(Reading time: 30 - 59 minutes)

தன் பின்னர், இந்திரன் மனைவியோடு தனிக்குடித்தனம் சென்றுவிட, வள்ளி தினமும் கல்லூரிக்கு செல்லும் முன் கஸ்தூரியையும் இந்திரனையும் பார்க்க வருவாள்… அதே போல் பாலாவும் சிவநாதனையும் உமையாளையும் பார்க்க செல்வாள் தினமும்…

கோவில், திருவிழா என்பதையே அந்த குடும்பம் அதோடு மறந்தும் போனது… அதன் பிறகு….

அவர்களை பிரிக்க எண்ணி பிரித்தும் விட்ட சந்தோசத்தில் சித்ராங்கியின் மனதும் அமைதியடைய அவள் எல்லையில்லாத ஆனந்தம் கொண்டாள்…

நடந்த நிகழ்வை வ்ருதுணனிடம் சொல்லி முடித்த போது, அவனுக்கு தன் மனைவியின் நிலைமையும், தன் தங்கையின் நிலைமையும் ஒரு சேர கண் முன்னே வந்து போனது…

“திரபா… இங்க பாரு… அழறதை நிறுத்து… இங்க பாரு… என்னைப் பாரு…” என்று அவன் சொல்ல…

அவன் குரலுக்கு கட்டுண்டு அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்…

அழுத அவளின் விழிகளை துடைத்தவன், “வள்ளி மேல உனக்குண்டான கோபம் நியாயமானது தான்… உன் பக்கம் இருந்து பார்க்கும்போது… சின்ன வயசில நம்மை எது பாதிக்குதோ அது நம்ம ஆழ் மனசுல ஆழமா பதிஞ்சிடும்… அது போல தான் வள்ளி மேல உனக்குண்டான கோபமும் ஆழமா பதிஞ்சிட்டு… ஒரு விஷயம் உனக்கு புரியலையா இல்ல உனக்கு தெரியலையான்னு எனக்கு தெரியலை திரபா…. உன் வீட்டில உன்னை யாரும் இரண்டாபட்சமா நினைக்கவே இல்ல… கோவிலில் அதுதான் சம்பரதாயம் எனும்போது அதை மாற்ற வேண்டாம்னு தான் அவங்க நினைச்சிருக்காங்கடா… அது கூட உனக்கு புரியவிடாம அந்த லேடி உன் மனசை கலைச்சிருக்காங்கடா..” எனவும் அவள் கோபத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்… அவனை விட்டு விலகியும் நின்றாள்…

“என் வலி உங்களுக்கு புரியாதுங்க… இரண்டாவது பொறந்து எவ்வளவு வேதனை அனுபவிச்சேன்னு நான் சொல்லியும் உங்களுக்குப் புரியலைன்னா அதுக்கும் மேல நான் என்ன சொல்லுறதுன்னு எனக்கு தெரியலை…” என்றாள் அவள் விரக்தியுடன்…

“எனக்குப் புரியுதுடா… உனக்குத்தான் புரியலை… புரிஞ்சிக்க முடியாம இப்படி குழந்தைத்தனமா இருக்குறியே திரபா… ஏண்டி?....” என்றவன் அவள் முகம்பற்ற, அவள் அமைதியாய் நின்றாள்…

“கோபம் வரும்போது மட்டும் என் திரபா… பாரதி…..யா மாறிடுறியே அப்படியே… ஹ்ம்ம்…” என்று அவன் புருவம் உயர்த்தி கேட்க… அவள் அவனை மேலும் முறைத்தாள்…

“இங்க வா…” என்று அவளை அழைத்துச் சென்றவன், அவளை கட்டிலில் அமர வைத்து, அவன் தரையில் முட்டி போட்டு நின்றான்…

“இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கும் குழந்தை பிறக்கும்… அப்போ, நீ குழந்தை மேல தான் பாசமா இருக்குற, என் மேல பாசமா இல்லைன்னு நான் உங்கிட்ட சண்டை போட்டா நீ என்ன செய்வ திரபா?...”

“ஆயிரம் தான் அது நம்ம குழந்தையா இருந்தாலும், நீங்க எனக்கு முதல் குழந்தை… அது என்னைவிட உங்களுக்கே நல்லா தெரியும்… அதனால நீங்க எங்கிட்ட சண்டை போட மாட்டீங்க… எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு…”

“ஓஹோ… ஹ்ம்ம்… நாளைக்கே நமக்கு இரண்டு குழந்தைங்க பிறந்து எனக்கு இரண்டாவது குழந்தை பிடிக்கும்னு சொன்னா, நீ என்ன செய்வ திரபா?...”

“இரண்டுமே நம்ம குழந்தைங்க தான விதுன்… இரண்டு பேருமே நமக்கு இரண்டு கண் மாதிரி தான… அதுல ஒரு கண்ணு தான் முக்கியம் இன்னொரு கண் முக்கியம் இல்லன்னு பெத்தவங்க நாம எப்படி சொல்ல முடியும்?... நம்மால அப்படி சொல்ல முடியுமா விதுன்… அவங்க நம்ம இரத்தம் இல்லையா?...”

“நீயும், வள்ளியும் கூட அப்படித்தானே திரபா… உமையாள் அத்தைக்கும், கஸ்தூரிக்கும்… இல்லையா???” என அவன் கேட்ட மாத்திரத்தில் அவள் சட்டென்று அவனை அதிர்ச்சியுடன் ஏறிட்டாள்…

“பிறக்காத குழந்தைங்களே நமக்கு கண் என்று நீ சொல்லுற… அப்போ பிறந்து ஆளாகி நிக்குற நீங்க இரண்டு பேரும் அவங்களுக்கு இரண்டு கண் தானே திரபா… அதுல என்ன ஒரு கண் பெரிசு… ஒருகண் சிறுசு???…” என அவன் கேட்க

அவளிடத்தில் பதில் இல்லை கொஞ்சமும்… அம்மாவிடம் நான் நடந்து கொண்டது தவறோ என அவளை எண்ண வைத்தது வ்ருதுணனின் பேச்சு…

“கொஞ்சம் யோசிச்சுப்பாரு, கஸ்தூரி அத்தை என்னைக்காவது உன்னை ஒதுக்கிருக்காங்களா?... இல்ல உமையாள் அத்தை உன்னை என்னைக்காவது தூக்கி கொண்டாடாம இருந்திருக்குறாங்களா?...” என்ற அவனின் கேள்விக்கு அவள் என்னவென்று பதில் சொல்லுவாள்?? இல்லை என்றா?...

எப்படி சொல்ல முடியும் அவளால் இல்லை என… கஸ்தூரி என்றுமே அவளை ஒதுக்கியதில்லையே…

வள்ளியை எப்படி அம்மா தூக்கி வைத்து பேசுவார்களோ அதே போல் உமா பெரியம்மா என்னைத் தூக்கி வைத்துத்தானே பேசுவார்கள்… உமா பெரியம்மா ஒருநாள் கூட வள்ளியைக்கொஞ்சியோ, தூக்கி வைத்து பேசியதையோ நான் பார்த்ததே இல்லையே… என்னைத்தானே அவர்கள் செல்லம் கொஞ்சியிருக்கிறார்கள்… என்னைத்தானே அவர்கள் மகள் மாதிரி என்ன மகளாய் நடத்துகிறார்கள் இப்போதுவரை… அம்மாவும் அவள் உசத்தி என்று சொன்னாலும், என்னை கொஞ்சாமல் இருந்ததில்லையே… என்னிடம் பாசம் காண்பிக்காமல் இருந்ததில்லையே… நான் தானே அவரிடமிருந்து விலகினேன்… அவர் விலகவில்லையே இப்போது வரை… எனில் என் மீது தான் தவறா?... நான் தான் அம்மாவை சரியாக புரிந்து கொள்ளவில்லையா?...

அவளின் மனதில் முதன் முறையாக கஸ்தூரி மேல் கொண்ட கோபம் மெல்ல மறைய ஆரம்பித்தது… தான் தவறு செய்துவிட்டோமோ அம்மாவின் விஷயத்தில் என்று அவளை எண்ண வைத்தது…

அதே நேரம், “வள்ளி… என்னம்மா? என்ன யோசனை?...” என்றார் துர்காதேவி..

“இல்ல அத்தை பாலா….” என்று இழுத்தவளிடம்,

“அவ எப்பவோ வ்ருதுணன் அறைக்குள் போயிட்டா… நீ தான் இன்னும் உன் ரூமுக்குள்ள போகலை…” என்றார்…

அவள் மௌனமாக இருக்கவும், “உங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும் வள்ளி… பேசலாமா?...” என்றார்…

“சொல்லுங்க அத்தை….”

“வேலன்… எவ்வளவு நல்லவனோ அதே மாதிரி, அவன் அவ்வளவு குழந்தைத்தனம் உள்ளவன் மா… அவன் எனக்கு இன்னும் குழந்தை தான் மா… மனசுல இருக்குறதை யார்கிட்டயும் சொல்லிக்கவே மாட்டான்மா… அவன் முகம் பார்த்து நான் கேட்டா எங்கிட்ட மட்டும் சொல்லுவான்… வலியோ, துக்கமோ, எதுவந்தாலும் வெளியே காட்டிக்க மாட்டான்மா… அவனை நீ தான் மா இனி நல்லா பார்த்துக்கணும்…”

“வளர்ந்தாலும் அவன் குழந்தை தான்மா… இப்போவர என் மடியில படுத்துப்பான், என் விரல் பிடிச்சு விளையாடுவான்… என் வேலனை சந்தோஷமா வச்சிக்கம்மா… அது உன் ஒருத்தியால மட்டும் தான் முடியும்னு நான் முழுசா நம்புறேன்மா… அவனை நல்லா பார்த்துப்ப தானேம்மா?...” என்று அவர் கேட்க.. அவள் தலைஅசைத்தாள் சட்டென்று…

“ரொம்ப சந்தோஷம் மா…” என்றவர், யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டு,

“அவன் மேல என்ன இவ்வளவு அக்கறைன்னு நீ கேட்கலாம் வள்ளி… எல்லாரும் தான் தன் பிள்ளையை நல்லா பார்த்துப்பாங்க… பாசமா இருப்பாங்க… இதுல என்ன பெரிய விஷயம் இருக்குன்னு நீ நினைச்சாலும் நினைக்கலாம்… மத்தவங்க பார்வைக்கும் அப்படி படலாம்… ஆனா, என் பையன் என்னை நல்லா பார்த்துப்பான்மா.. எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்??... ஆனா, என் வேலன் எனக்கு அந்த பாக்கியத்தை கொடுத்திருக்கான் வள்ளி… நிஜம்தான்… பெத்துகிட்டா தான் பிள்ளை மேல பாசம் வைக்கணும்னு ஒன்னும் இல்லையேம்மா…” என்றவரை சற்றே கேள்வியுடன் ஏறிட்டாள் வள்ளி…

“உனக்கு இந்த விஷயம் தெரியணும் வள்ளி… கண்டிப்பா நீ தெரிஞ்சுக்கணும்… வேலன் என் வயிற்றில் பிறக்காத பிள்ளை… நான் அவனை பத்து மாசம் இந்த வயிற்றில் சுமக்கவும் இல்லம்மா…”

என தேவி சொன்னதும் “என்ன???...” என்ற கேள்வியுடன் அப்படியே நின்றாள் வள்ளி…

ஹாய்… ஃப்ரெண்ட்ஸ்… எப்படி இருக்கு சர்பரைஸ்???...

பாலா-வள்ளி இரண்டு பேருக்கு இடையில் இருந்த பிரச்சினை இப்போ தெரிஞ்சிடுச்சா உங்க எல்லாருக்கும்….

ஹ்ம்ம்… யுவி அப்போ யாரோட பையன்?... யுவி அம்மா அப்பா யாரு?... ஹ்ம்ம்ம் யோசிச்சிட்டே இருங்க…

நான் மறுபடியும் உங்களை மீட் அடுத்தவாரம் மீட் பண்ணுறேன்… டாட்டா… 

வரம் தொடரும்…

Episode # 09

Episode # 11

{kunena_discuss:866}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.