(Reading time: 38 - 75 minutes)

 

தெல்லாம் வேண்டாம் என ஸ்வேதா மது மறுக்க, ஒரு முறை அணிந்து அம்மாவிடமும் அத்தையிடமும் காட்டுங்கள் பிடிக்கவில்லை என்றால் அணிய வேண்டாமென அவள் கெஞ்சவும், அணிந்து வெளியே வந்தால் வித்யாவும் லலிதாவும் மகள்களுக்கு நெட்டி முறித்து திருஷ்டி களித்தனர்,

இதற்கு மேல் அவர்கள் அதை கழற்ற மேகா விடுவாளா என்ன.. கற்பகத்தின் அருகில் நின்று அதை பார்த்தவளை அமர வைத்து ஒற்றை கையில் அதே போல திருஷ்டி களைத்து கன்னத்தை தொட்டு முத்தமிட்டார் கற்பகம்.

அவ்வளவு தான் வனத்தை தொட்டு விட்டிருந்தாள் மேகா. அவள் கண்ணீரோ ஆனந்தத்தின் அடையாளமாய் கற்பகத்தின் பாதம் தொட்டது.!!!

இப்படி ஒரு ஒப்பனையில் மதுவை பார்த்தவன் மனது என்னவெல்லாம் நினைத்தது எங்கு சென்று சேர அப்படி வேகமாய் துடித்தது வாய் வழியே எகிறி குதித்து மதுவின் இதயத்தோடு கலக்க இப்போதும் தயார் என்பது போல அடித்து கொண்டது. அதனை என்னன்னாகளும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி கொண்டிருக்க, விழிகள் மட்டும் எந்த அசைவும் இன்றி அழகாய் அவள் புறம் மட்டும்..!!!!

அவள் கண்கள் அவனை சந்தித்த வேலை காலையில் தவித்து குழம்பிய மனது அவன் பார்வையிலேயே ஒரு வழி கண்டிருந்தது..!!!ஆனாலும் அவள் குழப்பம் ஒன்னும் தீரவில்லை...

அழகாய் அலைந்த கேசம் அகன்ற நெற்றியில் மெல்லிய சந்தன கீற்று நாசி இதழ்கள் அளவெடுத்து வைத்தார் போல அதன் நடுவில் அவன் கம்பீரத்தை பறைசாற்றும் மீசை பரந்த தோள்களை உரசிய படி கச்சிதமான பட்டு சட்டை, அவன் மன உறுதியும் கூட குறைவு தானோ?! அதை விட உறுதியான கரங்கள் அதையும் மார்புக்கு குறுக்கே கட்டி அணைத்து நின்றவனின் கால்களின் திடம் அவன் பிடிவாதத்தை விடவும் வலியது தான்!!!

அவளும் அவனை ஏற இறங்க பார்த்து நின்றவள் மீண்டும் அவன் பார்வையை சந்திக்க, சட்டென திரும்பி உள்ளே சென்றாள். அவளின் செய்கையில் சிரித்தவன் பின் தொடர்ந்தான். ரகு வருண் தவிர மூவர் இதை கண்டு கொண்டனர்!!! 

னைவருக்கும் மாலை டிபனாக காபியும், சூடாக செய்த போண்டாவும் அதிரசமும் என தட்டில் வைத்து பெண்கள் அனைவரும் எடுத்து கொடுக்க.. மூத்த தலையினர் ஹாலில் அமர்ந்து சாப்பிட இளைய பட்டாளம் முன் பக்க தோட்டத்தில் அமர்ந்தது...

 பெண்கள் ஹாலிற்கும் தோட்டத்திற்கும் நடுவில் இருந்த இடத்தில உட்கார்ந்து பேசி கொண்டிருக்க... குட்டீஸ் இருவரும் பட்டாசு வெடிக்க போகலாம் என அடம் பிடித்தனர்.. சாப்பிட்டு முடித்த ரகு ஆதி வருண் மூவரும் பட்டாசுகள் அடங்கிய பையை எடுத்து கொண்டு போய் தோட்டத்தில் கடை பரப்ப...

ஸ்ரீயும் திவாவும் ஆரதிரிகா ப்ரிஷனை தூக்கி கொண்டு வந்தனர். பெரியவர்கள் அவர்களை பார்க்கும் வண்ணம் அமர்ந்து கொள்ள பெண்கள் நின்று கொண்டு அவர்களை பார்த்தனர்.

ஆதியும் ரகுவும் மத்தாப்புகளை கொளுத்தி குழந்தைகளின் கையில் பத்திரமாக கொடுத்து பிடித்துக் கொள்ள.. வருண் பெண்களையும் அழைத்தான்..

ஸ்ரீ அதற்குள் சென்று அவன் கேமேராவுடன் வர, திவாக்கரும் அவன் கொண்டு வந்திருந்த  கேமேராவை எடுத்து கொண்டான்..

இருவரும் ஒருவரை  ஒருவர் பார்த்து வியப்பாக சிறிது கொள்ள, ஆராவும் தன்யாவும் அவர்களை முறைத்து விட்டு ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு சிரித்து கொண்டனர்.

ஆண்கள் இருவரும் அவர்களின் சிரிப்பில் சொக்கி நிக்க, விழிகளை உருட்டி லேசாக முறைத்து விட்டு மீண்டும் மற்றவரின் பக்கம் திரும்பினர்.

அனைவரையும் நிற்க வைத்து ஒரு படம் எடுக்கும் படி வேலைகாரரிடம் எப்படி எடுப்பது என தெளிவாக நான்கு ஐந்து முறை சொல்லி விட்டு அனைவரும் நிற்க அவர் முதலாளி சொல்லிய வேலையை கட்சிதமாய் முடித்தார்.

பின் வாண்டுகள் இருவரையும் வைத்து கொண்டு மத்தாப்புகளை கொளுத்தியபடி பெண்கள் ஐவரும் ஆனந்தமாக இருந்தனர்.

ரகு ஆதி வருண் மூவரும் ஆட்டம் பாம், தவ்சண்ட் வாலா என வெடிகளை வைத்துக் கொண்டு இருந்தனர். அது மட்டும் இல்லாமல் வானில் சென்று வெடிக்கும் 'ஸ்கை ஷாட்டை' வைத்து வானில் ஜாலங்கள் செய்து கொண்டிருந்தனர்.

ஸ்ரீயும் திவாவும் பட்டாசு வெடித்தாலும் இந்த அழகிய தருணங்களை பதிவு செய்ய தவறவில்லை.

வருணின் உதவியால் மேகா,மது,ஸ்வேதா மூவரும் மத்தாப்புகளை கொளுத்தி தரைசக்கரம், பூந்தொட்டி என சிறிய அழகிய பட்டாசுகளை வைத்து அந்த நெருப்பு பூக்கள் சிந்தி சிதறும் அழகை ரசித்த வண்ணம் இருந்தனர்.

அந்த நெருப்பு சிதறல்களின் ஒளியில் தங்கள் இணையை கண்ட ஆண்கள் தவிக்கும் மனதை அடக்கிய படி தொடர்ந்தனர்..

ரகு மேகாவை அழைத்து சென்று 'ஆட்டம் பாம்' ஒன்றை வைக்க சொல்ல, அவள் பயத்தில் நான் மாட்டேன் என ஓட முயல அவள் கைகளை பற்றி அதை வைத்தவன் திரும்பும் முன் கையை இழுத்துக் கொண்டு ஓடி விட்டாள் மேகா.

காதை பொத்திக் கொண்டு  அவள் பயத்துடன் உதடு சுளித்து நிற்பதை பார்த்தவன் மனதை கட்டுக்குள் வைக்க மிகவும் சிரம பட்டான்.

பெரியவர்கள் சற்று நேரம் அமர்ந்து விட்டு வீட்டினுள் சென்று தொலைகாட்சியில் ஒளிபரப்பான நிகழ்சிகளையும் படங்களையும் பார்த்தபடி தங்கள் சுவாரசியமான பேச்சை தொடர்ந்தனர்.

இது தான் சமயமென கேமராவை வைத்து விட்டு தத்தம் மனைவியுடன் கொஞ்சலும் சீண்டலுமாக பட்டாசுகளை வைத்தனர் ஸ்ரீயும் திவாவும்.

வருணும் ஸ்வேதாவோடு நின்று கொண்டு அவள் வெடிக்கும் வெடிகலையே தானும் வெடித்த படி அவளை கண்களால் தீண்டி சீண்டி கொண்டிருந்தான்..

இங்கு இப்படிப்பட்ட விஷயங்கள் இருப்பதையும் நடப்பதையும் மறந்து, மதுவை இழுத்து கொண்டு வந்து ஒரு தவ்சண்ட் வாலாவை வைத்தான் ஆதி. அவள் ஓடி விட முடியாதபடி அவள் கையை அவன் இறுக பற்றியிருக்க பயத்தில் அவனை ஒன்றி நின்று கொண்டாள் மது. வேறு வலி இல்லையே..!!!

ஆனால் மனம் மட்டும் உலைகலமாய் கொதித்தது!!! ஆனாலும் ஓர் இன்ப சாரல் தெறித்து விழுந்து இதயத்தில் வழிந்தது...

இவ்வாறு தங்கள் ஜோடியுடன் அவரவர் மகிச்சியை இருக்க.. ஸ்வேதாவும் மதுவும் மட்டும் வேண்டா வெறுப்பாக..!!!

இது தான் சரியான சமயம் என்று எண்ணிய ஆதி வருணிடம் கண் ஜாடையில் கூப்பிட அவனும் சரி என்பது போல பார்த்தான்..

மத்தாப்பை பிடித்திருந்த பரிஷன் நெருப்பு பக்கத்தில் கையை கொண்டு பொய் சுட்டு கொள்ள வீரிட்டு அழ ஆரம்பித்தான் அவ்வளவு நேரம் அவன் அழகாக பிடித்து கொண்டு இருக்க, தன்யா அவனிடம் கொடுத்து விடு திவக்கரிடம் ஏதோ சொல்ல திரும்பினால் அதற்குள் இப்படி ஆகி விட்டது..

அதை பார்த்து கொண்டிருந்த ஸ்வேதா விரைந்து ஓடி வர அவன் கீழே போட்ட மத்தாப்பு கம்பியில் காலை வைத்தவள் "ஆஆஆஹ் அம்ம்மா" என கத்தி கொண்டே நொண்டி அடிக்க..

அனைவரும் பதட்டம் ஆனனர். நிற்க முடியாமல் திணறியவளை வருண் நொடி நேரம் தாமதிக்காமல் தூக்கி கொண்டான் சற்றே வியந்தாலும் அவன் தான் ஸ்வேதாவிற்கு அருகில் நின்றதால் பெரிதாக ஏதும் தோன்றவில்லை. ஆனால் மதுவிற்கு ஏதோ பிடிபட்டது!!!

தன்யாவும் ப்ரிஷனை தூக்கி கொண்டு உள்ளே ஓட, சத்தம் கேட்டு விபரம் அறிந்த ரஞ்சனி   மருந்து பெட்டியை தூக்கி வந்து ப்ரிஷணிற்கு வலிகதது போல் மருந்தை தடவினார்.

அவன் அழாமல் இருக்க அனைவரும் விளையாட்டு காட்ட, அவன் அழுததையும் எல்லோர் முகத்தில் இருந்த திகைப்பையும் பதற்றத்தையும் பார்த்த ஆரத்ரிக்க அவளும் அழுதாள்.

ஒருவழியாக ப்ரிஷணிற்கு மருந்து போட்டு அவனை தூக்கி கொண்டு மது மாடிக்கு செல்ல, ரிகாவை தூக்கி கொண்டு ஆதியும் சென்றான்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.