(Reading time: 16 - 31 minutes)

"ஞ்சு!"

"ப்ளீஸ்! சீக்கிரம்  சொல்லிடுறேன்!"

"சரி எனக்கு ஒரு விஷயம் சொல்லு!"

"என்ன?"

"அவளை நான் பார்த்திருக்கிறேனா?"

"ஆ...பார்த்திக்கிறீயே! அவளை தினமும் நீ பார்ப்ப,உனக்கு தான் அவளைப் பற்றி என்னை விட அதிகமா தெரியும்!"

"சரி!"

"ம்..."

"நான் கிளம்புறேன்!"

"ஏன்?"

"டைம் ஆயிடுச்சி! அக்கா தேடுவாங்க!"

"ம்...பார்த்துப் போ!"

"ம்..."

"அப்பறம்,ப்ரியாவை கேட்டதா சொல்லு!"-அவளுக்கு,என்னவோ போலானது.

"சரி!"-அவள்      கிளம்பிவிட்டாள்.

அவள் மனம் தவறாக கணக்குப் போட்டது.

ரஞ்சித்தின் இதயம் கவர்ந்தவள் ப்ரியா தான் என்று எண்ணியது.

தன் தங்கையை போல் என்னை நினைத்தவளின் மனம் கவர்ந்தவனை, எவ்வாறு தனக்குரியவனாய் எண்ணினேன் என்று வருந்தினாள் வெண்ணிலா.

வீட்டிற்கு வந்தாள்.

"நிலா! கை கழுவிட்டு சாப்பிட வா!"

"பசிக்கலைக்கா!"

"இவ்வளவு லேட்டா வர?ரஞ்சித்தைப் பார்த்துட்டு வருகிறாயா?"

"ம்..."

"எப்படி இருக்கிறார்?"

"நல்லா இருக்கிறார்!"-அதற்கு மேல் பதில் கூற விரும்பவில்லை.

தன் அறைக்கு    சென்றுவிட்டாள்.

இதில்,விதியின் சதி என்ன என்றால்....

ப்ரியாவிற்கு ரஞ்சித்தின் மேல் ஒரு விருப்பத்தை வளர்த்துவிட்டு இருந்தது.

நிலாவை சாப்பிட அழைக்க,அவள் அறைக்கு சென்றாள்.

அவள்,வானின் இளவரசி வெண்ணிலவை பார்த்தப்படி நின்றிருந்தாள்.

"நிலா!"

"ம்..."

"என்ன?எப்போதும், சூரியனோட ரொமான்ஸ் பண்ணுவ,இப்போ உன் கூட நீயே ரொமான்ஸ் பண்ற?"

"சூரியன் எனக்கு சொந்தமானது இல்லக்கா!

அதான்..."

"என்னாச்சு உனக்கு?"

"ஒண்ணுமில்லைக்கா! ரஞ்சித் பற்றி என்ன நினைக்கிற நீ?"-அவள்,முகத்தில் நாணம் படர்ந்தது.அதைப் பார்த்த நிலாவின் முகம் இறுகியது.

"என்ன?திடீர்னு?"

"சொல்லு..."

"அது...!"

"உனக்கு அவரைப் பிடிக்குமா?"

"..................."

"சொல்லு!"

"பிடிக்கும்!"-அந்த நிமிடமே தன் உயிர் பிரிய கூடாதா?என தோன்றியது வெண்ணிலாவிற்கு!!!!!

"அது...என்னன்னு தெரியலை...அவரைப் பற்றி பேசும் போதெல்லாம், என்னமோ பண்ணுது!மனசு இலேசாகுது!"

"ஒரு வார்த்தை லவ் பண்ணுறேன்னு சொல்லிடேன்கா!"-என்றாள் இதழ் அளவில் மட்டும் சிரிப்பை வளர்த்தப்படி,

"போடி!"-என்று அங்கிருந்து ஓடி விட்டாள் ப்ரியா.

அதுவரை அடங்கி இருந்த கண்ணீர்...நான் வரட்டுமா?உனக்கு ஆறுதலாக?என்று வினவ...அவள் சரியென்று ஆணை பிறப்பிக்க,அழுது தீர்த்தன அவள் கண்கள்.

மனம்...இனி,ரஞ்சித் தனக்கு உரியவன் இல்லை என்று தீர்மானித்தது.

ஒரு முக்கோண காதல் கதையானது இது???

இவள் தான் தனக்குரியவள்...என்று பார்த்த மாத்திரத்தில் தீர்மானித்தான் ஒருவன்.

இவன் தனக்கு கிடைக்க மாட்டான் என்று மனதில் துளிர்த்த காதலை கொன்றாள் ஒருத்தி.

எதிர் நின்றவன் மனம் யாரை நினைத்தது என்று அறியாது,வினையை வளர்த்தாள் இன்னொருத்தி!!!

"அடப்பாவி!ஏன்டா அப்படி சொன்ன?"-கொதித்து விட்டான் கார்த்திக்.

"ஏன்?"

"உன் லவ்வை சொல்ல நல்ல வாய்ப்பு! உன்னை தான் காதலிக்கிறேன்னு சொல்லி இருக்கலாம்ல?"

"அவளுக்கே தெரியும்... நடிக்கிறா!"

"இல்லை ரஞ்சித்! நிலாக்கூட பழகுனதை வைத்து சொல்றேன்!அவ,உன் மனசுல வேற யாரோ இருக்கிறதா தான் நினைத்திருப்பாள்!"

"உனக்கு என்ன?அவளைப் பற்றி என்னை விட,அதிகமா தெரியுமா?"

"தெரியும்...நீ மனசுல காதலை வைத்துக் கொண்டு,அவ கூட பழகின,அதனால,உனக்கு அவ ப்ளஸ் மட்டும் தெரியும்!

நான் அவளுக்கு நல்ல நண்பனா இருந்தேன். அதனால,அவ பலவீனமும் எனக்கு தெரியும்!"-நண்பனுக்கும்,காதலனுக்கும் இடையேயான வித்தியாசம் இது தான்!

"................."

"என்னால் நூறு சதவீதம் சொல்ல முடியும்! நீ யாரையோ லவ் பண்றதா தான் நிலா நினைத்திருப்பா!"

"..............."

"நீ போய் பேசு!!!உண்மையை தயவுசெய்து சொல்லிடு! ஒரு பொண்ணோட உணர்ச்சியோட விளையாடாதே!"-ரஞ்சித்,தன் பைக்கை எடுத்துக் கொண்டு அவள் வீட்டிற்கு உடனடியாக சென்றான்.

கதவை தட்டினான்.

ப்ரியா கதவைத் திறந்தாள்.

"ரஞ்சித்...நீங்க என்ன?இந்த நேரத்துல?"

"நிலா இல்லையா?"

"இந்த நேரத்துல அவளை ஏன் பார்க்கணும்?"

"பார்க்கணும்!"-ப்ரியா தயங்கியவாறு,

"உள்ளே தான் இருக்கா!"-ரஞ்சித் நேராக அவள் அறைக்குள் பிரவேசித்தான்.

யாரும்,வர மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அவள் அறை கதவு தாழ் போடாமல் இருந்தது.

திடீரென,எந்த அறிவிப்பும் இன்றி,தன் அறைக்கும் பிரவேசித்தவனை கண்கள் விரிய பார்த்தாள்.

ரஞ்சித் அவளைப் பார்த்த போது,அவள் கண்களில் இருந்து சிந்திய கண்ணீர்த்துளியானது, அவனுக்கு நிலையை உணர்த்தியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.