(Reading time: 16 - 31 minutes)

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது அவள் சொற்கள்.

"உங்களுக்கு ரஞ்சித்திற்கும் கூட சம்பந்தமில்லை.

நான் நிலாக்கிட்ட சொல்ல சொல்லி தான் உங்ககிட்ட விஷயத்தை சொன்னேன்!"-பதிலுரைத்தான் கார்த்திக்.

"கார்த்திக்...அவருக்கு???"-பேச்சிழந்தாள் வெண்ணிலா.

"டாக்டர்...24 மணி நேரம் கழித்து தான் எதுவும் சொல்ல முடியும்னு சொல்லிட்டார்!"

"நான் ரஞ்சித்தைப் பார்க்கணும்!"-கண்களில் கண்ணீர் தவித்தது அவளுக்கு.

கார்த்திக் அவளுக்கு வழி அளித்தான்.

உள்ளே...

தலையில் பயங்கர காயம் அவனுக்கு...

உயிர் ஊசாலடி கொண்டிருக்கிறது என்பதை

இதய துடிப்பை கணக்கிடும் திரை காட்டிக் கொடுத்தது.

கண்கள் மூடியப்படி படுத்து இருந்தான் ரஞ்சித்.

மனிதனுக்கு சோதனை வருவது இயல்பே!!!!

அது தனித்தனியாக வருமாயின்,அதனை எதிர்த்து போரிட,மனிதனைப் போல சிறந்த போராளி எவனும் இல்லை.

ஆனால்,அவை கூட்டாக தாக்குமானால்,அவனைப் போல் சிறந்த கோழை எவனும் இல்லை.

உடல் நடுங்கியது வெண்ணிலாவிற்கு!!!!

மனதளவில் அவனை என்றோ கணவனாக ஏற்றவள் அல்லவா அவள்???

இன்று...அவன்,உயிருக்கு ஊசலாடி             கொண்டிருக்கிறான்.

"ரஞ்சித்!"-அவனருகில் சென்றாள்.

கண்களில் கண்ணீர் கொப்பளித்தது.

"என்னை மன்னிச்சிடு ரஞ்சித்!!!

எல்லா தப்புக்கும் நான் தான் காரணம்!"-பெண்களுக்கு என்று தனி இயல்பு ஒன்று உண்டு.

தன் அன்பை        வென்றவர்களுக்காக நடந்த தவறுகளில் அவள் பகடையாய் இருந்தாலும், பழியை தன் மீது சுமத்திக் கொள்வாள்.

"நான் அப்படி உன்கிட்ட பேசி இருக்க கூடாது!

எனக்கு நீ என்றால்,ரொம்ப பிடிக்கும்டா!

வாழ்க்கை முழுசும் உனக்காக,உன் கூடவே வாழணும்னு      ஆசைப்பட்டேன்.

ஆனா,அதை வேணடாம்னு

தூக்கி எறிந்தேன்.

ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் ரஞ்சு.

கண்ணைத் திறந்துப் பாரு!!!!

உன் அம்மூ வந்திருக்கேன்.

கண்ணைத் திறந்துப் பாரு!!!

என்னை விட்டுட்டு போயிடாதே ரஞ்சு!"-கல் மனமும் கரைந்து விடும் அவள் அழுகைக்கு!!!!

அவன் மனம் கரைய மறுத்தது.

"எழுந்திரு ரஞ்சித்!"-அவள் கண்ணீர் வெளியே நின்று எட்டிப் பார்த்தப்படி நின்றிருந்த கார்த்திக்கின் கண்களில் நீரை வரவழைத்தது.

அவன் ப்ரியாவிடம்,

"ஏங்க...நிலாவை கூட்டிட்டு வந்துடுங்க!"என்றான்.

அவள்,கற்சிலைப் போல அமர்ந்திருந்தாள்.

"நடந்த பிரச்சனைக்கு எல்லாத்துக்கு அவ தான் காரணமே!"-சஞ்சனா.

"என்ன?"-அவள், நடந்தவற்றை கார்த்திக்கிடம் கூறினாள்.

அவ்வளவு தான்...

கோபம் தலைக்கேறியது அவனுக்கு!!!

"ச்சீ...நீங்களும் பொண்ணுங்களா??"-என்று கத்தி விட்டான்.

மருத்துவமனையே திரும்பி பார்த்தது அவர்களை!!!

"என் தம்பி,நிலாவை தான் காதலித்தான்.

அவளை தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான்.

நடுவுல,வந்தது நீ!!!

உனக்காக,அவ தன் காதலையே மறைத்தாள்.

ஆனா,நீ????"

"கார்த்திக் வரம்பு மீறி போறீங்க!"

"ஏ...நிறுத்துடி!!!சொந்த அக்காவா நினைத்து,

உங்களுக்காக அவ வாழ்ந்தா!நீங்க மனுஷியாக கூட மதிக்க மாட்றீங்க??இதுல,தியாகம் பண்ணிட்டா மாதிரி பேச்சு வேற!!!நடந்த தப்புக்கு அவனை அடிக்கணும்.

போயும் போயும் உங்களை நம்புனாங்க பாரு! வெளியே போங்க...!"

"கார்த்திக்!"

"போங்க!"-அவனது மிரட்டலில்,அவர்கள் சென்றுவிட்டனர்.

மனித மனதின் விந்தைகள் பல...

அன்று...நம் மக்கள் அனைவரும் தனக்கென வாழா பிறர்குரியாளராக வாழ்ந்தனர்.காலச்சக்கரம் சுழல...

பிறருக்காக அல்லாது தனக்காக வாழ தேர்ந்தனர்.

அன்று பத்தில் ஒருவராக மாறிய நம் பொதுநல மக்கள்,பின்,நூற்றில் ஒருவர்,ஆயிரத்தில் ஒருவர்,லட்சத்தில் ஒருவர் என மாறி பின் கோடியில் ஒருவர் ஆகவும் இருக்கின்றனர்.

இனி,அனைத்து பிரஜைகளுக்கும் ஒருவர் கூட அல்ல என்ற நிலை வரும் என்றாலும் அதிசயிக்க இல்லை.

இதுப் போன்ற சில விஷயங்களினால் மனதும் கனக்க தான் செய்கிறது...

உங்களுக்கு????

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:821}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.