோவில்... அங்குள்ள முருகனை பார்த்தால் அவனிடத்தில் எல்லா ப்ரிச்சனைகளையும் சொல்லி விட்டால் போதும்... அவன் பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு..
தான் நன்றாக வரைய கற்று கொண்ட பின்பு இந்த முருகனை மனக்கண்ணில் நிறுத்தி அதை அப்படியே வரைந்தும் வைத்திருக்கிறாள்..
இப்போது இந்தியா வந்து நிச்சயம் அது இதுவென எப்படி இங்கு வர மறந்து போனாள்?
சாலையை கடந்து தேங்காய் பலம் பூஜை பொருட்கள் அடங்கிய கூடையையும், ஒரு பெரிய பன்னீர் ரோஜா மாலையையும் வாங்கி கொண்டு கோவிலினுள் சென்றாள்.
அவளையே பின்பற்றி கொண்டு வந்தவன் தானும் ஒரு மாலையுடன் உள்ளே சென்றான்.
பிரகாரத்தை சுற்றி வந்து ஐயரிடம் மாலை மற்றும் பொருட்களை கொடுத்து விட்டு ராஜ அலங்காரத்தில் அகிலத்தையே ஆளும் ராஜாவான முருகன் வீற்றிருக்க, அந்த தெய்வீகமான சூழலில் ஒருவகை அமைதி கொண்ட மனதில் முருகனின் திரு உருவை அந்த நிமிடத்தை நிரப்பினாள்.
'முருகா உன்ன பார்த்து எவ்வவளவு நாள் ஆச்சு. நான் ரொம்ப நல்ல இருக்கேன் என்ன நீ ரொம்ப நல்ல வெச்சுருக்க.. அதுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.. என்னையும் என் குடும்பத்தையும் இதே மாதிரி சந்தோசமா வெச்சுக்கோப்பா .. நானும் என் கணவரும் எங்க குடும்பமும் எப்பவும் நல்லா இருக்கனும்' என்று மனமுருகி வேண்ட...
'அப்பாடா இவ நானும் ஆதியும் நு கேட்காம நானும் என் கணவரும்ன்னு கேட்டுட இனி பாரு என் விளையாட்ட' அப்படின்னு அந்த கதிர் வேலவன் சிரித்தார்.
அவனுக்கும் ஏனோ சற்று இறுக்கம் தளர்ந்து அந்த ஷண்முக நாதனையே பார்த்துக் கொண்டிருந்தான். தன் வாழ்வில் நடக்க விருக்கும் அதிலும் இன்று நடக்க போகும் அனைத்துக்கும் அந்த முருகனை துணைக்கு அழைத்தான்.
அர்ச்சனை ஆரத்தி முடிந்து, இருவரிடமும் பிரசாதத்தையும் மாலையையும் கொடுத்த ஐயர் என்ன நினைத்தாரோ அவனிடம் 'ஷேமமா இருங்கோ' என்று கூறி சென்றார்.
பிரகாரத்தை சுற்றி வந்து ஒரு தூணின் அருகில் அவள் அமர, அவனும் அவள் அருகே சற்றே இடைவெளி விட்டு அவள் கண்ணில் படுமாறு அமர்ந்தான்.
கண்களை மூடி சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவளை கோவில் என்பதையும் மறந்து ரசித்து கொண்டிருந்தான் அவன்.
மெல்ல கண்களை திறந்தவள் பார்வையில் ரசனையான சிரிப்புடன் அவள் பாடவும் திகைப்பு ஆச்சர்யம் சந்தோஷம் என என முகம் மாறியது.
அவள் முக மாற்றத்தை ரசிக்க இரு கண்கள் போதாது எனவே தோணிற்று அவனுக்கு. புருவம் சுருக்கி பின் மேல் ஏற்றி இறக்கியவள்,
"ஹே வருண், வாட் எ ப்லேசன்ட் சர்ப்ரைஸ்"
"ஹாய் ஸ்வே"
"நீ இன்னும் மாறவே இல்லடா.. என் பேர முழுசா கூப்டா தான் என்னவாம்" என சிரிப்பினுடே அலுத்துக் கொண்டாள்.
"ஹாஹாஹா"
"போடா... ஆமா எப்படி இருக்க நீ? அப்புறம் வைஷ்வி? அவ ரொம்ப வளந்துருப்பா இல்ல?"
"ஹ்ம்ம்... நல்ல இருக்கேன்.. இனி ரொம்ப நல்லா இருப்பேன்.. வைஷ்வியும் நல்லா இருக்க... இப்போ எம் பி எ பிசினஸ் மேனேஜ்மன்ட் படிக்கிற..."