(Reading time: 29 - 58 minutes)

ன்ன சரன்? இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?...பயங்கர சந்தோஷமா படு டென்ஷனா இருக்கிற மாதிரி இருக்குது?”

ம்…..இதல்லாம் கவனிக்க தெரியுது….உன் மனசுல என்ன இருக்குன்னு உனக்கு தெரியுமா?

“பார்த்தாலே தெரியுதா?”

“ஆமா….எதோ பொண்ணு பார்க்க போற மாதிரி….”

எனக்கு பொண்ணு பார்த்தா ஒன்னுமில்லையாமா….? சிரிச்சுகிட்டு சொல்றா?

“ம்….உன் ஹஸ்பன்டா வரப்போறவருக்கு பொண்ணு பேசப் போறோம்”

“வாட்…?” ஒரு கணம் புரியாமல் முழித்தவளுக்கு அடுத்த கணம் அரை குறையாய் எனினும் சரியாய் புரிந்தது.

“என்ன சரன்…? உண்மையிலேவா? சித்தப்பா சொன்னாங்களா…? என்னை யார் முன்னாடியாவது போய் நிறுதத்தான் கூட்டிட்டு போறீங்களா..? அப்பா அப்டி செய்ய மாட்டேங்களே…ஸ்டடிஸ் முடியுற முன்னால இப்டில்லாம் எதுவும் கொடும படுத்த மாட்டாங்களே..? என்னாச்சு..?ப்ளீஃஸ் சொல்லுங்களேன்….பயமா இருக்குது…” அழுதே விடுவாள் போல.

“ஹேய்….கூல் கூல்…ஏன் இவ்ளவு டென்ஷன்…?”

“பிறகு கல்யாணம்னா டென்ஷனாக மாட்டாங்களாமா? அதுவும் ஸ்டடீஸ் பாதியில் இருக்கிறப்ப?....’

“ஸ்டடீஸ் தான் ப்ராப்ளமா? வர்றவங்க படிக்க அப்ஜக்ட் செய்யாதவங்களா இருக்கலாமே ஷாலுமா…?”

“என்ன விளையாடுறீங்களா? முன்ன பின்ன தெரியாத எவனோ ஒருத்தன் கூட என் படிப்பு பத்தி, மத்தது பத்தி எல்லாம் டிஸ்கஸ் செய்து, டிசைட் செய்து….அதுக்கேத்தபடி என் லைஃபை லீட் செய்யனும்னு எனக்கு இப்ப என்ன அவசியம் வந்துச்சு…?” 

அவளை திரும்பிப் பார்த்தான் சரித்ரன். நல்ல கேள்வி அவனுக்குத்தான் அவளை பிரிந்திருக்க முடியவில்லை….அதற்காக அவளுக்குமாக இவன் ஏன் முடிவெடுத்தான்?

“உண்மையிலே எதாவது லூசு கோஷ்டி வீட்ல வெயிட் செய்துட்டு இருக்கா? அப்பா இப்டி செய்யவே மாட்டாங்க சரன்….இது யார் அரேஞ்ச்மென்ட்….? எப்டியும் அப்பா ஒத்துக்க மாட்டாங்களே? ஒருவேளை இப்போ எங்கெஜ்மென்ட் நெக்‌ஸ்ட் இயர் மேரேஜ்னு சொல்லுவாங்களோ? பயமா இருக்கேப்பா….…”

“ஹேய்…அப்டில்லாம் வீட்ல யாரும் வெயிட் செய்துட்டு இல்லை….”

தென் தேவை இல்லாத பேச்சு….இந்த டாபிக்கை விட்டுடலாம்…’

“ம்”

” இப்ப எங்கயும் வெளிய போறமா? என்ன விஷயம் சரன்?”

இதுவரை எங்கு அழைத்துச் சென்றாலும் ஒரு காரணம் சொல்லி இருப்பான். அந்த பெர்த் டே செலிப்ரேஷனை தவிர அனைத்தும் நட்பு என்ற அளவிலான காரணமாய் கூட இருக்காது. 

“காரணம் இருந்தா தான் என் கூட வருவியா ஷாலு…?” அழுத்தம் திருத்தமாய் கேட்டான் சரித்ரன்.

“அப்டின்னா?” அவளின் மொழியும் விழியும் மாறிவிட்டது அவனுக்கும் புரிகிறது.

“என் கூட வரனும்ங்கிற காரணத்துக்காக மட்டுமா நீ வர மாட்டியா?”

“சோ…அந்த லூசு கோஷ்டி வீட்ல வெய்ட் செய்யலை….இங்க கார்லயே இருக்குது…?” கோபத்தில் அவள் விழிகள் சிவந்து கொண்டு போனது.

“ஷாலு…”

“ஜஸ்ட் ஸ்டாப் த கார்….” அவள் கத்தவில்லை. ஆனால் கடின இரும்பின் இறுக்கம் அதில்

“ஷாலுமா…”

தன் மொபைலை எடுத்தாள். எண்ணை அழுத்தினாள். “அப்பா இங்க ஆரவ்வோட மாமா பையன் சரித்ரன்….” அவள் மொபைல் பறந்து போய் தூர விழுந்திருந்தது. தட்டிவிட்டிருந்தான் சரித்ரன்.

இவள் இவனைப் பற்றி அவள் தந்தையிடம் ஏடாகூடமாக எதையாவது சொல்லி வைக்க, நிரந்தரமாய் முறிந்து போவது எத்தனை சுமுக உறவுகளாய் இருக்கும்? உன்னை நம்பி என் பொண்ணை அனுப்பினேனடா ன்னு தன் தம்பியிடமே சண்டை போட்டு போய்விடுவாரே அவளது அப்பா?

அதோடு இவள் மனம் உணர்ந்து வரும்வேளை திருமணத்திற்கு வழி இன்றி அல்லவா போய்விடும்?

காரை நிறுத்தினான்.

“ஷாலு எதுக்கு இப்ப இவ்ளவு கோப்படுற? ஏன் இவ்ளவு அவசரம்? என்ன விஷயம்னு சொல்லு…? “  பேக்குடன் வேகாமாக கதவை திறந்து இறங்கியவள் காருக்குள் கிடந்த மொபைலை குனிந்து எடுத்தாள்.

“ஷாலு ப்ளீஸ் எதுனாலும் கார்ல ஏறு….வீட்டுக்கு போய் பேசுவோம்…” சாலையின் எதிர் திசையைப் பார்த்தாள்.

“ஓகே….வீட்டுக்கு போய் ட்ராப் செய்துட்டு போயிடுறேன்…பேச கூட மாட்டேன்…ப்ளீஸ் கார்ல ஏறு…”

தூரத்தில் வந்த ஆட்டோவிற்கு கை காட்டினாள்.

“ஷாலு திஸ் இஸ் டூ மச்…”

“எது….இவ்ளவு நாள் நீங்க நடிச்சீங்களே அதுதான் டூ மச்….நான் இப்பவும் உண்மையாதான் நடந்துகிறேன்…ஐ’ம் நாட் ஆக்டிங்” அவள் கண்ணில் நீரும் அதனோடு நீள ஆழம் காணமுடியாத பெரு வலியும், பெருத்த ஏமாற்றமும்….

அவள் கண்ணீரைக் கண்டவுடன் தடுத்து எதையும் சொல்லவும் தோன்றவில்லை அவனுக்கு.

வந்து நின்ற ஆட்டோவில் ஏறி சென்றேவிட்டாள் ஷாலு என்ற ஷாலோம் . ஷாலோம் என்றால் சமாதானம் என்று பொருள். ஆனால் அவனது சமாதானத்தை அடித்து நொறுக்கிவிட்டு போயிருந்தாள் அவள்.

ஆட்டோ பார்வையில் இருந்து மறையும் வரை அதையே பார்த்துக் கொண்டிருந்தான் சரித்ரன்.

ஒரு மணி நேரம் செல்லவும் அத்தைக்கு அழைத்தான். அவள் வந்து சேர்ந்துவிட்டாளா என அறிய.  அப்பொழுது மட்டுமல்ல அடுத்து சில மணி நேரம் தாண்டியும் சென்று சேரவே இல்லை அவள்.

அவளது மொபைலோ ஸ்விட்ச் ஆஃப் என்றது. அதை சிதற அடித்ததே இவன் தானே…

 அவள் எங்கே????

1990 ஆம் ஆண்டு

சொன்னதைப் போல் உடனடியாக மலர்விழியை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டான் வசீகரன். “நாங்க ஃபர்ஸ்ட் போய் செட்லாகிகிடுறோம் அப்புறமா நீங்க வாங்க” என சொல்லும் மாப்பிள்ளையின் மொழி மீறி மலர்விழியின் பெற்றோர்  தனிக் குடித்தனம் வைக்க நாங்கள் வருவோம் அதுதான் முறை என்று     எப்படி சொல்ல முடியும்?

வசீகரனுக்கு யாரும் எதையும் சொல்லி மலர்விழியை நோகடிக்க கூடாது என்பதே குறிக்கோளாக இருந்தது. தன்னோடு அழைத்து போய்விட்டான்.

அங்கு வீட்டிலும் அனைத்திற்கும் வேலை ஆட்கள். பகல் பொழுதிலும் இரண்டு முறையாவது வீட்டிற்கு வந்து அவளை பார்த்துவிட்டு போய்விடுவான்.

அவள் பொழுது போக்கிற்கென புத்தகங்கள் தொலை காட்சி, வி சி ஆர், கேசட்ஸ், மியூசிக் சிஸ்டம் என அனைத்தையும் கவனித்து செய்தான். மாலையானால் கண்டிப்பாக அவளை எங்காவது அழைத்துச் சென்றுவிடுவான்.

அவனை மறுக்க முடியாமலும் மனதை அடைத்துக் கொண்டு வரும் எதிர்காலம் குறித்த கேள்விகளில் இருந்து தப்பிக்க எண்ணியும் மலர்விழியும் அவனோடு வெளியே சென்று வந்தாள். ஆனால் மனவலிதான் குறைய மறுத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.