(Reading time: 38 - 75 minutes)

 

"வாவ் அவ்வளவு பெரிய பொன்னா? ஹ்ம்ம் நாலு வருஷத்துக்கு முன்னாடி அவ பிளஸ் 2 படிக்கும் பொது பார்த்தது"

"ம்ம்ம் அதுக்கு அப்புறம் பி.காம் முடிச்சுட்டு எம் பி எ படிக்றா, அப்பாவோட பிசினஸ் பாத்துக்கணும் ல"

"ம்ம்ம் அப்போ நீ"

"ம்ம்ம் நான் சிவில் தானே படிச்சேன் இப்போ ஒரு நல்ல கம்பெனி ல வொர்க் பண்றேன்"

"ஹ்ம்ம் அப்புரம்ம்ம்.. அத்த.. அத்தை மாமா எப்படி இருக்காங்க?"

அவள் தயக்கத்தை பார்த்து புன்னகைத்தவன், "ரொம்ப நல்லா இருக்காங்க"

"என்ன மட்டுமே கேள்வி கேட்டுட்டு இருக்க.. நீ எப்படி இருக்க? என்ன பண்ற?'

"நான் சூப்பரா இருக்கேன் டா, அமெரிக்கால இருந்து வந்து ஒன் வீக் ஆச்சு... நி..."

அதற்குள் அவள் செல்போன் அலற "ஒரு நிமிஷம்" என கூறி விட்டு எழுந்து அவள் வெளியே செல்ல.. அவனும் பின் தொடர்ந்தான்...

"என் ப்ரெண்ட் தான் கூப்ட அவளை பாக்க தான் போய்க்கிட்டு இருந்தேன், அவ ஏதோ அவசர வேலையா வெளில போறாளாம்...ப்ச்.."

"ஓஹோ"

"ஹே ஒன்னு பண்ணலாமா? நம்ம எங்கயாவுது போகலாமா? நீ இப்போ ப்ரீயா? " துள்ளலும் ஆசையுமாக அவள் கேட்க,

 'நான் கேட்கனும்னு நினைச்சத நீயே கேட்டுட்ட நான் விடுவனா?'

"ம்ம்ம் போலாம் ஸ்வே இங்க பக்கதுல ஒரு காபி ஷாப்  இருக்கு அங்க போலாம்"

"ம்ம்ம் ஓகே நான் கார்ல வந்தேன்.. நீ..."என யோசனையுடன் அவள் பார்க்க

"நான் என் பைக்ல வந்தேன், நான் அதுலயே வரேனே.."

"ஓகே"

வன் பைக்கில் முன் செல்ல அவன் பைக்கை பின் தொடர்ந்தது அவள் கார். அவளை பின் தொடர்ந்தது அவன் மனம்.

நம்ப முடியாத ஆச்சர்யமாக அவளே கேட்டது சந்தோஷம் தான், ஆனால் காதலை சொன்னால் என்ன செய்வாள் என்று யோசித்தவாறு அந்த காபி ஷாப் முன் நின்றான்.

அவள் காரை பார்கிங்கில் விட்டு விட்டு வருவதற்குள் அங்கு இருந்த பேரர் ஒருவனிடம் அந்த பரிசு பொருளை கொடுத்து வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டு வந்தான்.

அவள் வந்ததும் தோட்டம் போன்ற அமைப்பில் இருந்த அந்த காபி ஷாப்பில் ஒரு குடையின் கீழ் இருந்த மேஜையில் அமர்ந்தவர்கள் தங்களுக்கான ஆர்டரை கொடுத்து விட்டு பேச்சை தொடங்கினர்...

பள்ளி கல்லூரி வேலை வீடு என தொடங்கி சினிமா அரசியல் சமூகம் கலை என பேச்சு வளர்ந்து கொண்டே போனது. பேச்சின் நடுவே அவன் பார்வையும் புன்னகையும் ஏனோ ஸ்வேதா தடுமாற்றமாக உணர்ந்தாள்.

இருவரும் காபி குடித்து முடித்து கிளம்புகையில் வானம் இருட்டி கொண்டு வர,

ஸ்வேதா

"வருண் கிளம்புவோமா? மழை வர மாதிரி இருக்கு.. பக்கத்தில் தான வீடுன்னு சொன்ன அப்போ பைக்க பூட்டிட்டு என்கூட கார்லயே வா உன்ன டிராப் பண்ணிட்டு போறேன்"

"ஸ்வே"

"ஸ்ஸ்ஸ்... ஒன்னும் சொல்லாத அத்தை இருந்தா நான் பாத்துகறேன், வெயிட் கார எடுத்துட்டு வரேன்" என்று அவன் பேச இடம் கொடுக்காமல் அவள் நகர

வருணிற்கு கோபம் தான் வந்தது.

கிப்டை திரும்ப வாங்கி கொண்டு அவளுக்கு தெரியாமல் காரின் பின் சீட்டில் வைத்து விட்டு முன் சீட்டில் அமர்ந்தான்..

அவள் அவன் வீட்டிற்கு செல்லாமல் கடற்கரைக்கு செல்ல, அவன் புருவம் கேள்வியாய் உயர்ந்தது...

"இல்லப்பா மழை வரதுக்கு முன்னாடி கடல் பார்க்க அழகா இருக்கும் அதான் இந்த வழில வந்தேன்"

"நிறுத்து ஸ்வேதா கொஞ்ச நேரம் பீச்ல உட்காந்து பேசலாம் மழை வந்த உடனே கிளம்பிடலாம்"

அவளுக்கும் அது பிடித்தது தான் எனவும் சட்டென காரை நிறுத்தி இறங்கினாள். அவள் கடலை பார்த்து கொண்டு நிற்க அவன் பரிசை எடுத்து கொண்டு இறங்கினான். சிறிது  நேரம் நடந்து விட்டு ஒரு படகின் அருகில் அமர்ந்து பேசிய பின் மெல்ல வருண் காரை நோக்கி நகர்ந்தான்.

நின்று திரும்பி அவளை பார்க்க அவள் பத்தடி தூரத்தில் வந்து கொண்டு இருந்தாள். கனவில் கண்டது போல் அதே பார்வை அவன் இதயத்தை சுக்கு நூறாக துண்டு போடும் பார்வை...

அவள் அருகில் வரவும் அவள் வலது கையை மென்மையாக பற்றியவன், ஏதோ ஒரு உலகில் இருந்தான்.

அழகிய செயின் ஒன்றை அவள் முன் காட்டினான்.

மெல்லிய தங்க சங்கிலி... அவள் கழுத்து பாரம் தாங்குமோ என பார்த்து வாங்கினான் போலும்... ஆங்கில எழுத்து வி டாலராக தொங்க அதான் முடிவு பகுதியில் சிறியதாக எஸ் தொங்கி கொண்டிருந்தது. ஒன்றோடு ஒன்று பினைந்ததை போன்ற அமைப்பு.

அதிர்ந்து போனாள் ஸ்வேதா.

"ஸ்வீட்டி ஐ லவ் யூ சோ மச் டா, உனக்காக தான் இந்த நாலு வருஷமா காத்துகிட்டு இருக்கு இந்த மனசு, இதுல யாராலையும் நுழைய முடியல டா, உனக்கே உனக்காகன்னு பத்திரமா வெச்சுருக்கேன்.. இங்கே நீ மட்டும் தான் இருக்க இருப்ப இருக்கணும்...." அவன் குரலில் அழுத்தம்.

"இந்த கண்ணு, நீ பார்க்கிற ஒரு பார்வை அது போதும்டி வாழ்க்கை முழுக்க நான் சந்தோசமா இருக்க... தினமும் கனவில் வந்தது மாதிரி நிஜத்திலயும் என்கூடவே வந்திடு டாமா இனியும் காத்திருக்க உன்ன விட்டு தள்ளி இருக்க என்னால முடியாது"

மழை தூர ஆரம்பித்திருந்தது. அதை கூட இருவரும் உணராமல் உணர்ச்சி பெருக்கில் இருந்தனர். ஆனால் எதிர்மறை உணர்ச்சிகள்.மழை வலுக்க, நனைந்த மலராய் இருந்தவளை அணைக்க முயன்ற பொது தான் நடந்தது அது..

"பளார்" என அறைந்து இருந்தாள் ஸ்வேதா.இயல்பிலேயே மிகவும் பொறுமைசாலி அவள். மென்மையனவலும் கூட.   ஆனால் நிச்சயம் ஆனா ஒரு பொன்னை அது ஆகா விட்டால் தான் என்ன ஒரு பொன்னை அதுவும் நாடு ரோட்டில் வைத்து கட்டி பிடிக்க ச்சே ச்சே...

அறை விழுந்த கன்னத்தில் கை வைத்து கொண்டு கோபமும் வெறியுமாக அவளை பார்த்தான் வருண்.செயின் அவள் கையில் இருந்தது.

"என்ன நினைசுகிட்டு இந்த மாதிரி எல்லாம் நடந்துக்கற வருண்? என்ன போயி அதும்.. நீயா வருண் இப்படி? ஏற்கனவே இருக்கும் பிரச்சனை போதாது இப்போ இது"

"எனக்கு நிச்சயம் முடிஞ்சு ரெண்டு நாள் ஆகுது வருண் அதும் ஆதி அத்தான் கூட, சீக்கிரமே கல்யாணம் நடக்க போகுது"

வானில் இடித்த இடி அவன் தலையில் விழுந்திருந்தால் கூட சந்தோச பட்டிருப்பான் அவன். ஆனால் இவள் தலையில் இறக்கிய இடி?!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.