(Reading time: 29 - 58 minutes)

கன்ற சமதளப்பரப்பிற்கு வந்து சேரும் வரையும் இது தொடர்ந்தது. சற்று தொலைவில் மானுடம் தொடா ஆற்று நீர் கற்பாறைகளை சுழித்துக் கொண்டு ஓடிக்கொண்டு இருந்தது. ஒரு உயர மதில் சுவர் போல் ஆற்றுக்குள் நீண்டிருந்த பாறையின் இப்புறம் பெண்களும் அப்புறம் ஆண்களும் குளிக்கலாம் என பேசிக் கொண்டனர்.

புனிதாவும் இவளும் குளித்து முடித்து கரை ஏறி இவர்கள் ஈர உடை காய்ந்து முடியும் வரையுமே ஒருவரும் இந்தப் பக்கம் வந்தபாடில்லை.

அனைவருக்கும் வீட்டிலிருந்து கொண்டு சென்றிருந்த உணவு பரிமாறப்பட, உணவுக்குப் பின் இவர்கள் நால்வரைத் தவிர மற்றவர்கள் சற்று விலகிச் சென்றுவிட்டனர்.

 அப்பாவும் ஆதிக்கும்  செஸ் விளையாடுவதாய் முடிவானது.  

அப்பா சொல்லிக் கொண்டு இருந்தார். “தயா இதுல தோத்து நான் பார்த்ததே இல்லை. சில நேரம் விளையாடுறப்ப நான் அவ காயினை எடுத்து ஒளிச்சுலாம் வச்சுருக்கேன்….அப்டியும் ஜெயிச்சுடுவா….” ரேயாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது தன் அப்பாவா அப்படி இருந்தார் என.

எப்பொழுது துவங்கியது என தெரியவில்லை ரேயா புனிதா இருவரும் அப்பாவிற்கு சப்போர்ட் செய்து ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்க ஆதிக் தனியாளாய் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை பரவி இருந்தது.

யார் இப்படி தனித்துவிடப் படும் போதும் காரியம் விளையாட்டாய் இருந்தால் கூட சிறிது எரிச்சல் வரும். ஆனால் அவன் முகத்தில் மகிழ்ச்சியை தவிர வேறு எதுவுமில்லை. ரேயா அதை அவ்வப்பொழுது கவனித்துக் கொண்டு இருந்தாள்.

விளையாட்டு முடியவும் அப்பா படுத்துவிட்டார். பின் புனிதாவும் இவளுமாய் பேசிக் கொண்டு இருந்தனர். ஆதிக் எங்கேயோ போய் சுற்றிவிட்டு வந்தான்.

“ஹேய் டீ சாப்டா நல்லா இருக்கும்….” என்றபடி திரும்பி வந்தான் அவன்.

வீட்டிலிருந்து அதற்கு தேவையான அனைத்தையும் கொண்டும் வந்திருந்தனர்.

சில காய்ந்த கம்பு, குச்சி சருகு என சேர்த்து அடுப்பு தாயார் செய்துவிட்டு புனிதாவை அதன் அருகில் இவர்களது உடைமைக்கு காவல் வைத்துவிட்டு “ நீ வா போய் தண்ணி கொண்டு வருவோம்” என்றபடி இவளை அழைத்துக் கொண்டு நடந்தான் ஆதிக்.

மௌனமாக அவன் பின் சென்றாள். என்ன சொல்லப் போகிறான்? என்று ஆராய்ந்து கொண்டிருந்தது மனது.

முன்பு ஆண்கள் குளித்த அந்த ஆற்றுப் பகுதிக்கு சென்றான். அவனை பின் தொடந்து சென்ற இவள் நீர் முகப்பை அடைந்ததும் நின்று கொண்டாள்.

“உள்ள வா…இப்டி ஓரத்துல தண்ணி எடுக்க வேண்டாம்…அங்க போகலாம்….”சற்று உள் தள்ளி இருந்த இரு உருண்டை பாறைகளை காண்பித்தான்.

“ஆழம் எதுவும் இல்ல….ஜஸ்ட் ஃபாலோ மீ….” அவன் கால் வைத்த இடங்களில் கால் வைத்து அவனை தண்ணீருக்குள்ளும் பின் தொடர்ந்தாள். அந்த பாறை அருகே செல்லும் போது இதற்கு மேல் அவளால் நீரோட்ட வேகத்தை தாங்க முடியாது என்று தோன்றியது. தள்ளாடியது நடை. அதிலிருந்த பாறைகளில் ஒன்றில் அவளை உட்காரச் சொன்னான். இப்பொழுது ரம்யமாக இருந்தது சூழல். கால்கள் குளிர் நீருக்குள். உடல் சாயும் மாலை சூரிய மென் வெப்பத்தில். அருகிலிருந்த பாறையில் அவன் அமர்ந்து கொண்டான்.

“சாரி ரேயு வீட்ல வச்சு சரியா பேச முடியலை…தப்பா எடுத்துக்காத”என்றவன் ஃப்ரெண்ட்ஸ் என்றபடி இவளிடம் கை நீட்டினான்.

இவளோ போடா….வெறும் ஃப்ரெண்ட்ஷிப் யாருக்கு வேணும் என மனதிற்குள் முனங்கிக் கொண்டாள். அவன் முகத்தையும் பார்க்கவில்லை.

“என்னை உனக்கு பிடிக்கலையா ரேயு…” அவன் குரலில் உண்மையான தவிப்பு இருந்தது. அவ்வளவுதான் பதறிப்போய் அவனை திரும்பிப் பார்த்தாள்.

இவள் முகபாவத்திலே அவனுக்கு இவளுக்கு எவ்வளவாய் அவனைப் பிடித்திருக்கிறது என புரிந்திருக்கும். அவன் கண்களில் மின்னியது குறும்பு. தன் முகத்தில் தோன்றிய வெட்கம் அவன் கண்களில் படாதிருக்க எதிர்புறமாக  திரும்பிக் கொண்டாள் ரேயா.

“ஷாலுக்கு அலையன்ஸ் பார்க்கெல்லாம் சொல்லிட்டு, என் கூட ஃப்ரெண்ட்ஷிப்புக்கு கூட வரமாட்டேன்னு சொன்னால் எப்டியாம்…?” அவன் குரலில் கிண்டல் இருந்தாலும் கூட அந்த கேள்வியின் பொருள் இவளுக்கு உணர்ச்சிகள் சம்பந்தப் பட்டதாயிற்றே!!

இவளது தந்தையின் மன நிலையும் இவளுக்கு புரிகிறது அவர் தன்னை சீர் செய்ய நினைக்கிறார் என்பதும் புரிகின்றது. என்ன இருந்தாலும் அவர் காயம் பட்ட மனதினுடையவர். அவர் தேர்வை நம்ப ஏனோ மனம் வர மறுக்கிறது. ஆனால் இவன் யார் மனதையும் எளிதாய் புரிந்து கொள்கிற வித்தை அறிந்தவன். ஷாலுவுக்கான தேர்வில் இவன் கரம் இருந்தால் நன்றாக இருக்கும் எனதான் தோன்றுகிறது.

கேலி வெட்கம் எல்லாம் மறந்து அவனை திரும்பிப் பார்க்கிறாள். அவனும் “ஷாலு மேரேஜ் என் பொறுப்பு….” என்றான் கேலி எதுவுமின்றி.

ஆனால் அதற்கெல்லாம் உண்மையில் இவர்கள் எப்படி தொடர்பில் இருக்கப் போகிறார்கள்? அதுவும் இவன் யு எஸ் வேறு சென்றுவிடுவானே…? எப்பொழுது கிளம்புவான் இவளை விட்டு? இனி எப்போழுது நிகழும் இவர்கள் சந்திப்பு?

அவனிடம் கேட்க தோன்றுகிறது ஒரு புறம். கேட்க கூட முடியாமல் மனம் கணக்கிறது மறுபுறம்.

“ரேயுமா நீ நேத்து உங்கப்பா பேசுறத கேட்டதானே? அப்பா ஒரு ஊண்டட் சைல்ட் மாதிரி…அவங்க செய்ததெல்லாம் சரின்னு சொல்ல முடியாது. ஆனா அவங்க ஃபியர் அண்ட் லாஸ்ல ரியாக்ட் செய்திருக்காங்கன்னு புரிஞ்சு நடந்துக்கோ…அண்ட் அவங்க தன்னை சரி செய்யவும் ட்ரை செய்றாங்க…இதை ஏன் சொல்றேன்னா அவங்க ஆக்டிவிட்டீஸ்னால நீ ஹர்ட் ஆக கூடாது…புரிஞ்சு நடந்துகிடனும்…” அவள் தன் தந்தையைப் பற்றி தான் நினைத்து வைத்திருப்பதை அவன் குரலில் கேட்க ஏதோ ஒருவகை ஆறுதல் மனதில்.

“எந்த நேரம் எந்த ஹெல்ப் வேணும்னாலும் யு கேன் கால் மி அப்” அப்படியெல்லாம் இவனை அழைத்துவிட முடியுமா என்ன? அப்பாவுக்கு தெரிந்தால்????? அதோடு அப்பாவுக்கு மறைத்து எதை செய்யும் பலமும் இவளுக்கு இல்லை.

“புனிதாட்ட சொன்னன்னா விஷயம் இமிடீயட்டா எனக்கு ரீச் ஆகிடும்…” அவனும் இவள் வழியில்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறான்.

“என்ன பதிலே காணோம்….?”

“இல்ல அங்க தெரியுதே அந்த ஆரஞ் கலர் ஃபிஷ் அது ரொம்ப க்யூட்டா இருக்குல்ல….” எனோ இந்த பேச்சை இதை தாண்டி தொடர மனம் வரவில்லை அவளுக்கு. அழுதுவிடுவாளோ என பயமாக இருக்கிறது. கேவலமாகிவிடாதா?

அவனும் இப்பொழுது இவள் காட்டிய மீனைத்தான் பார்த்தான்.

“ஹலோ மேடம் ஜீனியஸ் அது அரதவளை….ஃபிஷ் கிடையாது….இதுதான் வளர்ந்து தவளை ஆகும்…”

“வாட்….???” துள்ளி எழுந்து அந்த பாறை மேல் நின்று கொண்டாள் ரேயா. கரப்பான் பூச்சி பல்லியைக்கூட ஒருவகையில் சகித்துக் கொள்வாள் ரேயா. ஆனால் தவளை….ஐயோ….யக்…எவ்ளவு அருவருப்பு…

“சரி வா கிளம்பலாம்…..தவளைக்கு நீ இவ்ளவு மரியாதை கொடுப்பன்னு எனக்கு தெரியாது….” ஓடும் நீரில் குனிந்து பாத்திரத்தில் தண்ணீர் எடுத்தான்.

“சீஈயீயீயீயீயீயீயி………தவளை டீ…..இதைப் போய் யார் குடிப்பா?”

“ஹேய்….நமக்கு வர்ற தண்ணில்லாம் எங்க இருந்து வருது ? அதுவும் உங்க வீட்டுக்கு தண்ணி இந்த ஆத்துல இருந்துதான் வருது… இப்ப வாட்டர கொதிக்க வச்சதும் சுத்தமாயிடப் போகுது…மனுஷங்களால கான்டாக்ட் அன்ட் கன்டாமினேட் ஆகாத சுத்த தண்ணி இது…”

“அதெல்லாம் கிடையாது…இது தவளை டீ….எனக்கு வேண்டாம்பா….”

“ஆஹான்…இரு வர்றேன்…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.