(Reading time: 32 - 64 minutes)

நீங்க எங்க கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும் மிஸ்டர் விஷ்வா. உறுதியான குரலில் சொன்னான் பரத்..

'நீங்க வேற என்றான் விஷ்வா. மண்டபத்துக்கு வர முதல் ஆள் நான்தான் கவலைப்படாதீங்க மிஸ்டர் பரத். ஆல் தி பெஸ்ட். மிஸ்டர் பரத். கல்யாணத்திலே பார்க்கலாம். தேங்க் யூ.' என்று புன்னகையுடன் அழைப்பை துண்டித்தான் விஷ்வா.

அபர்ணாவிடம் கைப்பேசியை நீட்டிய படியே சொன்னான் விஷ்வா. 'சீம்ஸ் டு பீ எ நைஸ் கய்'

சிரித்தே விட்டிருந்தாள் அபர்ணா ' எங்கே இன்னொரு தடவை சொல்லு'

ஏன்? நான் நூறு தடவை கூட சொல்வேன்.' என்றான் விஷ்வா. பொண்டாட்டியோட friendshipபை புரிஞ்சுக்க தனி மெச்சூரிட்டி வேணும் அப்பூ. அந்த வகையிலே ஹி இஸ் ரியலி கிரேட்.

'நீ சொன்னாலும் சொல்லட்டியும் என் புருஷன் நல்லவர்தான்' அவள் புன்னகையுடன் சொல்ல

எப்படி? எப்படி? அவள் முகத்தில் ஓடிய வெட்கத்தையும், கண்ணில் மின்னிய காதலையும் ரசித்தப்படியே கேட்டான் விஷ்வா.

அது அப்படித்தான் போ.... அழகாக சிரித்தாள் அபர்ணா.

மலர்ந்து சிரித்தான் விஷ்வா. 'ஆல் தி பெஸ்ட்டா அப்பூ' நீ இப்படியே சிரிச்சிட்டே இருக்கணும். இருப்பே. மனம் நிறைந்து சொன்னான் விஷ்வா.

அன்று மாலை வீடு திரும்பி இருந்தாள் இந்துஜா., பரத்துக்கு திருமணம் முடிவானதை தாத்தா சொல்ல, கொஞ்சம் கொதித்து தான் போனாள் அவள்.

அடப்பாவிகளா... நான் இன்னும் அண்ணியை  ஒரு தடவை கூட கண்ணாலே பார்க்கலை அதுக்குள்ளே நிச்சயமே முடிஞ்சிடுச்சா? கல்யாணத்துக்காவது என்னை கூப்பிடுவீங்களா இல்லையா?

அய்யோ... இல்லைடா செல்லம் அவள் முகத்தை கையில் ஏந்திக்கொண்டான் பரத். நானே இதையெல்லாம் எதிர்பார்க்கலைடா. உனக்கு என்ன அண்ணியை பார்க்கணும் அவ்வளவுதானே. நாளைக்கு இன்ட்ரோ குடுக்கறேன் ஒகேயா?

'இந்த செல்லம் கொஞ்சலுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்லை. அலுத்துக்கொண்டாள் இந்து'. 'தங்கச்சி அண்ணனுக்கு தெரியாம லவ் பண்ணா அது உலக மகா  குத்தம். அண்ணன் கோபப்படுவார், பேசமாட்டார் ஓவரா சீன் போடுவார், ஆனா அவர் மட்டும் தங்கச்சிக்கு தெரியாம நிச்சயமே பண்ணிட்டு வந்திடுவார் இது எந்த ஊர் நியாயம்டா சாமி?' புலம்பிக்கொண்டே செல்லும் தங்கையை புன்னகையுடன் பார்த்தபடியே நின்றிருந்தான் பரத்.

தனது வீட்டுக்கு வந்து காபியை விஷ்வா சுவைத்துக்கொண்டிருந்த போது சொன்னார் மைதிலி 'நம்ம கண்ணனுக்கு கல்யாணம் முடிவாயிருக்குடா. வர ஒண்ணாம் தேதி கல்யாணம்'

'சந்தோஷம்' என்றான் விஷ்வா

எல்லா பிரச்சனையும்  கொஞ்சம் கொஞ்சமா சரியாயிட்டே வருதுடா. நீயும் கல்யாணத்துக்கு வாடா. எல்லாம் சரியாயிடும்.

ம்.ம். பார்க்கலாம்...

என்னடா பார்க்கலாம்... எத்தனை நாள் இப்படியே இருப்பீங்க ரெண்டு பேரும்?

அம்மா... ஒண்ணாம் தேதி என் friend அபர்ணா கல்யாணம். எனக்கு அது தான் முக்கியம். நான் அங்கே தான் இருப்பேன். சொல்லிட்டேன்.

மைதிலியின் புருவங்கள் உயர, அவர் இதழ்களில் புன்னகை, அந்த நேரத்தில் அங்கே வந்தாள் அஸ்வினி.

மைதிலி ஏதோ சொல்ல வாயெடுக்க அவரை கை அமர்த்தியபடியே 'சரிப்பா... சரி... நீ அபர்ணா கல்யாணத்துக்கே போ. இங்கே வர வேண்டாம். என்றாள் அஸ்வினி குறும்பு புன்னகையுடன்.

'நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அப்படிதான்'. என்றபடி அங்கிருந்து நகர்ந்தான் விஷ்வா.

இவன் ஏண்டி இப்படி இருக்கான்? மகளிடம் கேட்டார் அம்மா.

எங்கே போயிடுவான்? எல்லாம் நம்ம பேட்டைக்குதான் வரணும். அபர்ணாதான் பொண்ணுன்னு இன்னும் அவனுக்கு தெரியலை போலிருக்கு, நீயும்  சொல்லாதே. கல்யாணத்துக்கு வந்து தெரிஞ்சுக்கட்டும். அப்போ என்ன பண்றான்னு பார்க்கலாம் என்றாள் அஸ்வினி.

தனது அறைக்குள் சென்ற விஷ்வாவின் அடி மனதில் சின்னதாக, இனம் புரியாத ஒரு சந்தோஷம். 'கண்ணனுக்கு திருமணமா?' நடக்கட்டும். நான் செய்த தவறு நல்ல முறையில் சரி செய்யப்பட்டால் சரிதான். வருபவள் நல்லவளாக அவனை புரிந்துக்கொள்பவளாக வரட்டும்.' தனக்குள்ளே சொல்லிகொண்டான் விஷ்வா.

மறுநாள் காலை இந்துவையும் கூட்டிக்கொண்டு கல்லூரிக்கு வந்திருந்தான் பரத்.

அபர்ணா அவள் முன்னால் வந்து நிற்க, வியந்து, மகிழ்ந்து போனாள் இந்து.

'என்னாலே நம்பவே முடியலை'. அழகாக சிரித்தாள் இந்து. நீங்க எனக்கு அண்ணியா வர்றது  ரொம்ப சந்தோஷமா இருக்கு.

இரு. இரு. என்றான் பரத். உங்க ரெண்டு பேருக்கும் முன்னாடியே பழக்கமா? எப்படி?

மெல்ல சிரித்தாள் அபர்ணா... அது... அவள் சொல்லத்துவங்க

எனக்கும் எங்க அண்ணிக்கும் நடுவிலே ஆயிரம் இருக்கும். அதெல்லாம் உனக்கு எதுக்கு? உனக்கு கிளாஸ்க்கு டைம் ஆச்சு. கிளம்பு என்றாள் .

'ஆமாமாம் கிளம்புங்க' சேர்ந்துக்கொண்டாள் அபர்ணா.

'நீ எப்படியும் என்கிட்டேதான் வரணும் கண்ணு. உன்னை அப்போ பேசிக்கறேன் அபர்ணாவை பார்த்து சொல்லிவிட்டு, நகர்ந்தான் பரத்.

அவன் போகும் திசையையே புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அபர்ணா. அவன் சென்றவுடன் கேட்டாள் இந்து .' இதைப்பத்தி விஷ்வாவுக்கு தெரியுமா?"

இதுவரைக்கும் தெரியாது. சொன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு நிஜமா தெரியலை. என்றாள் அபர்ணா.

எனக்கும் தெரியலை. எங்க அண்ணன் பேரைக்கேட்டாலே டென்ஷன் ஆவான். நீங்க அவனை கல்யாணம் பண்ணிக்க போறீங்கன்னு தெரிஞ்சா.?????? .நான் வேணும்னா சொல்லிப்பார்க்கிறேன் என்றாள் இந்து.

'இல்லை. இல்லை. வேண்டாம். நானே டைம் பார்த்து சொல்லிக்கறேன்' என்றாள் அபர்ணா யோசித்தபடியே

அடுத்து வந்த நாட்களில் சுற்றி உள்ளவர்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டேதான் இருந்தாள் அபர்ணா. விஷ்வா, பரத்தில் துவங்கி அவளது அண்ணன் வரையில் எல்லாரும் அவளை திக்கு முக்காட செய்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் அவர்கள் நிச்சியம் முடிந்து பத்து நாட்கள் ஆன பிறகும் விஷ்வாவிடம்  பரத்தான் மாப்பிள்ளை என்று சொல்லும் தைரியம்  மட்டும்  வரவேயில்லை அபர்ணாவுக்கு.

இரண்டொரு முறை அவள் அப்பாவிடம் பேசினான் விஷ்வா. அவரும் இதைப்பற்றி அவனிடம் எதுவும் சொல்லவில்லை. பரத்தை பற்றிய பேச்சுக்கள் அங்கே வரவில்லை.

திருமணதிற்கு முதல் நாள்.

பெண் வீட்டினர் மண்டபத்திற்கு வந்து விட்டிருந்தனர்.

அபர்ணாவை கைப்பேசியில் அழைத்தான் விஷ்வா ' ஒரு வேலையிலே மாட்டிக்கிட்டேன்டா. டூ ஹவர்ஸ்லே வந்திடறேன். உங்க ஆளு வந்தாச்சா?

இல்லை விஷ்வா. நீ வேலையை முடிச்சிட்டு வா.

கால் மணி நேரத்துக்கு ஒரு முறை அழைத்துக்கொண்டே இருந்தான் விஷ்வா. வேலையில் மனம் நிலைக்கொள்ள வில்லை அவனுக்கு.' என்ன பண்றே அப்பூ? மாப்பிள்ளை வந்தாச்சா? வந்தவுடனே சொல்லு வந்திடுவேன்.'

இதயம் படபடத்துகொண்டே இருந்தது அவளுக்கு. உண்மையை எப்படி எதிர்க்கொள்ளப்போகிறான் விஷ்வா. என் மீது கோபப்படாதே விஷ்வா. தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள் அபர்ணா.

மதியத்துக்கு மேல் மண்டபத்திற்கு வந்து இறங்கினர் பரத் குடும்பத்தினர்.

அடுத்த அரை மணி நேரத்தில் மண்டபத்தின் வாசலில் வந்து நின்றான் விஷ்வா.

அந்த மண்டபத்தின் வாசலில் வந்து நின்ற நொடியில், பழைய நினைவுகள் அவனை கொஞ்சம் உரசத்தான் செய்தது.

தலையை குலுக்கிக்கொண்டு அபர்ணாவை அழைத்தான்.

'வந்திட்டேன்.எங்கே உங்காளு?

தனது அறையை விட்டு மெல்ல வெளியே வந்தாள் அபர்ணா.

வா விஷ்வா.

அதான் வந்திட்டேனே. முதல்லே உங்க ஆளை காட்டு. பெரிய கண்ணாமூச்சி விளையாட்டா இருக்கே. அவரை கண்ணிலேயே காட்ட மாட்டேங்கிற?

சின்ன புன்னகை எழுந்தது அவளிடத்தில் ''உனக்கு இப்போ மாப்பிளையை பார்க்கணும் அவ்வளவு தானே? வா அறிமுகப்படுத்தி வைக்கிறேன்' என்றபடி விஷ்வாவின் கையை பிடித்துக்கொண்டு நடந்தாள் அபர்ணா.

ஹேய்.... இரு. இரு . என் டிரஸ் நல்லா இருக்கா?

சிரித்து விட்டாள் அபர்ணா. 'எல்லாம் நல்லா தான் இருக்கு. வா'

மணமகன் அறை வாசலில் சென்று நின்றாள் அபர்ணா. விஷ்வா அருகில்  நிற்க, ஒரு முறை அவனை திரும்பி பார்த்து விட்டு அறைக்கதவை தட்டினாள் அபர்ணா.

கதவு திறக்கப்பட, விஷ்வா புன்னகையுடன் நிமிர, அவன் முன்னால் நின்றிருந்தான் பரத்.

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்!

Go to episode # 17

Go to episode # 19

{kunena_discuss:726}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.