(Reading time: 16 - 31 minutes)

"மா...ஏன்?"

"அப்போ பெட்ஷீட் போர்த்திட்டு ஃபோன் நோண்டுறது யாரு?"-அப்போது,தான் கவனித்தான்.அது,அவனது போர்வை இல்லை என்று,அது மிகவும் மெல்லியதாக இருந்ததால், அவனை காட்டிக் கொடுத்து விட்டது.

"இது யாரோடது?"

"ம்...இது சரியில்லை!"

"எது சரியில்லை?"

"ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் கவனி!"

"போன் யூஸ் பண்ணது ஒரு குத்தமாடா?"

"போன் யூஸ் பண்றது குத்தமில்லை!ராத்திரி சம்பந்தமே இல்லாம புலம்பி,அடுத்தவன் தூக்கத்தை கெடுக்கறது தான் குத்தம்!"

"யாரு?நான்?புலம்புறது?சரியான லூசாயிடுச்சுங்க எல்லாம்!"

"யாருடா?அந்த வெண்ணிலா?"-தடுமாறி தான் போனான் ரஞ்சித்.

"வெண்ணிலா...?யாரு??யாரு வெண்ணிலா?"

"அதை தான் தம்பி நானும் கேட்கிறேன்!!"-இதற்கு மேல் தப்பிக்க முடியாது என்று,உளறினான்.

"அண்ணா!"

"என்ன?"-அவன்,கரத்தைப் பற்றிக் கொண்டு,

"அம்மாக்கிட்ட சொல்லிடாதே! நமக்குள்ள இருக்கட்டும்."-என்று அனைத்தையும் கூறி முடித்தான்.

"அடப்பாவி! அப்போ, உண்மையில உனக்கு வெண்ணிலான்னு பொண்ணை தெரியுமா?"

"எது?நீதானே ராத்திரி புலம்பினேன்னு சொன்ன?"

"நான் சும்மா சொன்னேன்டா!"

"அப்போ வெண்ணிலான்னு சரியா எப்படி சொன்ன?"

"அது பக்கத்து வீட்டில இருக்கிற பாப்பா பெயர்!"

"அப்போ,நீ தெரியாம தான் கேட்டியா?நானா தான் உளறிட்டேனா?"

"ம்...ஆனாலும்,சொன்ன வரைக்கும் சந்தோஷம்!"

"ஏன்?"

"எதாவது காரியம்னா, உன்னை யூஸ்      பண்ணிக்கலாம் பாரு!"

"..............."

"பொண்ணு எப்படி இருப்பாடா?"

"பிளிங்கிங் கோகினூர் டைமண்ட் ஸ்கல்ப்சர்ணா!!!!

அவ,கண்ணு அது எப்போ பாரு எதையாவது சொல்லிட்டே இருக்கும்!எப்பவுமே முகத்துல,ஒரு சின்ன சிரிப்பு இருந்துட்டே இருக்கும்.அவ டிரஸ்ஸிங் சென்ஸ் இதுவரைக்கும் அதுல,எந்த ஆபாசமும் பார்த்ததில்லை."-அடுக்கிக் கொண்டே போனான் ரஞ்சித்.

அவன் கூறுவதைக் கேட்டப்படி படுத்து விட்டான் அவன் தமையன்.

"என்னடா?படுத்துட்ட?"

"பின்ன என்ன?எப்படி இருப்பான்னு ஒரு கேள்வி கேட்டேன்.ஓயாம பதில் சொல்ற?எனக்கு டயர்ட் ஆகாது!"

"உனக்கு என்னடா தெரியும் என் ஃப்பீலிங்ஸ் பற்றி!"

"லவ் சொல்லிட்டியா?"

"இல்லை...அவளுக்கு விருப்பம் இல்லனா???எனக்கு தெரிந்த வரையில் அவ அப்பா செல்லம்!!!அப்போ,கண்டிப்பா இன்னொருத்தன் பெயரை அவ பெயர் பின்னாடி சேர்க்கிறதைப் பற்றி யோசிச்சிருக்க மாட்டா!"

"சரி...இப்போ,என்ன பண்ண போற?"

"தெரியலை..."

"டேய்...! உண்மையில லவ் பண்றீயா?"

"லவ் பண்ணுவதில் என்னடா உண்மை?பொய்?லவ்வுனாலே உண்மை தான்!"

"அம்மாக்கு  விஷயம் தெரிஞ்சா?"

"கொஞ்ச நாள்ல நானே சொல்ல தான் போறேன்!"

"பொண்ணு கேரக்டர் சரியில்லனா?"

"நிச்சயமா இருக்காது!!!"

"எதை வைத்து சொல்ற?"

"அவளை வைத்து தான்!"-ரஞ்சித்திடம் காணப்பட்ட உறுதி,கார்த்திக்கை சற்று தடுமாறவே வைத்தது.

"ஆல் தி பெஸ்ட் பிரதர்!"

"தேங்க்ஸ் பிரதர்.அண்ட், சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ,அப்போ தான் அம்மாக்கிட்ட என்  விஷயத்தை சொல்ல முடியும்!"

"முதல்ல,அந்தப் பொண்ணுக்கிட்ட விஷயத்தை சொல்லு!அம்மாக்கிட்ட சொல்ற முகத்தைப் பாரு!"-என்றப்படி போர்த்திக் கொண்டு உறங்க ஆரம்பித்தான் கார்த்திக்.

நாட்கள் நகர ஆரம்பித்தன...

காலம் ரஞ்சித்தோடு, வெண்ணிலாவின் நெருக்கத்தினை அதிகப்படுத்தி நண்பர்களாக்கியது.

"ரஞ்சித்!"

"ம்..."

"உன்கிட்ட ஒண்ணு கேட்கட்டா?"

"கேளு!"

"கார்த்திக் உன் கல்யாணத்தைப் பற்றி பேச்சு எடுத்தார்!"

"என்னவாம்?"

"கல்யாணம் வேண்டாம்னு சொல்லிருக்கியாமே!"

".................."

"ஏன்?"

"................."

"பதில் சொல்லு... யாரையாவது,லவ் பண்றீயா?"-ரஞ்சித் சிறிது நேரம் அவளையே உற்று பார்த்தான்.

அவள் கண்கள்,அவனது கண்களை சந்திக்க முடியாமல் தடுமாறி தாழ்ந்தன.

"என்ன?"

"பெண்களின் மன ஆழத்தை எந்த விஞ்ஞானியும் கூட,கண்டுப்பிடிக்க முடியாது!"-என்று மனதில் எண்ணிக் கொண்டான்.

"என்ன?பதில் சொல்லு.."

"நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்!"-கேட்டதும், நிலாவின் முகம் வாடியது.அதை அவன் கவனிக்க தவறவில்லை.

"யாரு?"

"அதான் சொன்னேனே ஒரு பொண்ணு!"

"அவ பெயர் என்ன?"

"ஏன்?"

"சொல்லு!"

"ம்...அம்மூ!"

"அம்மூ?"

"நான் வைத்த பெயர்!"

"உண்மையான பெயர்?"

"அது...சஸ்பென்ஸ்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.