(Reading time: 32 - 64 minutes)

.'ப்படியெல்லாம் இல்லை விஷ்வா'. சின்ன புன்னகையுடன் அவன் முகம் நிமிர்த்தி சொன்னாள் இந்து  'நான் எப்பவும் உன் பக்கம்தான்' விஷ்வா. .ஆனா நியாயமா பார்த்தா அவன் மேலே பெரிசா தப்புன்னு ஒண்ணும் இல்லையே விஷ்வா.

'ஆமாம் என் மேலே தான் எல்லா தப்பும்'

உன் மேலேயும் தப்புன்னு சொல்ல முடியாது விஷ்வா. அவன் கல்யாணம் நின்னதுக்கு நிஜமா என்ன காரணம்ன்னு யாருக்குமே தெரியலை.  அது க்ளியர் ஆனாலே பாதி பிரச்சனை சால்வ் ஆயிடும்.' அவள் பார்வை அஸ்வினியை உரசி விஷ்வாவிடம் திரும்ப சுருக்கென்றது அஸ்வினிக்கு,

'அதே மாதிரி உங்க அப்பா போனப்போ நான் அங்கேயே தானே இருந்தேன். அவன் நீ வர வரைக்கும் காத்திருக்கணும்னுதான் முயற்சி பண்ணான். முடியலை விஷ்வா. யோசிச்சு பார்த்தா அது உனக்கே புரியும். ஆனா உனக்கு யோசிக்கத்தான் மனசில்லை. அவன் மேலே காரணமே இல்லாம கோபப்படுறே.' என்றாள் இந்து.

'ஆமாம் எனக்கு மனசில்லை. வலி, வேதனை, தனிமை எல்லாத்தையும் அனுபவிச்சு அனுபவிச்சு எனக்கு மனசே இல்லை போ'. அங்கிருந்து நகர்ந்தான் விஷ்வா.

ஹேய் விஷ்வா... அவன் பின்னாலேயே நடந்தாள் இந்து.

தனது அறைக்குள் நுழைந்தவனின் பின்னால் சென்று நின்றாள் அவள். 'ப்ளீஸ் விஷ்வா. கோபப்படாதே'

போடி.... என்றான் விஷ்வா.

'ப்ளீஸ் விஷ்வா.' என்றாள் இந்து. 'சரி இனிமே எங்க அண்ணனை பத்தி பேசலை விடு. ப்ளீஸ் விஷ்வா.' என்று கெஞ்சிய அவள் குரலிலும் பார்வையிலும் கொஞ்சம் கரைந்துதான் போனான் விஷ்வா.

சப்பாத்திக்கு மாவை பிசைந்து வைத்துவிட்டு கைகழுவிக்கொண்டிருந்த அஸ்வினியின் மனதில் அலையடித்துக்கொண்டிருந்தது.

நான்கு ஐந்து நாட்கள் கடந்திருந்தன. தை மாதம் பிறந்திருந்தது. பொங்கல் திருநாள் முடிந்திருந்தது. அபர்ணாவின் அண்ணன் அதற்குள் ஒரு வீடு பார்த்து குடியேறியிருந்தான். அபர்ணாவை ஹாஸ்டலை விட்டு அவனுடன் வந்து தங்குமாறு சொல்லிகொண்டிருந்தான் அவன்.

அன்றும் கல்லூரி விடுமுறை. வீட்டில் இருந்தான் பரத். இந்துவுக்கு விடுமுறை இல்லை என்பதால் அவள் வேலைக்கு சென்று விட்டிருந்தாள். காலையிலேயே வெளியில் கிளம்பி சென்று விட்டிருந்தார் தாத்தா.

நேரம்  மாலை 3.30  .மனம் அபர்ணாவை நோக்கி செல்ல ஒலித்தது அழைப்பு மணி. அவன் கதவை திறக்க அங்கே நின்றிருந்தாள் அபர்ணா.

கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு நின்றவன் புன்னகையுடன் அவளை கண்களால் அளந்தபடியே கேட்டான் 'இப்போதான் நினைச்சேன் இந்த பொண்ணு என்ன பண்ணிட்டிருக்கும் அப்படின்னு. அது எப்படி கண்ணம்மா நான் நினைச்சவுடனே வந்து நிக்கறே.'

உதடு சுழித்து பழிப்பு காட்டியபடியே உள்ளே வந்து சொன்னாள் அபர்ணா 'நான் ஒண்ணும் உங்களை பார்க்க வரலை. தாத்தாவை பார்த்து ரொம்ப நாள் ஆச்சா. அதுதான் அவரை பார்க்க வந்தேன். எங்கே அவர் தூங்கறாரா?

'அவர் வீட்டிலே இல்லை. வீட்டிலே யாருமே இல்லை..... கண் சிமிட்டினான் அவன்.

யாருமில்லையா???  அப்போ நான் கிளம்பறேன். என்றாள் அவள்

'அதெல்லாம் கிடையாது என்றபடியே அவள் அருகில் வந்தான் அவன். வீட்டிலே யாருமே இல்லை. நம்ம வீட்டிலே சமையல் செய்ற தியாகு அண்ணா கூட ஒரு வாரமா லீவு அதனாலே...

அதனாலே???

'இப்போ நாம ரெண்டு பேரும் உள்ளே போறமாம். போனவுடனே நீ அப்படியே சும்மா ஹாட்டா ...  என்றபடி குறுகுறு பார்வையுடன் தனது கைகளை அவளுக்கு மாலையாக்கினான்.

ஹாட்டா....? என்றவளின் கண்களில் லேசான திகைப்பு.

'ஹாட்டா ஒரு காபி போட்டு குடுடி' சிரித்தான் அவன். நானே காபி போட்டு குடிக்க போர் அடிக்குது.

காபியா? என்றாள் கண்களில் கொஞ்சம் நிம்மதி பரவ

'ஆமாம். நீ வேறென்ன நினைச்சே'? சிரிப்புடனே கேட்டான் அவன்.

அதெல்லாம் ஒண்ணும் நினைக்கலை அவள் நகர எத்தனிக்க, ஹேய்... நீ என்ன நினைச்சேன்னு சொல்லிட்டு போ... அவன் அவள் கை பற்றிய நொடியில் ஒலித்தது அவன் கைப்பேசி

ஏண்டா? நானே எப்பவாவது தான் ரொமான்ஸ் பண்றேன் அது கூட பொறுக்கலையாடா உங்களுக்கு?  என்றபடியே அவன் கைப்பேசியை பார்க்க 'அஸ்வினி' என்றது திரை.

இவள் எதுக்கு அழைக்கிறாள் என்ற யோசனையுடனே அவன் கைப்பேசியை பார்த்தபடி நிற்க அதன் திரையை பார்த்த அபர்ணா 'பேசுங்க' என்றாள்

ம்? என்றபடியே அவன் நிற்க, நான் பேசட்டுமா? என்றாள். அபர்ணா.

கைப்பேசியை அவளிடம் நீட்டிவிட்டிருந்தான் பரத்.

'ஹலோ' என்றாள் அபர்ணா.

அப்பூ டார்லிங்???

'ம்'. புன்னகைத்தாள் அபர்ணா.

'நீங்களும் அங்கேதான் இருக்கீங்களா? சூப்பர். நடத்துங்க. நடத்துங்க'

ஹேய்.... அதெல்லாம் ஒண்ணுமில்லை. நான் சும்மா தாத்தாவை பார்க்க வந்தேன். அவர் இங்கே இல்லை....

'அவர் இங்கே இருக்கார்' என்றாள் அஸ்வினி. நீங்க ரெண்டு பேரும் இப்போ உடனே கிளம்பி இங்கே விஷ்வா வீட்டுக்கு வரணும்.

அங்கேயா? என்ன விசேஷம்?

'சொல்றேன். நேர்லே வாங்க ரெண்டு பேரும். சொல்றேன். முக்கியமான விஷயம். கண்டிப்பா ரெண்டு பேரும் வரணும் அப்படின்னு எங்க அம்மா சொன்னங்க.. வெச்சிடறேன்.' துண்டித்தாள் அழைப்பை.

அங்கே எதுக்கு? என்றான் பரத்.

தெரியலை ஏதோ முக்கியமான விஷயமாம். உங்க அத்தை வரச்சொன்னாங்களாம் அவள் மெல்ல சொல்ல

அத்தை சொன்னாங்களா? என்று கேட்டவன் அடுத்த சில நிமிடங்களில் கிளம்பி விட்டிருந்தான்.

கொஞ்ச நேரத்தில் விஷ்வா வீட்டை அடைந்து உள்ளே நுழைந்த இருவரும் கண்கள் விரிய கொஞ்சம் திகைத்துத்தான் நின்றனர்.

அங்கே பூ, பழ தட்டுடன் அமர்ந்திருந்தனர் அபர்ணாவின் அப்பா, அண்ணன் அண்ணி மூவரும். அத்தையும் தாத்தாவும் சோபாவில் அமர்ந்திருக்க விஷ்வா அங்கே இல்லை. அலுவலகத்திற்கு சென்றிருந்தான் அவன்.

'வாங்க வாங்க கல்யாண பொண்ணு' என்றபடி புன்னகையுடன் அபர்ணாவின் கையை பிடித்துக்கொண்ட அஸ்வினி அருகில் நின்றிருந்த பரத்தின் பக்கம் திரும்பி மெல்ல சொன்னாள் 'வாங்க பரத்வாஜ் சார்'

'பரத்வாஜ் சார்' கல்லூரி காலத்திலிருந்து பரத்தை இப்படி அழைத்துதான் பழக்கம் அஸ்வினிக்கு.

ஒரு முறை அஸ்வினியின் மீது பதிந்து நகர்ந்த பரத்தின் கண்கள் அபர்ணாவின் அப்பாவை சென்று அடைய, புன்னகையுடன் அவர் அருகில் சென்று அவரை கைகுலுக்கி வரவேற்றான் 'வாங்க அங்கிள்'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.