(Reading time: 16 - 31 minutes)

கார்த்திக் கூறியது அனைத்தும் சரியென நிரூபித்தது.

"ரஞ்சு...நீ?"-அதற்கு மேல் அவளை,அவன் பேச விடவில்லை.

நேராக அவளை அணைத்துக் கொண்டான்.

அவனது,அந்தச் செயலினால் இருவருக்கு அதிர்ச்சி,ஒன்று... வெண்ணிலாவிற்கு, பிறிதொன்று ப்ரியாவிற்கு!!!!

"என் மனசுல இருக்கிறப் பொண்ணு நீ தான் நிலா!"

"..................."

"நான் உன்னை தான் காதலிக்கிறேன்!"

"................."

"என் மனசுல வேற யாரும் இல்லை!"-கூறியப்பின் அவளை விடுவித்தான்.

நிலாவின்,அதிர்ச்சி நிறைந்த கண்கள் மேலும் அதிர்ந்தன.

அவளது கவனம் தற்செயலாக ப்ரியாவிடம் சென்றது.

இப்போது,அவளது கண்களின் நீர் பூமியை நனைத்தது.

நிலாவின் மனம் இருதலை கொள்ளி எறும்பாய் ஆனது,

"நான் உன்னை காதலிக்கலை ரஞ்சித்!"-அவளது அந்த வாக்கியமானது,அவனது இருதயத்தை கிழித்தது.

"என் மனசுல,உன் மேல எந்த எண்ணமும் இல்லை!"

"நிலா?"

"ஒரு பொண்ணு உன் கூட சிரித்து பேசுனா?அது...காதலாகி விடுமா?"

"பொய்!"

"இல்லை..எனக்கு பொய் சொல்லி! எந்த இலாபமும் இல்லை! எனக்கு,உன் மேல எந்த தவறான எண்ணமும் இல்லை!"

"அப்பறம் ஏன்டி?என்னைப் பார்த்ததும் அழுத?நான் ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன்னு சொன்ன உடனே,உன் முகம் வாடினது ஏன்?"

"................"

"எதுக்காகடி?இப்படி வார்த்தைகளால கொல்ற?சத்தியமா சொல்லு....உன் மனசுல நான் இல்லை?"-பதில் வராமல் தவித்தாள் நிலா.

"வேண்டாம்! நீ சொல்ல வேண்டாம்! உன்னை பொய் சொல்ல வைக்க நான் விரும்பலை.நான் போயிடுறேன்.இனி,உன் வாழ்க்கையில வர மாட்டேன்!"-பதிலுக்கு காத்திராமல் விரைந்தான் ரஞ்சித்.

அவன் சென்றதும்,நிலாவின் பார்வை ப்ரியாவை தொட்டது.அவள் கண்களில் இன்னும் கண்ணீர்.

"எதிர்ப்பார்க்கலை நிலா!"-அவளும்,அங்கிருந்து சென்றுவிட்டாள்.

விதியின் சக்தி அளப்பறியது.

ஒரு கல் இரு மாங்காயை வீழ்த்தியது.

ஒரே சம்பவத்தில் இரு அன்பிற்குரிய நெஞ்சங்கள் அந்த அப்பாவி மனதினை காயம் செய்து கண்ணீர் வடிய வைத்தன.

ஜெகத்தினில் விதியை விஞ்சியவர் யார் தான் உண்டு???

நான் போறேன்.இனி,உன் வாழ்க்கையில வர மாட்டேன்!!!

என்று கூறிவிட்டு சென்றவன்,மனதில் எழுந்த கோபத்தையும், வருத்தத்தையும் தன் வாகனத்தில் காட்டினான்.

கண் பார்த்த திசையில் பயணம் நடந்தது.

அதி வேகமாக பயணம் செய்தான்.

செவிகளில் அவள் கூறிய அதே வார்த்தைகள்.....

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டானது.

கோபத்தில் அவன் மனம் சிந்திக்கும் திறம் தன்னை இழந்தது.

இறைவனும் அவன் கண் பார்வையை அவன் மீது இருந்து எடுத்து விட்டான் போலும்!!!

கண்மண் தெரியாத அவன் வேகம் நிரந்தரமாய் அவன் கண்மூட வழிவகை செய்தது.

நடந்த அந்த விபத்தின் இறுதியில்,அவன் இதழ்களில் இருந்து வெளிப்பட்ட இறுதி வார்த்தை,'வெண்ணிலா.'.......

ரஞ்சித் சென்றப்பின்,

அவன் சென்றானா???இல்லை...

கொன்றான்...

இனி,உன் வாழ்க்கையில வர மாட்டேன்!!!!

இவ்வளவு சிக்கல்கள் ஏற்படும் என்று நினைத்தாளா???

புரிந்துக் கொள்ளாமல்

அனைத்தையும் தரை மட்டாமாக்கி சென்றானே???

இனி,அவன் முகத்தில் எப்படி விழிப்பேன்???

ப்ரியாவிடம் என்ன பதிலுரைப்பது???

இரவு அனைத்தும் நரகமாக மாறியது.

உறக்கம் வரவில்லை...

எப்படி வரும்???

விடியலில் விடிந்த சூரியனானவன்,தன் பிரகாசத்தில் இருந்து நிலை தடுமாறி இருந்தான்.

பகலவனை பாரத்தப்படி நின்றிருந்தாள் வெண்ணிலா.

மணி 9 என்றது.

ப்ரியா வரவில்லை....

தன்னை அழைக்கவும் இல்லை.

அவளது,சிந்தனையை கலைக்க அவள் கைப்பேசி சிணுங்கியது.

"ஹலோ!"

"நிலா...நான் கார்த்திக் பேசுறேன்மா!"

"சொல்லுங்க கார்த்திக்!"

"நிலா நீ உடனே, அப்போலோ ஹாஸ்பிட்டல் வா!"

"என்னாச்சு?எதாவது பிரச்சனையா?"

"ரஞ்சித்...ரஞ்சித்துக்கு ஆக்ஸிடண்ட் ஆயிடுச்சி!"-கேட்டவள் நொறுங்கி விட்டாள்.

கையிலிருந்த கைப்பேசி கை நழுவி விழுந்தது.

செய்வதறியாது நொறுங்கிப் போய் அப்படியே அமர்ந்தாள்.

சிறிது நேரம் கழிய...

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு,

மருத்துவமனைக்கு விரைந்தாள்.

விளையாட்டு என்ன என்றால்...

ப்ரியாவும்,சஞ்சனாவும் அங்கே வந்திருந்தனர்.

அவளிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை, ரஞ்சித்திற்கு விபத்து ஏற்பட்டது தெரிந்தும் அவளிடம் கூறாதது அவளை மேலும் நொறுக்கியது.

கார்த்திக் மருத்துவரிடம் ஏதோ பேசிக்       கொண்டிருந்தான்.

அவன் முகத்தில் பதற்றம்.

அவளைப் பார்த்ததும்,

"ஏன் நிலா?இவ்வளவு லேட்?"

"கார்த்திக்..."-பதில் வரவில்லை.

"அவ எப்படி வருவா?ரஞ்சித்திற்கும்,அவளுக்கும் அப்படி என்ன தொடர்பு?"-பதில் வந்தது      சஞ்சனாவிடமிருந்து,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.