தனது அறையில் அமர்ந்து மனதில் நிறைந்துவிட்டிருந்த மகிழ்ச்சியுடன், மஞ்சரியின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தான் மைவிழியன்…
அவனை ஏமாற்றாது அவனது அறைக்குள் மெல்ல அடியெடுத்து வைத்தாள் மஞ்சரி…
அவள் வந்ததும் சட்டென்று எழுந்து கொண்டவன், “மைனா…” என்றபடி அவளருகில் செல்ல… அவள் கை அமர்த்தி தடுத்தாள் அவனை…
“என்னாச்சு…???..” என்ற பாவனையில் அவன் முழிக்க…
அவள், அவனை நிமிர்ந்து நிதானமாக பார்த்தாள்…
“பெரியவங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்… அதும் இல்லாம நான் உங்களை காதலிச்சேன்… மத்தபடி உங்க மேல எனக்குள்ள கோபம் மாறலை… அப்படியே தான் இருக்கு…”
“ஹேய்… என்னடி சொல்லுற?... அதும் இப்போ?...”
“ஏன் நான் என்ன தெலுங்குல சொல்லுறேனா?... புரியாம போறதுக்கு?...”
“அடியே …. நான் அப்படி சொல்லலைடி…. உனக்கு நான் எப்படி சொல்லி புரிய வைக்குறது?...”
“புரியுறமாதிரி சொன்னா கண்டிப்பா புரியும் எனக்கும்….”
“ஹ்ம்ம்க்கும்… ஒன்னும் புரிஞ்ச மாதிரி தான் எனக்கு தெரியலையே…” என மனதிற்குள் நினைத்தவன்,
அவளிடம், “கொஞ்சம் உன்னை சுத்தி இந்த அறையை பாரு… நீயும் நானும் மட்டும் ஒரு அறையில்… அதுவும் கணவன் மனைவியா… உனக்கு நிஜமா சந்தோஷமா இல்லையாடி கொஞ்சம் கூட???..”
“ஏன் இல்லை… அதெல்லாம் கோடி அளவு கொட்டிதான் கிடக்கு…” என்றதும் அவன் முகம் மலர, அவளை நோக்கி இரண்டடி வேகமாய் எடுத்து வைக்க,
அவள் உடனே பின் சென்று, “ஆனா… என் கோபம் மாறலை… அது எப்போ போகுதோ அதுவரை நாம ஊருக்கு தான் கணவன் மனைவி… இந்த அறைக்குள்ள இல்ல…” என்றாள் பட்டென்று…
“அடிப்பாவி….” என்றவன் தலையில் கை வைத்து அமர,
அவனின் செயலைக்கண்டு புன்னகைத்தவள், “கஷ்டமாயிருக்கா… இருக்கட்டும்… எனக்கு அன்னைக்கு எப்படி வலிச்சது… அதோட இதை கம்பேர் பண்ணா இதெல்லாம் ஒன்னுமே இல்லை… இதுக்கே தலையில கைவைச்சு உட்கார்ந்தாச்சா?... இருக்கட்டும்… நல்லா வேணும் உங்களுக்கு… அனுபவிங்க…” என மனதினுள் சொல்லிக்கொண்டவள், அவனை பார்த்து சிரித்தவண்ணம் நின்றாள்…
“எந்திக்கிறீங்களா… நான் தூங்கணும்… எனக்கு தூக்கம் வருது….”
“நான் ஓரமா தானடி இருக்கேன்… அதான் கட்டில் பெரிசாதான இருக்கு… தூங்க வேண்டியது தான இந்தப்பக்கம் படுத்து…”
“ஆஹா… ஆச தான்… நான் மட்டும் தான் கட்டிலில் படுப்பேன்… உங்களுக்கு…” என்றவள்… சுற்றி முற்றி பார்த்தபோது…
“என்னடி என்னை தரையில படுக்க சொல்லப்போறியா?...” என்று அவன் பாவமாக கேட்க…
“சே… சே… அப்படி எல்லாம் கல் நெஞ்சம் உள்ளவ இல்ல நான்… இதோ இங்க இந்த சோஃபா இருக்கே… இதுல தூங்குங்க… படுத்து… நல்லா தூக்கம் வரும்… சரியா?... குட் நைட்… ஸ்வீட் ட்ரீம்ஸ்…” என்று அவனிடம் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு கட்டிலில் படுத்து கண் மூடினாள் அவள்…
அவளையேப் பார்த்திருந்தவன், பின் ஒரு பெருமூச்சுடன், “உனக்கு தேவைதாண்டா இது… இன்னைக்கு உனக்கு சிவராத்திரி தான்…” என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டவன்,
“ராட்சஸி… கொஞ்சமாச்சும் பாவம் பார்க்குறாளா?... அப்படி என்ன செஞ்சுட்டேன்னு கோபம் அதும் இந்த அளவு?...” என்று திட்ட…
அவன் மனமோ, “டேய்… ஏற்கனவே செஞ்சதுக்குத்தான் இப்படி அனுபவிக்குற… இதுல… இன்னும் திட்டி அது அவளுக்கு கேட்டு, வாழ்க்கை முழுக்க பிரம்மச்சரியா வாழ வழி பண்ணுற போல?...” என்று சொல்லவும்…
“அய்யய்யோ… நான் எதும் திட்டலைப்பா… நான் தூங்குறேன்…” என்றவன் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு சோஃபாவில் சரிந்தான்….
வள்ளியிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு, அவளின் முகத்தினை ஆராய்ந்தவர்,
“எந்த பொண்ணும் இதை ஏத்துக்க மாட்டாம்மா… எனக்கு நல்லாவே புரியுது… ஆனா, உங்கிட்ட மறைக்கவும் எனக்கு மனசில்லம்மா… நான் சொல்லலைன்னாலும் என் பையனே சொல்லியிருப்பான்… ஆனா, அப்படி சொல்லுற பட்சத்துல அவனை நீ வெறுத்துட்டா என்னால தாங்க முடியாதும்மா… அவன் பக்கம் இருக்குற நியாயத்தையும் நீ புரிஞ்சிக்காம போயிடக்கூடாதுன்னு தான் நானே உன்னிடம் எல்லாம் சொல்லுறேன்மா… எனக்கு நம்பிக்கை இருக்கு வள்ளி… நீ என் பையனை புரிஞ்சிப்ப… அவன் மனசுல த்வனி இருந்தது உண்மைதான்… ஆனா அதே அளவு உன்னையும் அவனால விலக முடியலை… அது தான் கடவுளோட அமைப்பா இருக்கும்போது அவனால தான் என்ன செய்ய முடியும்மா?... உனக்கு என் பையன் மேல எதும் கோபமா வள்ளி?...” என்று கேட்க… அவளிடத்தில் பதில் இல்லை…
“என் பையன் நல்லவன் தான்மா.. அந்த பொண்ணு த்வனி யாரு என்னன்னே எனக்கு தெரியலைம்மா… அவனுக்கும் கூட தெரியலை… இதுல அவன் அவ நினைவாவே இருந்து அவனை அழிச்சிக்குறதை பார்க்க எந்த தாய் தான்ம்மா சம்மதிப்பா?... என் பையன் வாழ்க்கை மட்டும் தான் எனக்கு தெரிஞ்சது… என் கண் முன்னாடி வந்துச்சும்மா… அவன் அவ யாரு என்னன்னு சொன்னா கூட என் பையனுக்கு அவன் விரும்பின வாழ்க்கையை நான் அமைச்சு கொடுத்திருப்பேன் வள்ளி… ஆனா, அவளை இவன் ஒரு தடவை மட்டும் தான் பார்த்தேன்னு வந்து சொன்னான்… அந்த ஒரு நாள், சந்திப்புல காதலில் விழுந்துட்டேன், இனி அவ தான் எனக்கு மனைவின்னு அடுத்தடுத்து அவளை பார்க்க முடியாதப்பவும் அவன் சொல்லுறப்போ ஒரு தாயா என் வேதனை யார்கிட்டம்மா நான் சொல்ல முடியும்?... அவன் பாரத்தை எங்கிட்ட இறக்கி வச்சிட்டான்… ஆனா, நான் மனசுக்குள்ள என் பையங்கிட்ட பொய் சொல்லி அவன் மனசை மாத்த முயற்சி பண்ணினேன்னு என் பையனுக்கு தெரிஞ்சா அவன் என்னை வெறுக்கக்கூட வாய்ப்பு இருக்கும்மா… ஆனா, அப்படி மட்டும் நடந்தா அடுத்த நிமிஷமே நான் உயிரோட இருக்க மாட்டேன் வள்ளி…” என்று சொல்லிமுடிக்கும் முன்னமே,
“என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அத்தை?... இதை அவர் கேட்டா அவர் மனசு கஷ்டப்படாதா?... உங்க பாசத்தை என்னால புரிஞ்சிக்க முடியுது அத்தை… அதே நேரம் அவர் மனசையும் என்னால உணர முடியுது… உங்க பையனுக்கு நிச்சயம் நான் மருந்தா இருப்பேன் அத்தை… கவலைப்படாதீங்க…” என்றாள் சட்டென்று…
“ரொம்ப சந்தோஷம்டா வள்ளி… எனக்கு இந்த வார்த்தை போதும்… என் பையன் வாழ்க்கை இனி நல்லா இருக்கும்… அவனை பொறுப்பான உன் கையில் ஒப்படைச்சிட்டேன்… இனி நான் நிம்மதியா இருப்பேன்…” என்றவர் அவளை யுவியின் அறை வாசல் வரை சென்று அனுப்பி வைத்தார்…
அவர் சென்றதும், ஒரு நிமிடம், அவரிடம் தான் பேசின வார்த்தைகளை நினைத்தவளுக்கு, கண்களில் தன்னை மீறி நீர் சேர, சட்டென்று அழுதுவிட்டாள்…
அவளின் மனது சொல்லும் சேதியை எப்படி விவரிக்க என்று புரியாமல் போனாள் அவள்…
சில நிமிட அழுகைக்குப் பின், கண்களைத் துடைத்துவிட்டு, யுவியின் அறைக்குள் நுழைந்தாள்…
ஹாய்… ஃப்ரெண்ட்ஸ்…
யாரு இந்த த்வனி???..
ஹ்ம்ம்… வள்ளிக்கு போட்டின்னு தோணுதா ???
இனி யுவி-வள்ளி வாழ்க்கை எப்படி இருக்கும்???
நான் அடுத்தவாரம் உங்களை மறுபடியும் மீட் பண்ணுறேன்.... டாட்டா...
வரம் தொடரும்…
{kunena_discuss:866}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.