(Reading time: 38 - 75 minutes)

 

மாடியில் இரு பக்கம் இரு அரை நடுவில் சின்ன ஹால் இருக்க, வலப்பக்கம்  இருந்த அறையில் நுழைந்தவள் அங்கே பால்கனியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து அவனுக்கு வேடிக்கை காட்டி கதை சொல்லி சிரிப்பு மூட்டி கொண்டிருக்க, ஆதி மொட்டை மாடிக்கு சென்று ரிகாவை சமாதான படுத்தினான்..

கீழே ஸ்வேதாவின் கால்களில் வருனே அவசரமாக மருந்தை தடவ, வழியை மீறி திகைப்பை ஸ்வேதாவின் முகம் அப்பட்டமாய் காட்டியது. பெரியவர்களும் அவன் செயலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் அவனின் செயலின் உள் அர்த்தம் புரிந்து கொண்ட  ஆரா அவனிடம் அமர்ந்து மெல்ல மருந்தை வாங்கி கொண்டு அவனை எழுப்பி விட்டாள்.. யாருக்கும் சந்தேகமே எழாத வண்ணம்!!! 

மனமே இல்லாமல் எழுந்தவன் சற்று நகர்ந்து நின்று கொண்டான்...

"ஸ்வேதாம்மா  வலிக்குதா டா டாக்டர வர  சொல்லவா"

"வேண்டாம்ப்பா ஒண்ணுமில்ல, பாவம் குட்டி அவன வேனும்ன டாக்டர் கிட்ட கூட்டிட்டு போங்க"

"போகணும் ஸ்வேதா அவன் அழுகை அடங்கட்டும், மது சொன்ன தான் கேட்பான்"

அதற்குள் கையில் பாலுடன் வந்த ஆரா, ஒரு டம்ளரை தன்யாவிடம் கொடுத்து,

"கொண்டு போய் ப்ரிஷனுக்கு கொடு தன்யா, அப்புறமா ஹாஸ்பிடல் போலாம் நானும் ஸ்ரீயும் வரோம்" என சொல்ல

டாக்டருக்கு போன பண்ணி விட்டு வந்த மகேஷ் நம்ம பேமிலி டாக்டர் வரேன்னு சொல்லிட்டார் பயப்படத டா, தன்யாவிடம் சொல்ல, பாலுடன் மேலே சென்றவள் அமைதியை மதுவின் மடியில் அமர்ந்து வேடிக்கை பார்த்தவனை இயல்பாய் புன்னகையுடன் நெருங்கி பாலை அருந்த செய்தாள்

பாலை குடித்ததும் அழுததினால் அப்படியே உறங்கி போனான். கீழே டாக்டர் வந்து விட்டாரென மேகா வந்து கூறவும் ப்ரிஷனுடன் தன்யா கீழே செல்ல மேகா தொடர்ந்தாள்.

சங்கி இருந்த புடவையை சேரி செய்து கொண்டு வெளியே வர எத்தனிதவள், ஆதி ரிகாவுடன் உள்ளே வரவும் திகைத்து பார்த்தாள். அவன் இடபக்க சுவரை ஒருமுறை பார்த்து விட்டு தன் தோளில் தூங்கிய ரிகாவை மெத்தையில் படுக்க வைத்தான்.

அவனும் ரிகாவும் இளஞ்சிவப்பு நிற உடையில் அழகாக சிரித்து கொண்டிருப்பது போன்ற பெரிய படம் சுவரில் பதித்திருக்க, 'இது அவன் ரூமா', உடனே வெளியே செல்ல வேண்டுமென எண்ணி நகர்ந்தாள்.     

"மது ஒரு நிமிஷம்"

"...."

"உங்கிட்ட கொஞ்சம் பேசணும் மொட்டை மாடிக்கு போகலாமா"

அவனை கோபமாக பார்த்தாள் மது.

அதே நேரம் கீழே,

"குட்டி தூங்கிட்டான, என்ன மகேஷ் நீங்க சொன்னத வெச்சு பதறி அடிச்சுக்கிட்டு ஓடி வந்தேனே, நீங்களே பர்ஸ்ட் எய்ட் பண்ணிடிங்க அண்ட் இது ரொம்ப சின்ன காயம்." என சிரித்து கொண்டே அந்த மருந்தை கிளீன் செய்து சீக்கிரம் காயம் ஆற ஒரு ஆயின்மண்டை போட்டு விட்டு, ஸ்வேதாவின் பாதத்தையும் பார்த்து அதே போல் செய்தார்.

"ஆல்ரைட் டூ டேஸ்ல சரி ஆகிடும், தண்ணி படமா மட்டும் பத்துக்கோ ஸ்வேதா, குட்டி நாளைக்கு எழுந்திருக்கும் போது மறந்திடுவான் பாருங்க"

என்று சொல்லி விட்டு கிளம்ப,அவரை வலி அனுப்ப சரணும், மகேஷும் சென்றனர். தூங்கிய ப்ரிஷனை எடுத்து கொண்டு கீழே ஒரு அறையில் படுக்க வைத்தாள் தன்யா. மேகா அருகிலேயே அமர்ந்து கொண்டாள்.

ஸ்வேதா மெல்ல எழுந்து முன் காலை ஊன்றாமல் தத்தி தத்தி நடந்தாள். நிலைமையை சகஜமாக்க ஸ்ரீயும் ரகுவும் ஏதேதோ பேசி சீர் செய்தும் விட்டனர்.

இரவு உணவு எடுத்து வைக்க ரஞ்சனி,லலிதா,வித்யா, ஆரா,மேகா  அனைவரும் சென்று விட, மூர்த்தி, திவாகர் முன் வாசலுக்கு சென்று மகேஷ் சரணுடன் அமர்ந்து பேசினார். ரகுவும், ஸ்ரீயும் கற்பகதுடன் அமர்ந்து டிவி பார்த்தனர்.தன்யாவும் இனைந்து கொண்டாள்.

(இனி வர சீன் ஒரே டைம்ல நடக்ற மாதிரி கற்பனை பண்ணிகொங்க  பிரெண்ட்ஸ்)

கோபமாக பார்த்தவளை அலட்சியம் செய்து கையை பிடித்து இழுத்துக் கொண்டு மாடிக்கு சென்றான் ஆதி!!!

கீழே பின் தோட்டத்தில் சென்று அமர்ந்திருந்தாள் ஸ்வேதா. திவ்யாவிடம் சொல்லி விட்டு தான் வந்தாள்.அங்கே வந்த வருண் அவள் அருகில் சிறு இடைவெளி விட்டு அமர்ந்தான்.

அவனைப்பற்றி தனியே யோசிக்க தான் அவள் வந்தாள்.ஆனால் அவனும் கூட வந்து அமர கோபம் தான் வந்தது.

"மது உன்கிட்ட நிறைய பேசணும் டா" ஆதி.

"....."

"ப்ளீஸ் மது என்ன கொல்லாத"

"நானா? உங்களைய? மிஸ்டர் ஆதித்யன் புரிஞ்சு தான் பேசறிங்களா?"

"நன் சொல்ல வராத கொஞ்சம் கேளு மது அதுக்கு  முன்னாடி உங்கிட்ட ஒன்னு காட்டனும்"

அவள் பேசாது நிற்கவும் மெல்ல அவள் கையை பற்றி மடியில் வைக்க பட்டிருந்த பூச்செடிகள் அருகில் அழைத்து சென்றான்.

"ப்ளீஸ் கண்ணா மூடு மது"

காதுமடல் அருகில் வந்து அவன் கிசுகிசுக்க, மறுக்க தோன்றாமல் செய்தாள்.

ஒரு நிமிடம் கழித்து அதே போல கண்ணை திறக்க சொன்னான்.

பிரம்மித்து போனாள் மதுமிதா. அழகிய முத்து கற்கள் கொண்டு வேலை பாடு செய்ய பட்டிருந்த ஆள் உயர கண்ணாடியில் மெல்லியதை மிகவும் மெல்லிய நுணுக்கமான வேலைப்பாட்டால் ஆனா அவள் தோற்றம் உற்று கவனித்தால் தான் தெரியும்!!!! மேலே இடப்பக்கம் ஆதி என எழுதியிருக்க, கீழே வலப்பக்கம் மிதா என எழுத பட்டிருந்தது.

அவள் திகைப்பு பிரம்மிப்பு என ரசித்தவன் பின்னே நின்று கண்ணாடியில் அவளை கண்டு ரசித்தான்.

நேரில் பார்பதை விட கண்ணாடியில் பார்ப்பது அவனுக்கு இதமான அனுபவமாக இருந்தது!!!

"ஸ்வீட்டி வலிக்குதா டா, அப்படி கத்திட்டியே ஒரு நிமிஷம் ஒண்ணுமே ஓடல டா  எனக்கு, இப்போ பரவால தானே?"

ஏனோ மௌனம் காக்க மனமில்லை அவளுக்கு.

"ம்ம்ம் இப்போ வழியில்லை, எதுக்கு அப்படி தூக்கிட்டு ஓடுன? எல்லாரும் என்ன நினைப்பாங்க"

"எனக்கு உன்மேல கொள்ளை பிரியம் நு தான்"

"ப்ச்"

"ஈசி டா, யாரும் எதும் நினைக்கல டா"

"ம்ம்ம்" என்றவள் கைகளை பிசைய,

"ஆனா நீ என்ன நினைச்சன்னு எனக்கு தெரியுமே" என குறும்பாக சொன்னான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.